பொன்னாங்கண்ணிக் கீரை வகைகள், நன்மைகள், பயன்கள் அதில் அடங்கியுள்ள சத்துக்கள் மற்றும் பொன்னாங்கண்ணி கீரை தீமைகள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளன.
பொன்னாங்கண்ணிக் கீரை :
பொன்னாங்கண்ணிக் கீரை கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. பொன்னாங்கண்ணிக் கீரை தாவரத்தின் அறிவியல் பெயர் ‘ஆல்டர்னாந்தெரா செசிலிஸ்’ (Alternanthera Sessilis) ஆகும். இது ஆங்கிலத்தில் ட்வார்ப் காப்பர் லீவ்ஸ் (Dwarf Copper Leaves) என்று அழைக்கப்படுகிறது.
இதில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ நன்மைகள் நிறைந்ததுள்ள காரணங்களால் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் மட்டுமின்றி அதன் வேர், தண்டு, பூ, சாறு என அனைத்துமே பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
பொன்னாங்கண்ணிக் கீரையில் நாட்டுப் பொன்னாங்கண்ணி, சீமைப் பொன்னாங்கண்ணி இரண்டு வகைகள் உள்ளன. நாட்டுப் பொன்னாங்கண்ணி கீரைகள் பச்சை இலைகளுடனும் சீமை பொன்னாங்கண்ணி எனப்படும் இளஞ்சிவப்பு இலைகளுடனும் காணப்படும்.
இரண்டு வகைகளும் ஒரே அளவிலான நன்மைகளும், சத்துக்களும் கொண்டவை. பொன்னாங்கண்ணி கீரை பெரும்பாலும் இலைக் காய்கறியாக மட்டுமே உட்கொள்ளப்படுகிறது. மேலும் பொன்னாங்கண்ணி கீரையில் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
பொன்னாங்கண்ணிக் கீரை வகைகள் :
பொன்னாங்கண்ணி கீரை நிறத்தை பொறுத்து நாட்டு பொன்னாங்கண்ணி, சீமை பொன்னாங்கண்ணி என்று இரு வகைகளாக உள்ளன. நாட்டு பொன்னங்கண்ணி பச்சை நிரத்திலும், சீமை பொன்னாங்கண்ணி பச்சை நிரத்திலும் கனாப்க்டுகிறது. நாட்டு பொன்னாங்கண்ணி கீரை பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன. சீமை பொன்னங்கண்ணி பொதுவாக அழகுக்காக வளர்க்கப் படுகிறது.
பொன்னாங்கண்ணிக் கீரையில் உள்ள சத்துக்கள் :
பொன்னாங்கண்ணிக் கீரை நன்மைகள் :
மூலம் குணமாக :
மலச்சிக்கல், மூலம், ரத்தக் கசிவு உள்ளிட்ட உபாதைகளை பொன்னாங்கண்ணி கீரை குணப் படுத்துவதாக சொல்லப்படுகிறது.
கல்லீரல் பராமரிப்பு :
இந்திய மருத்துவத்தில் பொன்னாங்கண்ணி கீரை பித்த ஓட்டத்தைத் தூண்டும் செயல் ஊக்கியாக பயன் படுத்தப் படுகிறது.
ஆஸ்துமாவை குணமாக :
இரண்டு ஸ்பூன் பொன்னாங் கண்ணி கீரைச் சாற்றை ஒன்று அல்லது இரண்டு பூண்டுப் பற்களுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இடைவிடாத காய்ச்சல், தொடர் இருமல் மற்றும் ஆஸ்துமா குணமாகும்.
உடல் எடை அதிகரிக்க :
பொன்னாங்கண்ணி கீரையுடன் துவரம் பருப்பு மற்றும் நெய் சேர்த்து சமைத்து பொரியல் செய்தோ அல்லது சூப் போலசெய்தோ சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
ஆற்றல் அதிகரிக்க :
பொன்னாங்கண்ணி கீரை சாறெடுத்து பசும்பால் அல்லது ஆட்டு பாலில் கலந்து சாப்பிட்டு வர உடல் வலிமையும், சக்தியும் அதிகரிக்கும். தினமும் காலையில் ஒரு டீஸ்பூன் பொன்னாங்கண்ணி கீரைச் சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து சாப்பிட்டு வர உடலின் ஒட்டுமொத்த ஆற்றல் மட்டம் மேம்படும்.
உடல் சூடு குறைய :
பொன்னாங்கண்ணி கீரை சாற்றை உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்து சுமார் 15 நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு தலையை கழுவ வேண்டும். இம்முறையானது உடல் சூட்டை கனிசமாக குறைத்து கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் குறிப்பிட்ட சீரான இடைவெளியில் இவ்வாறு மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
பார்வை கோளாறு நீங்க :
பொன்னாங்கண்ணி கீரை பயன்கள் பலவற்றில் முக்கியமானது பார்வையை மேம்படுத்து ஆகும். மாலைக் கண் நோய் உள்ளவர்கள் பொன்னாங்கண்ணி பூவை தொடர்ந்து சாப்பிட்டு வர கண் பார்வையில் நல்ல முன்னேற்றம் தெரியும். உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து, கண் நரம்புகளை வலுவாக்கி, தசைகளை வலுப்படுத்தி, பார்வை சக்தியை மேம்படுத்தி, கண் நோய்க்கு சிறந்த மருந்தாகச் உதவுகிறது.
தூக்க மின்மையை போக்குகிறது :
பொன்னாங்கண்ணி கீரை மத்திய நரம்பு மண்டலத்தை சீராக்கி தூக்கமின்மையை போக்குகிறது. மேலும் நரம்பு சம்பந்தமான பல நோய்களை குணப்படுத்தி, ஞாபக சக்தியை மேம்படுத்தவும், கண் மற்றும் மூளைக்கு குளிர்ச்சியையும், தளர்வையும் தருகிறது.
மலட்டுத்தன்மை நீங்க :
பொண்ணாங்கண்ணி கீரையை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆண்களின் மலட்டுத் தன்மையை குணப்படுத்த முடியும் என்று தெரிய வந்துள்ளது. மேலும் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆற்றலைத் தருவதோடு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பராமரிக்கவும் உதவுகிறது.
புற்றுநோய் நோய் வாய்ப்பை குறைக்கிறது :
பொன்னாங்கண்ணி கீரை இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருளை நீக்கி புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் இது கிருமிகளை அழித்து காயங்களை ஆற்றும் ஆற்றல் கொண்டது.
சிறுநீர் எரிச்சல் குணமாக :
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் இரண்டு லிட்டர் எருமைப் பாலிலிருந்து மோர் எடுத்து பொன்னாங்கண்ணி வேர்களைக் கலந்து, அந்த மோரைக் குடித்துவர சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.