“முருங்கைக் கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள், அடங்கியுள்ள சத்துக்கள் மற்றும் முருங்கைக் கீரை தீமைகள்
முருங்கைக் கீரை
முருங்கை மரத்தின் அறிவியல் பெயர் மோரிங்கா ஓலிஃபெரா ஆகும். இது ஒரு இந்திய மூலிகை தாவர வகையாகும். இது பல ஆரோக்கிய நன்மைகளை பெரும்பாலும் பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகிறது.
பண்டைய மருத்துவ முறைகளில், இது நீரிழிவு, தோல் நோய்கள் மற்றும் தொற்று போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்பட்டது. முருங்கை கீரையில் உள்ள பல அரியப்படாத நன்மைகள் மற்றும் ஊட்ட சத்துக்கள் காரணமாக உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது.
முருங்கைக் கீரையில் உள்ள சத்துக்கள் :
முருங்கை கீரையில் வைட்டமின்கள் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி1 (தியாமின்), வைட்டமின் பி2 (ரைபோஃப்ளேவின்), வைட்டமின் பி3 (நியாசின்), வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் ஆகியவை நிறைந்துள்ளன. மெக்னீசியம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் ஆகிய தாதுக்களும் நிறைந்துள்ளன.
ஒரு கப் முருங்கை கீரையில் தோராயமாக 2 கிராம் புரதம் உள்ளது. மேலும் தினசரி தேவையாக பரிந்துரைக்கப் பட்டுள்ள அளவில் மெக்னீசியம் 8 சதவீதமும், வைட்டமின் பி6 19 சதவீதமும், இரும்பு சத்து 11 சதவீதமும், ரிபோஃப்ளேவின் 11 சதவீதமும் மற்றும் வைட்டமின் ஏ 9 சதவீதமும் உள்ளது..
முருங்கைக் கீரை நன்மைகள் :
முருங்கை கீரையில் உள்ள அபரி விதமான நன்மைகள் காரணமாக இந்திய உணவுகளில் பல வகைகளில் பயன்பாடுகின்றன. அவை சூப், பொரியல், அவியல், பவுடர் என பல வழிகளில் உண்ணப்படுகிறது. முருங்கை கீரை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி கீழே விவரிக்கப் பட்டுள்ளன.
இரத்த சர்க்கரையை குறைக்கிறது :
நாள் பட்ட உயர் இரத்த சர்க்கரை அளவுகள் நீரிழிவு நோயின் வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றன. நீரிழிவு நோய், இதய நோய் போன்ற உடல் உள் உறுப்புக்களை சேதப்படுத்துகிறது. இதைத் தவிர்க்க, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். முருங்கை கீரையில் ஐசோதியோ சயனேட்டுகள் உள்ளன. அவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்குவதில் உதவி செய்கிறது.
கொழுப்பைக் குறைக்கிறது :
ஓட்ஸ், ஆளிவிதை மற்றும் பாதாம் போன்று முருங்கை கீரையும் அதிக கொழுப்புக்கு எதிரான சிறந்த தீர்வாகும்.
கொலஸ்ட்ரால் இதய நோய் வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. முருங்கை கீரைகள் சாப்பிடுவது அதிக கொழுப்பு அளவுகளுக்கு எதிராக செயல்படுவதாக அறியப்படுகிறது.
கல்லீரல் பாதுகாப்பு :
முருங்கை கீரைகள் காசநோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு காசநோய் எதிர்ப்பு மருந்துளால் விளையும் பக்க விளைவுகளைக் குறைக்க உதவுகிறது. முருங்கை கீரைகள் கல்லீரல் செல்களை சீர் செய்வதை துரிதப்படுத்துகின்றன.
மேலும் இதிலுள்ள பாலிபினால்கள் கல்லீரலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. மேலும் கல்லீரலில் புரத அளவை அதிகரிக்கின்றன.
கல்லீரல் இரத்த நச்சு நீக்கம்,
கொழுப்பு வளர்சிதை மாற்றம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் போன்ற வேலைகளை செய்கிறது. மேலும் கல்லீரல் நொதிகள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே அது சரியாக செயல்பட முடியும். முருங்கை கீரைகள் கல்லீரல் நொதிகளை உறுதிப்படுத்துகின்றன.
சிறந்த நச்சு நீக்கி :
ஆர்சனிக் மாசுபாடு உலகில் பல பகுதிகளில் ஒரு பொதுவான பிரச்சனையாகும். ஆர்சனிக் பல உணவுப் பொருட்கள் மூலமாக குறிப்பாக அரிசி மூலம் உடலுக்குள் செல்கின்றன.
இது புற்றுநோய் மற்றும் இதய நோய்களுக்கு காரணமாக அமைய வாய்ப்பு உள்ளது. முருங்கை கீரைகள் ஆர்சனிக் நச்சுத்தன்மைக்கு எதிராக போராட உடலுக்கு சக்தி அளிக்கிறது.
வயிற்றுக்கு நல்லது :
முருங்கை கீரை மலச்சிக்கல், வயிற்று உப்புசம், வாயு, இரைப்பை அழற்சி மற்றும் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி போன்றவற்றால் அவதிப்படு பவர்களுக்கு சிறந்த உணவாக அமைகிறது.
முருங்கை கீரையில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை செரிமான கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக அமைகின்றன. மேலும் இதில் உள்ள அதிக அளவு பி வைட்டமின்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
எலும்புகளை பலப்படுத்து கிறது :
முருங்கை கீரை கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் சிறந்த மூலமாகும். இந்த இரண்டு தத்துக்களும் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமாகும். முருங்கை கீரை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், அவை மூட்டுவலியை எதிர்த்துப் போராட உதவுவதோடு, சேதமடைந்த எலும்புகளையும் குணப்படுத்த உதவுகிறது. மேலும் இது எலும்புகளை பலப்படுத்தி ஆஸ்டியோ போரோசிஸுக்கு எதிராக போராடுகிறது மற்றும் எலும்பு மற்றும் பற்களை வலுவாக வைத்திருக்கிறது.
சிறந்த கிருமி நாசினி :
முருங்கைக் கீரை நுண் கிருமிகள், பாக்டீரியா போன்ற தொற்றுகளை எதிர்த்து போராடுகிறது. அவை இரத்த உறையும் நேரத்தை குறைப்பத ன் மூலம் காயங்கள், சிறிய வெட்டுக்கள் மற்றும் தீக்காயங்களை விரைவாக குணப்படுத்த உதவுகின்றன.
உடல் எடை குறைய உதவுகிறது :
உடல் ஆற்றலை குறைக்காமல் உடல் எடை இழப்பை ஊக்கு விக்கின்றன. மேலும் இது உற்சாகமாகவும் ஊட்டமாகவும் உணர வைக்கிறது. அவை பசியை உணர்வை குறைத்து வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கொலஸ்ட் ராலையும் குறைக்கின்றன. இதன் மூலம் உடல் எடை குறைகிறது.
நரம்பு மண்டல ஆரோக்கியம் :
முருங்கைக் கீரையில் உள்ள அதிக அளவு
வைட்டமின் ஈ மற்றும்
வைட்டமின் சி நரம்பு சிதைவை எதிர்த்து மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் அல்லது தொடர் தலை வலியால் அவதிப்படு பவர்கள் முருங்கை இலைகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.
முருங்கை கீரை சாப்பிடுவது செரோடோனின், டோபமைன் மற்றும் நோராட்ரீனலின் போன்ற நரம்பியக் கடத்திகளின் உற்பத்தியை சீராக்குகின்றன. அவை நினைவாற்றல், மனநிலை மற்றும் தூண்டுதல்-பதில் ஆகியவற்றிற்கு முக்கியமானவை ஆகும்.
முருங்கைக் கீரை தீமைகள் :
முருங்கைக் கீரை பொதுவாக பெரும்பாலான வர்களுக்கு பாதுகாப்பானதாகவும் ஆரோக்கிய மானதாகவும் கருதப்பட்டாலும், கவனிக்க வேண்டிய சில சிறிய பக்க விளைவுகள் உள்ளன. அவை
கர்ப்பிணிப் பெண்களுக்கு முருங்கையின் வேர்கள், பட்டை மற்றும் சாறு ஆகியவை கருப்பைச் சுருக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உணவில் முருங்கை கீரை சேர்ப்பதற்கு முன்பு தங்கள் மருத்துவர் களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
இரத்தத்தை மெலிதாக்கும் மருந்து உட்கொள்பவர்கள் முருங்கை கீரை உணவில் சேர்ப்பதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும்.