கறிவேப்பிலை பயன்கள், நன்மைகள், பக்க விளைவுகள் கறிவேப்பிலை தீமைகள் மற்றும் கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது.
கருவேப்பிலை :
கறிவேப்பிலை என்பது கறிவேப்பிலை மரத்தின் இல்லையாகும்.கறிவேப்பிலை மரத்தின் அறிவியல் பெயர் முர்ராயா கோயனிகி (Murraya koenigii) ஆகும்.
இது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டதாகும். அதன் இலைகள் மருத்துவ மற்றும் சமையல் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப் படுகின்றன. அவை மிகவும் நறுமணமுள்ளவை மற்றும் தனித்துவமான சுவை கொண்டவை.
கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள் :
100 கிராம் கறிவேப்பிலையில் 108 கலோரிகள் உள்ளன. மேலும் கார்போஹைட்ரேட் 18.7 கிராம், நார்ச்சத்து 6.4 கிராம், புரதம் 6.1 கிராம், கொழுப்பு 1 கிராம் உள்ளது.
100 கிராம் கருவேப்பிலையில் கால்சியம் 830 மி.கி, பாஸ்பரஸ் – 57 மி.கி, இரும்பு 0.93.மி.கி, தாமிரம் – 0.1 மி.கி, மக்னீசியம் 44 மி.கி, துத்தநாகம் 0.2 மி.கி, மாங்கனீசு 0.15 மி.கி, குரோமியம் 0.006 மி.கி, உள்ளன.
மேலும் வைட்டமின்களான தியாமின் 0.080 மி.கி, கரோட்டின் 7560 μg, ரிபோஃப்ளேவின் 0.210 மி.கி, நியாசின் 2.3 மி.கி, வைட்டமின் சி 4 மி.கி, ஃபோலிக் அமிலம் 93 μg உள்ளது.
கறி வேப்பிலை நன்மைகள் :
கறி வேப்பிலை நீரிழிவு எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் ஹெபடோப்ரோடெக்டிவ் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளது.
கறிவேப்பிலை ஆயுர்வேத மருத்துவத்திலும், வீட்டு வைத்தியங்களிலும் பயன்படுத்தப் படுகிறது.
கறிவேப்பிலை நன்மைகள் பின்வருமாறு
அனேமியாவை போக்குகிறது :
கறிவேப்பிலை இரும்புச் சத்தின் சிறந்த மூலமாகும். மேலும் கருவேப்பிலை உட்கொள்வது இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நன்மை பயக்கிறது.
மேலும் கருவேப்பிலையில் உள்ள ஃபோலிக் அமிலம் இரும்பை உறிஞ்சுவதற்கு உடலுக்கு உதவுகிறது.
ஃபோலிக் அமிலம் குறைபாடு காரணமாக இரும்புச்சத்து சரியாக உறிஞ்சப்படாமல் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
இதயத்திற்கு நல்லது :
கறிவேப்பிலை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் எடை இழப்புக்கு உதவுகிறது.
இது இதயத்தில் இருந்து அதிகப் படியான அழுத்தத்தை நீக்குகிறது. கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
நீரிழிவுநோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது :
கறிவேப்பிலையின் குறிப்பிடத் தக்க நன்மைகளில் ஒன்று நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுவதாகும்.
கறிவேப்பிலையில் தாமிரம், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் உள்ளன. இது இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துவதில் நன்மை பயக்கும் சத்துக்களாகும்.
“ஊட்டச்சத்துக்கான தாவர உணவு” இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், கறிவேப்பிலை இன்சுலின் செயல்பாட்டை தூண்டுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்று தெரியவந்துள்ளது.
எனவே நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக தங்கள் வழக்கமான உணவில் கறிவேப்பிலையைச் சேர்ப்பது நல்லது.
அஜீரணத்திற்கு நல்லது :
ஆயுர்வேத மருத்துவத்தில், கறிவேப்பிலையில் லேசான மலமிளக்கி குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது உடலில் உள்ள பித்த அளவை சமன் செய்யும் என்று சொல்லப் படுகிறது.
கறிவேப்பிலைக்கு கார்மினேடிவ் தன்மை உள்ளது. அதாவது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி, மூல நோய், மலச்சிக்கல் போன்ற இரைப்பை குடல் பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது.
அஜீரணத்தைப் போக்க, சிறிது கறிவேப்பிலை மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
கறிவேப்பிலையை அரைத்து மோரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
மன அழுத்தத்தை நீக்குகிறது :
கறிவேப்பிலை எண்ணெய் மன அழுத்தத்தின் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.
மன அழுத்தம், மன நிலை கோளாறு மற்றும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. கறிவேப்பிலை மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
கறிவேப்பிலையில் உள்ள லினலூலை உள்ளிழுப்பது கவலை, மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வுக்கு உதவுகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
கண்களுக்கு நல்லது :
கறிவேப்பிலையில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ யில் கார்னியா மற்றும் கண் மேற்பரப்பைப் பாதுகாக்கும் கரோட்டினாய்டுகள் உள்ளன.இவை கண் ஆரோக்கியத்திற்கு அவசியம் ஆகும்.
மேலும் விழித்திரையை ஆரோக்கியமாக வைத்து, பார்வை இழப்பைத் தடுக்கிறது.
முடி ஆரோக்கியம் :
கறிவேப்பிலை முடி வளர தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொண்டுள்ளது.
கறிவேப்பிலையை தவறாமல் உட்கொள்வது முடியை பலப்படுத்துகிறது, பொடுகை குணப்படுத்துகிறது மற்றும் இளநரையைத் தடுக்கிறது.
காயங்கள் ஆறுவதை ஊக்குவிக்கிறது :
கறிவேப்பிலை தோல் பராமரிப்புக்கும் உதவுகிறது. கறிவேப்பிலை பேஸ்ட் அல்லது சாறு தீக்காயங்கள், வெட்டுக்கள், காயங்கள், தோல் எரிச்சல், தடிப்புகள் மற்றும் பூச்சி கடி ஆகியவற்றிற்கு மெரபூச்சாக பயன்படுத்தப்படுகிறது. இது காயங்களை சுத்தப்படுத்தவும், விரைவாக ஆற வைக்கவும் உதவுகிறது.
கறிவேப்பிலையில் உள்ள கார்பசோல் ஆல்கலாய்டு என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணப்படுத்தும் செயல்முறையை துரிதப்படுத்த உதவுகிறது.
ஆல்கலாய்டுகள் காயங்களில் உள்ள இடைவெளியை குறைத்து பாதிக்கப்பட்ட பகுதியில் முடி வளர்ச்சியை மீட்டெடுக்க உதவுகின்றன.
மேலும் கறிவேப்பிலை தோல் அழற்சி, மற்றும் தீக்காயங்கள் ஆகியவற்றை குணப்படுத்தும் பண்பை கொண்டுள்ளது.
கறி வேப்பிலை தீமைகள் :
கறிவேப்பிலை பொதுவாக பாதுகாப்பானது என்றாலும் அதிக அளவில் உட்கொள்வது வயிற்றில் அமிலத்தன்மை போன்ற சில பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
இது வயிற்றில் எரியும் உணர்வு, வயிற்று வலி மற்றும் குமட்டல் ஆகியவற்றை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
கர்ப்பிணிகள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் கறிவேப்பிலை அதிக அளவு பயன்படுத்துவதற்கு முன், பயிற்சி பெற்ற மருத்துவப் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும்.