எள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள், பக்க விளைவுகள், அடங்கியுள்ள சத்துக்கள் மற்றும் எள் தீமைகள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது.
எள் (Sesame) :
எள்ளு ஒரு பயறு வகையாகும். அதன் அறிவியல் பெயர் சேஷமும் இந்திகம் (Sesamum indicum) ஆகும். இது ஆங்கிலத்தில் சீசாம் (Sesame) என்று அழைக்கப்படுகிறது.
எள்ளில் உள்ள சத்துக்கள் :
100 கிராம் எள்ளில் தோராயமாக 563 கலோரிகள் உள்ளது. மேலும் 25 கிராம் மாவுச் சத்து, 16.8 கிராம் நார்ச் சத்து, 43.3 கிராம் கொழுப்புச் சத்து, 18.3 கிராம் புரதச் சத்து உள்ளது.
100 கிராம் எள்ளில் இரும்புச் சத்து 9.3 மில்லி கிராம், காப்பர் 2.29 மில்லி கிராம், துத்த நாகம் 12.20 மில்லி கிராம், பாஸ்பரஸ் 570 மில்லி கிராம், கால்சியம் 1450 மில்லி கிராம் உள்ளது.
எள் நன்மைகள் :
எள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
எள்ளில் அத்தியாவசிய தாதுச் சத்துக்களான உடலுக்கு தேவையான அளவு தாமிரம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. முடக்கு வாதம் உள்ளவர்களுக்கு தாமிரம் நன்மை பயக்கிறது சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கு மெக்னீசியம் சத்து நல்லது.
தைராய்டு ஆரோக்கியத்திற்கு நல்லது :
நமது தைராய்டு சுரப்பி உடலில் உள்ள மற்ற உறுப்புகளை விட அதிக அளவில் செலினியம் என்ற தாதைக் கொண்டுள்ளது.
மேலும் செலினியம் தைராய்டு ஹார் மோன்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே எள் தைராய்டை எதிர்த்துப் போராடுவதற்கான சரியான உணவுத் தேர்வாக அமைகிறது.
மேலும் இந்த விதைகளில் இரும்பு, தாமிரம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை தைராய்டு ஹார்மோன்களை உருவாக்கி தைராய்டு ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது :
எள் தானியங்களில் அத்தியா விஷய கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந் திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
உதாரணமாக, துத்தநாகத்தை உட்கொள்வது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் டி-லிம்போசைட்டுகளை உருவாக்க மற்றும் செயல்படுத்த உதவுகிறது.
மன நல ஆரோக்கியம் :
எள் எண்ணெயில் டைரோசின் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது செரோடோனின் செயல்பாட்டை கட்டுப் படுத்துகிறது.
இது மனநிலையை பாதிக்கும் ஒரு நரம்பியக்கடத்தி ஆகும். செரோடோனின் சமநிலையின்மை மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
மேலும் நல்லெண்ணெய் செரோடோனின் உற்பத்திக்கு உதவுகிறது. பதட்டத்தை குறைத்து மற்றும் நேர்மறை உணர்வுகளை மேம்படுத்த உதவுகிறது.
செரிமானத்தை மேம்படுத் துகிறது :
மலச்சிக்கல் என்பது பலருக்கு ஏற்படும் பொதுவான செரிமான பிரச்சனை ஆகும்.
செரிமானப் பாதையை பராமரிக்க எள் உதவுகிறது. அதில் அதிக நார்ச்சத்து மற்றும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் இது மலச்சிக்கலை குணப்படுத்த உதவுகிறது.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் :
எள் எண்ணெயில் எள் மற்றும் செசமினோல் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் செல் சேதத்தை குறைக்கின்றன.
மேலும், எள் எண்ணெய்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. அவை மூட்டு வீக்கம், பல்வலி மற்றும் கீறல்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன.
சிறந்த ஆற்றல் மூலமாகும் :
பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ள, எள் விதைகள் சிறந்த ஆற்றல் மூலமாகும்.
ஏனெனில் அவற்றில் அதிக ஒமேகா 3 கொழுப்புகள் மற்றும் அதிக அளவு நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன, இவை அனைத்தும் சேர்ந்து ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது.
எலும்பு ஆரோக்கியம் :
எள்ளில் மனித உடலுக்குத் தேவையான கால்சியம் கணிசமான அளவு உள்ளது.
மேலும் அதில் உள்ள துத்தநாகம் எலும்பு அமைப்பை வலுப்படுத்துவதில் ஒரு முக்கியமான கனிமமாக செயல்படுகிறது.
பல ஆய்வுகளின்படி, எள் விதைகளை உணவில் சேர்த்து கொள்வது பிற்காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது :
எள் அல்லது அதன் மூலம் தயாரிக்கப் படும் நல்லெண்ணெயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும் இதில் உள்ள லிக்னன் எனும் தாவர பொருள் இரத்த சர்க்கரை அளவை பராமரிப்பதிலும் கட்டுப் படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
விந்தணு ஆரோக்கியம் :
ஆண்களுக்கு விந்தணு தரத்தை மேம்படுத்தி ஆண் கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
2013 ஆம் ஆண்டு மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், 27 முதல் 40 வயதுக்குட்பட்ட 25 மலட்டுத் தன்மையுள்ள ஆண்களுக்கு மூன்று மாதங்களுக்கு எள் விதைகள் வழங்கப்பட்டது.
ஆராய்ச்சி முடிவில் விந்து எண்ணிக்கை மற்றும் இயக்கத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.
வளர்ச்சிதை மாற்றம் :
வளர்சிதை மாற்ற செயல்பாட்டை அதிகரிக்கலாம் எள் விதைகளில் உள்ள புரதங்கள் மனித உடலுக்குப் பயன்படும் புரதங்களாக மீண்டும் இணைக்கப்படுகின்றன.
இது உடலின் ஒட்டுமொத்த வலிமை, ஆரோக்கியமான செல்லுலார் வளர்ச்சி, இயக்கம், ஆற்றல் நிலைகள் மற்றும் வளர்சிதை மாற்ற செயல்பாடு ஆகியவற்றைச் அதிகரிக்கிறது.
தோல் பராமரிப்பு :
எள் விதைகளில் உள்ள துத்தநாகம் கொலாஜன் உற்பதியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கூந்தல் ஆரோக்கியம் :
எள் விதைகளில் தாவர பாலிபினால்கள் நிறைந்துள்ளன. இது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
நல்லெண்ணெய் வைத்து உச்சந் தலையில் மசாஜ் செய்து வர முடி ஊட்டம் பெரும்.