பப்பாளிப் பழம் நன்மைகள், தீமைகள், சத்துக்கள்

0

பப்பாளிப் பழம் நன்மைகள், தீமைகள், பக்க விளைவுகள் மற்றும் அதில் அடங்கியுள்ள சத்துக்கள், வரலாறு, பிற பெயர்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

பப்பாளிப் பழம் :

பப்பாளிப் பழம் வெப்பமண்டல பகுதிகளில் வளரும் ஒருவகை பழமாகும். அவற்றிம் இனிமையான சுவை மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளுக்காக விரும்பி உண்ணப்படுகிறது.

பப்பாளிப் பழம் முன்பு அரிதாக விளையும் பழமாக இருந்தது. ஆனால் இப்போது ஆண்டின் பெரும்பாலான நேரங்களில் கிடைக்கிறது. 

பப்பாளி பழத்தின் பூர்வீகம் மெக்ஸிக்கோ ஆகும். உலகிலேயே அதிக அளவு பப்பாளி பழம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா ஆகும். இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 5.5 மில்லியன் டன் பப்பாளி உற்பத்தி செய்யப் படுகிறது.

பப்பாளிப் பழம் வரலாறு :

பப்பாளி பழம் முதன் முதலில் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டொமினிகன் குடியரசு மற்றும் பனாமாவில் தோன்றியது. பிறகு 1550 ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஸ்பெயினியர்கள் மூலம் கொண்டு வரப்பட்டது.

பப்பாளிப் பழத்தில் உள்ள சத்துக்கள் :

பப்பாளி பழம் சத்துக்கள் அட்டவணை 1
100 கிராம் பப்பாளி பழத்தில் 43 கலோரிகள் உள்ளன. மேலும் 0.5 கிராம் புரதம் 11 கிராம் மாவு சத்து, 7.8 கிராம் சர்க்கரை மற்றும் 1.7 கிராம் நார் சத்து உள்ளது.

வைட்டமின்கள் :

பப்பாளி பழம் சத்துக்கள் அட்டவணை 2
100 கிராம் பப்பாளி பழத்தில்  47  மைக்ரோ கிராம் வைட்டமின் ஏ, 60.9 மில்லி கிராம் வைட்டமின் சி மற்றும் 0.30 மில்லி கிராம் வைட்டமின் இ, மற்றும் 2.6 மைக்ரோ கிராம் வைட்டமின் கே உள்ளது.

தாதுச் சத்துக்கள் :

பப்பாளி பழம் சத்துக்கள் அட்டவணை 3
100 கிராம் பப்பாளி பழத்தில் 0.25 மில்லி கிராம் இரும்பு சத்து, 20.00 மில்லி கிராம் கால்சியம் சத்து மற்றும் 182 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது.

பப்பாளிப் பழம் நன்மைகள் :

பப்பாளி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் கீழே விவரிக்கப் பட்டுள்ளன.

கண் ஆரோக்கியம் :

பப்பாளியில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

வைட்டமின் ஏ கார்னியாவைப் பாதுகாக்கிறது. அதே நேரத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் விழித்திரையின் சிதைவைக் குறைக்கிறது.

நீரிழிவு நோய் :

பொதுவாக அதிக நார்ச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளும் வகை 1 நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த குளுக்கோஸ் அளவு குறைவாக இருப்பதாகவும், வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை, லிப்பிட் மற்றும் இன்சுலின் அளவு மேம்படுவதாகவும்  ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு சிறிய பப்பாளி பழம் சுமார் 3 கிராம் நார்ச் சத்தை அளிக்கிறது.

மலச் சிக்கல் : 

பப்பாளிப் பழத்தில் பாப்பைன் எனும் நொதி உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது. பப்பாளி பழத்தில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து இரண்டும் அதிக அளவில் உள்ளது  இவை இரண்டும் மலச் சிக்கலைத் தடுக்கவும் செரிமானப் பாதை ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகின்றன.

இதய நோயை தடுக்கிறது: 

பப்பாளி பழத்தில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் அனைத்தும் இதய நோய்களைத் தடுக்க உதவுகிறது. பப்பாளி பழம் உண்பதால் பொட்டாசியம் அதிகரித்தை அதிகரித்து சோடியம் சத்தை குறைத்து இதய நோகளை தடுக்கிறது.

ஆஸ்துமாவை தடுக்கிறது :

பொதுவாக அதிக அளவு குறிப்பிட்ட சத்துக்களை உட் கொண்டால் ஆஸ்துமா வரும் ஆபத்து குறைவாக உள்ளது என்று சொல்லப்படுகிறது. ஆஸ்துமாவை தடுக்கும் முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்று பீட்டா கரோட்டின் ஆகும இது பப்பாளி பழத்தில் அதிக அளவில் உள்ளது.

புற்றுநோய்  அபாயாத்தை குறைக்கிறது :

பப்பாளியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் பீட்டா கரோட்டின் புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதாக கேன்சர் எபிடெமியாலஜி அண்ட் ப்ரெவன்ஷன் பயோமார்கர்ஸ் இதழில் வெளியிடப் பட்டுள்ளது.

மேலும் அந்த இதழில் வெளியிடப்பட ஆய்வின்படி, இளைய ஆண்களில் பீட்டா கரோட்டின் நிறைந்த உணவுகள் புரோஸ்டேட் புற்றுநோய்க்கு எதிராக செயல் படுவதாக தெரிய வந்துள்ளது.

எலும்பு ஆரோக்கியம் :

வைட்டமின் கே இன் குறைபாடு எலும்புகளை பலவீனப் படுத்துகிறது. வைட்டமின் கே எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியம் ஆகும். ஏனெனில் இது கால்சியம் உறிஞ் சுதலை மேம்படுத்துகிறது மற்றும் சிறுநீர் மூலம் கால்சியம் வெளியேறுவதை தடுக்கிறது. வலுவான எலும்புகளை பெற கால்சியம் அவசியம் ஆகும்.

காயங்களை ஆற்றுகிறது : 

பப்பாளி பழத்தை மேற்பூச்சாகப் பயன்படுத்தும் போது தீக் காயங்கள் ​​குணமாவதை ஊக்குவிக்கவும் காயம் பட்ட பகுதிகளில் தொற்று ஏற்படமால் தடுப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.

பப்பாளியில் உள்ள சைமோ பாபைன் மற்றும் பபைன் என்ற புரோட்டோலிடிக் என்சைம்கள் காயங்களை குணப் படுத்தும் தன்மைக்கு காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பு கின்றனர்.

பப்பாளியின் என்சைம் கொண்ட களிம்புகள் டெகுபிடஸ் புண்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

சருமம் மற்றும் முடிக்கு நல்லது : 

பப்பாளி கூந்தலுக்கும் மிகவும் நல்லது ஏனெனில் இதில் வைட்டமின் ஏ உள்ளது. தோல் மற்றும் முடி உட்பட அனைத்து உடல் திசுக்களின் வளர்ச்சிக்கும் வைட்டமின் ஏ அவசியம்.

பப்பாளிப் பழத்தில் போதுமான அளவு வைட்டமின் சி உள்ளது இது சரும கட்டமைப்புக்கு ஆதாரனமான கொலாஜன் உற்பத்தி தேவை படுகிறது.

பப்பாளிப் பழம் தீமைகள் :

கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிடுவது மிகவும் தீங்கானது ஆகும். பப்பாளியில் காணப்படும் பாப்பேய்ன் எனும் வேதிப்பொருள் கருவுக்கு விஷம் அல்லது பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதற்கு சான்றுகள் உள்ளன.

தாய்ப்பால் கொடுக்கும் போது பப்பாளி பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா என்பது பற்றி போதுமா தரவுகள் இல்லை.

புளிக்கவைக்கப்பட்ட பப்பாளி இரத்த சர்க்கரையை குறைக்க வாய்ப்பு உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரையை குறைக்க மருந்து களை எடுத்துக் கொண்டால் பப்பாளி பழம் சாப்பிடும் போது மருத்துவரின் ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும்.