சாமை அரிசி நன்மைகள், தீமைகள்

0

சாமை அரிசி நன்மைகள், சாமை அரசியில் உள்ள சத்துக்கள்

சாமை அரிசி :

சாமை அரிசியின் அறிவியல் பெயர் பானிகம் சுமட்ரன்ஸ் (Panicum sumatrense) ஆகும். இது ஆங்கிலத்தில் லிட்டில் மில்லட் (Little Millet) என்று அழைக்கப்படுகிறது.

சாமை அரிசி இந்தியாவில் தோன்றியதாக நம்பப்படுகிறது. அரிசி மற்றும் கோதுமையை விட ஊட்டச்சத்து நிறைந்ததாகக் கூறப்படுகிறது சாமை அரிசி.

சாமை அரிசி நன்மைகள்
சாமை அரிசி உற்பத்தியில் இந்தியா, சீனா, நைஜீரியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன.

சாமை அரசியில் உள்ள சத்துக்கள் :

100 கிராம் சாமை அரிசியில் 9.7 கிராம் புரதமும், 5.2 கிராம் கொழுப்பு சத்தும், 7.6 கிராம் நார்ச்சத்தும், 69 கிராம் மாவு சத்தும் உள்ளது மேலும் 329 கலோரிகள் உள்ளது.

100 கிராம் சாமை அரிசியில் கால்சியம் 17 மி.கி, இரும்பு சத்து 9.3 மி.கி, தியாமின் 0.30 மி.கி ரிபோஃப்ளேவின் 0.09 மி.கி மற்றும் நியாசின் 3.2 மி.கி உள்ளது.

சாமை அரிசி நன்மைகள் :

இதயத்துக்கு நல்லது :

சாமை அரிசியில் எல்டிஎல் மற்றும் மொத்த கொழுப்பின் அளவைக் குறைப்பதாக தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் இதய நோய் வருவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது.

மேலும் சாமை அரிசியில் வைட்டமின்கள், அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் முக்கியமான தாதுக்கள் போன்ற கூறுகளைக் கொண்டிருப்பதால் இது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது.

நீரிழிவு நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது :

சாமை அரிசி குறைந்த கிளைசமிக் இன்டெக்ஸ் குறியீட்டை கொண்ட உணவாகும். நீரிழிவு நோய்க்கு எதிரான போராட்டத்தில் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளன.

செரிமானத்திற்கு நல்லது :

சாமை அரிசியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்தை துரிதப் படுத்துகிறது.

உடல் கலைப்பை போக்குகிறது :

உடல் களைப்பு மற்றும் அசதியை போக்குகிறது. ஏனெனில் இது உடலை தங்கியுள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை :

சாமை அரிசியில் உண்ணக்கூடிய வடிவங்களில் டோகோபெரோல்ஸ், டோகோட்ரியெனோல்ஸ் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

கரோட்டி னாய்டுகள் நிறைந்துள்ளன :

உடல் ஆரோக்கியத்தில் கரோட்டினாய்டுகள் மற்றும் ஊட்ட சத்துக்கள் அவசியமாகும்.

அவை பெருந்தமனி தடிப்பை தடுக்கவும், தோல் அழற்சியைத் தடுக்கவும் நோய் எதிர்ப்புச் செயல்பாட்டை வலுப்படுத்தவும் உதவுகின்றன.

மேலும் கரோட்டினாய்டுகள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

ஆக்சிஜ னேற்றிகள் நிறைந்துள்ளன :

டோகோபெரோல்ஸ் மற்றும் டோகோட்ரியெனோல்ஸ் என்பவை ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகும்.

இவை இரண்டும் வைட்டமின் ஈ செயல்பாட்டைக் கொண்டுள்ளன. நரம்புகள், இதயம், தசைகள் போன்ற உயிரணுக்களைச் சுற்றியுள்ள சவ்வுகளில் உள்ள கொழுப்பைப் பாதுகாக்க வைட்டமின் ஈ இயற்கையான ஆக்ஸிஜ னேற்றியாக செயல்படுகிறது.

மேலும் இது இரத்த சிவப் பணுக்களில் ஆக்ஸிஜனால் ஏற்படக்கூடிய சேதத்திலிருந்து பாதுகாக்கிறது மற்றும் புற்றுநோய், இருதய நோய்களிருந்து பாதுகாக்கிறது.

எடை குறைய சிறந்த உணவாகும் :

சாமை அரிசி எடை குறைக்க விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும்.

இது இரும்பு, கால்சியம், துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் நிரம்பியுள்ளன.

மேலும் இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் எடை இழப்புக்கு உதவுகிறது.

நோய் அதிகரிப்பு சக்தி :

சாமை அரிசியில் உள்ள ஃபிளாவனாய்டுகள் உடலின் நோயெதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

சாமை அரிசி தீமைகள் :

சாமை அரிசியினால் ஏற்படும் பக்க விளைவுகளைத் தவிர்க்க வாரத்திற்கு 3-4 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்த படுகிறது.

உணவு பட்டியலில் கொஞ்சம் கொஞ்சம் அதிகப் படுத்துவது நல்லது. சாமை அரிசி ஒவ்வாமை உடையவர்கள் அளவோடு சாப்பிட வேண்டும்.