கேழ்வரகு நன்மைகள், தீமைகள், சத்துக்கள்

0

ராகி நன்மைகள், தீமைகள் மற்றும் அடங்கியுள்ள சத்துக்கள். கேழ்வரகு நன்மைகள், தீமைகள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது.

கேழ்வரகு :

கேழ்வரகு அறிவியல் எலூசின் கோரகானா ஆகும். இது ஆங்கிலத்தில் பிங்கர் மில்லட் (Finger Millets) என்றும் ராகி என்றும் அழைக்கப்படுகிறது.

கேழ்வரகு நன்மைகள்
இதன் பூர்வீகம் ஆப்ரிக்காவாகும். இது ஆபிரிக்க தானியம் என்றும் அழைக்கப்படுகிறது. உலக அளவில் கேழ்வரகு உற்பத்தியில் இந்தியா மற்றும் சீனா முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

கேழ்வரகில் உள்ள சத்துக்கள்  :

100 கிராம் கேழ்வரகில் 320 கிலோகலோரிகள் உள்ளது. 100 கிராம் கேழ்வரகில் 11.18 கிராம் நார்ச் சத்து, 66.82 கிராம் கார்போஹைட்ரேட், 1.92 கிராம் கொழுப்பு, மற்றும் 7.16 கிராம் புரதம் உள்ளது.

100 கிராம் கேழ்வரகில் கால்சியம் 364 மில்லி கிராம், இரும்பு 4.62 மில்லி கிராம், மெக்னீசியம் 146 மில்லி கிராம், பாஸ்பரஸ் 210 மில்லி கிராம், பொட்டாசியம் 443 மில்லி கிராம், மாங்கனீசு 3.19 மில்லி கிராம், மற்றும் துத்தநாகம் 2.53 மில்லி கிராம் உள்ளது.

கேழ்வரகு நன்மைகள் :

 

ஊட்ட சத்து குறைபாட்டை போக்க உதவுகிறது :

 

ராகியில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பி வைட்டமின்கள், இரும்பு சத்து, கால்சியம், ஆக்ஸிஜனேற்றிகள், புரதங்கள், நார்ச்சத்துக்கள், போதுமான கலோரிகள் மற்றும் நிறைவுறா கொழுப்புகள் போன்ற முக்கிய ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

 

சிறந்த காலை உணவாகும் :

இரவில் ஆழ்ந்த உறக்கத்திற்குப் பிறகு காலையில் வயிறு மற்றும் குடல்கள் வளர்சிதை மாற்றத்தின் உச்ச நிலையில் காணப்படும்.
 

எனவே கேழ்வரகை காலை உணவாக உட்கொள்வது செரிமான அமிலங்களை செயல் பட செய்கிறது மற்றும் ஊட்ட சத்துக்கள் இரத்தத்தில் உறிஞ்சப்பட்டு உடலில் உள்ள முக்கிய உறுப்புகளான இதயம், மூளை, நுரையீரலுக்கு விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்கிறது.

 

அமினோ அமிலங்களின் சிறந்த தாவர மூலமாகும் :

ராகியில் சில முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. இது தாவர அடிப்படையிலான உயர் தர புரத சத்தின் சிறந்த மூலமாகும்.
 
இது மெத்தியோனைன் மற்றும் சல்பர் அடிப்படையிலான அமினோ அமிலத்தை வழங்குகிறது. இது தோல் மற்றும் முடி ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
 

வேலின் மற்றும் ஐசோலூசின் ஆகிய அமினோ அமிலங்கள் காயமடைந்த தசை திசுக்கள் மற்றும் த்ரோயோனைன் ஆகியவற்றை சரிசெய்கிறது.

 

அனீமியாவை எதிர்த்து போராடுகிறது :

இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகை நோயால் ஒவ்வொரு ஆண்டும் எண்ணற்ற இந்திய ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப் படுகின்றனர். ராகி இரும்பின் சத்தின் சிறந்த மூலமாகும். இது இரத்த சோகையை போக்குகிறது.

இதய பாதுகாப்பிற்கு சிறந்த உணவாகும் : 

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது  ராகியில் கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் முற்றிலும் இல்லை. எனவே ராகி மாவால் செய்யப்படும் உணவுகள் இதய நோயாளிகளுக்கு பாதுகாப்பானவை.

கொழுப்பை குறைக்க உதவுகிறது :

கேழ்வரகில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி3 அல்லது நியாசின் நல்ல எச்டிஎல் அளவை அதிகரிக்கவும் மோசமான எல்டிஎல் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.

இது இதயக் குழாய்களில் பிளேக் மற்றும் கொழுப்பு படிவதை தடுக்கிறது.

கர்ப்ப காலத்தில் சிறந்த உணவு:

முளை விட்ட கேழ்வரகு காலையில் உட்கொள்வது கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தருகிறது.

ராகியில் உள்ள அபரிமிதமான இரும்பு மற்றும் கால்சியம் உள்ளடக்கம் காரணமாக, பால் உற்பத்தியைத் தூண்டுகிறது.

மேலும் பெண்கள் மற்றும் இளம் தாய்மார்களில் ஹார்மோன் செயல்பாடுகளை சமநிலைப் படுத்துவதில் உதவுகிறது.

எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது :

கேழ்வரகு கால்சியத்தின் சிறந்த மூலமாகும். கேழ்வரவகு உட்கொள்வது வளரும் குழந்தைகளில் எலும்புகளை வளர்க்கவும், பெரியவர்களின் எலும்பு வலிமையை பராமரிக்கவும் உதவுகிறது.

மேலும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற வியாதிகள் வராமல் தடுப்பதற்கும், எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்கும் உதவுகிறது.

புற்றுநோய் எதிர்ப்பு :

கேழ்வரகில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகப் படியான ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுப்பதன் மூலம் உயிரணு சேதம் காரணமாக ஏற்படும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது.

மன அழுத்தத்தை போக்குகிறது :

கேழ்வரகு வழக்கமான நுகர்வு கவலை, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளை குறைக்கிறது.

கேழ்வரகில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், டிரிப்டோபன் மற்றும் அமினோ அமிலங்கள் இருப்பதால் இயற்கையான நரம்பியல் தளர்த்திகளாக வேலை செய்ய உதவுகின்றன.

எடை இழப்புக்கு உதவுகிறது :

கேழ்வரகில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து பசி உணர்வை குறைக்கிறது. இந்த செயல் பாடு எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.

கேழ்வரகு தீமைகள் :

கேழ்வரகில் கால்சியம் அதிக அளவு உள்ளது. எனவே அதிகப்படியான நுகர்வு சிறுநீரக கல் உருவாவதற்கான அபாயத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

கேழ்வரகு சிலருக்கு ஒவ்வாமை பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. எடை அதிகரிப்பு அல்லது இழப்பு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை கேழ்வரகு ஒவ்வாமை அறிகுறிகள் ஆகும்.

தைராய்டு பிரச்சினை உடையவர்கள் கேழ்வரகு உட்கொல்வதற்கு முன் மருத்துவர் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.