சோம்பு நன்மைகள், சோம்பு தீமைகள் பெருஞ்சீரகத்தில் உள்ள மருத்துவ பயன்கள் மற்றும் பெருஞ்சீரகம் தீமைகள்
பெருஞ்சீரம் (சோம்பு) :
பெருஞ்சீரகம் என்பது போனிகுளம் வல்கேர் (Foeniculum vulgare) என்ற ஒரு வகை மூலிகை வகை தாவரத்தின் விதைகளாகும். இது தமிழில் சோம்பு என்றும் பெருஞ்சீரகம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பூர்வீகம் தெற்கு ஆசிய நாடுகள் என்று சொல்லப் படுகிறது.
பெருஞ்சீரகம் நன்மைகள் :
பெருஞ்சீரகம் அல்லது சோம்பு பெரும்பாலும் உணவுக்குப் பிறகு வாய் புத்துணர்ச்சிகாக உட்கொள்ளப்படுகின்றன. இது செரிமானத்திற்கும், குடல் தசைகளை தளர்த்துவதற்கும், மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. மேலும் பல நன்மைகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
வாய்வு கோளாறை போக்குகிறது :
பெருஞ்சீரகத்தின் சிறந்த செரிமான பண்புகள் மற்றும் நுண்ணுயிர் எதிர் பண்புகள் வாயுவைக் குறைக்க உதவும் என்று கருதப்படுகிறது.
செரிமான இயக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் அதிகப்படியான வாயு உருவாவதை குறைத்து குடல்களை எளிதில் கடந்து செல்ல அனுமதிக்கிறது.
மேலும் அதன் ஆண்டி மைக்ரோபியல் விளைவால் வாய்வுக்களை உருவாக்கும் பாக்டீரியாவை வளரவிடாமல் தடுக்கிறது.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது :
பெருஞ்சீரகம் விதைகளில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் இது இரத்ததில் உள்ள திரவ அளவைக் கட்டுப்படுத்துகிறது.
மேலும் இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. பெருஞ்சீரகம் உட்கொள்வது உமிழ்நீரில் நைட்ரைட்டின் அளவை அதிகரிக்கின்றன.
நைட்ரைட் இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
ஆஸ்துமா மற்றும் பிற சுவாச நோய்களைக் குறைக்கிறது :
பெருஞ்சீரகம் விதைகளில் உள்ள அதிக அளவு பைட்டோ நியூட்ரியண்ட்கள் உள்ளன.
இவை சைனஸை அழிக்க உதவுகிறது. மேலும் இவை மூச்சுக்குழாய் தளர்வடைய செய்வதன் மூலம் ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாச கோளாறு தொடர்பான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.
பாலூட்டலை ஊக்குவிக்கிறது :
பெருஞ்சீரகத்தில் உள்ள அனெத்தோல் என்ற சேர்மம் கேலக்டாகோக்ஸை அதிகரிப்பதன் மூலம் பாலுற்பதியை தூண்டுகிறது.
மேலும் அனேத்தோல் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் செயல்பாட்டை அனெத்தோல் பிரதிபலிப்பதன் மூலமும் பாலுற்பத்தியை ஊக்குவிக்கிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது :
பெருஞ்சீரக சாறு, ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாப்பதன் மூலமும், சரும செல்களின் ஆயுளை மேம்படுத்துவதன் மூலமும் சரும ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
நச்சுக்களை நீக்குகிறது :
பெருஞ்சீரகம் விதைகளில் உள்ள எண்ணெய்கள் மற்றும் நார்ச் சத்துக்கள் இரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகின்றன.
புற்றுநோயைத் தடுக்கிறது :
பல ஆய்வுகள் பெருஞ்சீரகத்தில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக கூறுகின்றன.
சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன. அவை புற்றுநோய் நோய்க்கு காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களை குறைத்து ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை சரி செய்கிறது.
கண்பார்வையை மேம்படுத்த உதவுகிறது :
பெருஞ்சீரகத்தில் உள்ள வைட்டமின் ஏ கண்களுக்கு மிகவும் அவசிமான வைட்டமின் ஆகும்.
மேலும் பெருஞ்சீரகம் விதை சாறு கிளௌகோமா சிகிச்சைக்கு பயனுள்ளதாக இருந்ததாக சொல்லப் படுகிறது.
எடை இழப்பை ஊக்குவிக்கிறது :
பெருஞ்சீரகம் விதைகள் நார்ச்சத்து நிறைந்துள்ளன. வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கின்றன.
பசியைக் குறைக்கும் டையூரிடிக்களாக செயல்படுவதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
தினமும் உடற் பயிற்சியுடன் உணவிக் பெருஞ்சீரகம் விதை களை சேர்த்து கொள்வதன் மூலம் விரைவாக விரைவாக உடல் எடையை குறைக்க உதவுகிறது.
பெருஞ்சீரகம் தீமைகள் :
நன்மைகள் பல நிறைந்த சோம்பு அல்லது பெருஞ்சீரக விதைகள் அதிகமாக உட்கொள்வதால் சில பக்க விளைவுகளையும் ஏற்படுகின்றன. அவை
கர்ப்பிணிப் பெண்கள் கருஞ்சீரகம் விதைகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் விதைகள் கருப்பைச் சுருக்கத்தைத் தூண்டுவந்தாகவும் மற்றும் முன்கூட்டிய பிரசவத்தை ஏற்படுத்துவதாகவும் சொல்லப் படுகிறது.
காண்டாக்ட் டெர்மடிடிஸ் என்ற ஒரு வகை தோல் தொற்று ஏற்படுத்துவதாக சொல்லப் படுகிறது. பெருஞ்சீரகம் விதைகள் அல்லது எண்ணெய் நுகர்வு காரணமாக ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.
பெருஞ்சீரகத்தை அதிகமாக உட்கொள்வதால், முன்கூட்டிய தெலார்ச் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. தெலார்ச் என்றால் பருவமடைதலின் தொடக்கத்தில் ஏற்படும் மார்பகங்களின் வளர்ச்சியைக் குறிக்கிறது.
கால், கை வலிப்புக்கு சில மருந்துகளை உட்கொள் பவர்கள் பெருஞ்சீரகம் உட்கொள்வதை தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் அவை நிலைமையை மோசமாக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.