முட்டை பழம் நன்மைகள் மற்றும் சத்துக்கள்

0

முட்டை பழம் நன்மைகள், அதில் அடங்கியுள்ள சத்துக்கள் மற்றும் முட்டை பழம் தீமைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

முட்டைப் பழம்  :

முட்டைப் பழம் என்ற ஒன்று இருப்பதே பலருக்கும் தெரியாது. இதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன.

முட்டை பழத்தின் அறிவியல் பெயர் பூட்டேரியா கேம்ப்சியானா என்று அழைக்கப்படுகிறது.

இது ஆங்கிலத்தில் எக் ப்ரூட்ஸ் என்றும் கேனிஸ்டல் ப்ரூட்ஸ் (Canistel Fruits) என்றும் அழைக்கப்படுகிறது. இது சப்போடேசி குடும்பத்தில் இருந்து வரும் ஒரு வகை மரம் ஆகும்.

முட்டைப் பழம்

முட்டை பழத்தின் பூர்வீகம் மத்திய அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ ஆகும். இது ஆசியாவில் இலங்கை, பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியா மற்றும் தைவானின் சில வெப்பமண்டல பகுதிகளில் பயிரிடப்படுகிறது.

முட்டை பழத்தின் தோல் ஒளிரும் மஞ்சள் நிறத்திலும் மெழுகு போன்றும் காணப்படும். அதன் சதைப் பகுதி வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவைப் போன்று காணப்படும. மேலும் முட்டை போன்ற தோற்றத்தில் காணப்படுவதால் முட்டை பழம் என்று அழைக்கப்படுகிறது.

 

முட்டைப் பழத்தில் உள்ள சத்துக்கள்  :

முட்டை பழத்தில் கனிசமான அளவு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற சத்துக்கள் உள்ளன.

முட்டை பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஃபோலேட், தியாமின், நியாசின், பைரிடாக்சின், பாந்தோத்தேனிக் அமிலம் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற வைட்டமின்களும் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, புரதம், துத்தநாகம், தாமிரம் மற்றும் மாங்கனீசு போன்ற தாதுச் சத்துக்களும் உள்ளன.

முட்டைப் பழம் நன்மைகள் :

முட்டை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

இரும்பு சத்தின் சிறந்த மூலம் :

இரும்பு, உடலுக்கு மிகவும் பயனுள்ள தாதுச் சத்துக்கலில் ஒன்றாகும். முட்டை பழத்தில் உள்ள இரும்பு ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது. இது உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல உதவுகிறது.

செரிமான ஆரோக்கியம் :

முட்டை பழத்தில் உள்ள நிறைந்துள்ள நார் சத்து செரிமான ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. மலச்சிக்கல் பிரச்சினையை நீக்கி சீரான குடல் இயக்கத்தை ஊக்குவிக்க நார்ச் சத்து உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது :

முட்டை பழத்தில் உள்ள வைட்டமின் சி அதாவது அஸ்கார்பிக் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் உதவுகிறது.  இது சளி மற்றும் காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களைத் தடுக்க உதவுகிறது.

கண் ஆரோக்கியம் :

முட்டை பழத்தில் கரோட்டி னாய்டுகள் நிறைந்துள்ளன அவை கண் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.

நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்கிறது :

இது முட்டை பழத்தின் ஆரோக்கிய நன்மைகளில் முக்கியமானதாகும். முட்டை பழங்களில் உள்ள நியாசினமைடு என்ற ரசாயனப் பொருள் நீரிழிவு நோயைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.

புற்று நோயைத் தடுக்கிறது :

முட்டை பழத்தில் உள்ள பீட்டா கரோட்டின், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் புற்றுநோயாக மாறக்கூடிய கட்டிகள் வராமல் தடுக்கிறது.

தசை வலிமை : 

முட்டை பழத்தில் நியாசின் மற்றும் நியாசினமைடு வைட்டமின்கள் அதிகம் உள்ளன. இந்த இரண்டு சத்துக்களும் வலியைக் குறைக்கவும்  தசைகளை வலுப்படுத்தவும் உதவுகின்றன.

நியாசின் தசை வலிமையை மேம்படுத்த உதவுகிறது, அதேசமயம் நியாசினமைடு மூட்டு இயக்கத்தை அதிகரிக்க உதவுகிறது.

கீழ் வாதத்தை தடுக்கிறது :

அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால் முட்டை பழத்தை வழக்கமாக உட்கொள்வது கீல்வாதத்தின் அபாயத்தைத் தடுக்கலாம் என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன.

அல்சயமர் நோயை தடுக்கிறது :

முட்டை பழத்தில் அதிக அளவு இரும்பு சத்து இருப்பதால் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. மேலும் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

இது அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா போன்ற நரம்பு மண்டலக் கோளாறு சம்பந்தமான நோய்கள் அபாயத்தைத் தடுக்க உதவுகிறது.

இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது : 

முட்டை பழத்தில் உள்ள இரும்பு சத்து உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது. மேலும் இது இரத்த சோகை அபாயத்தைத் தடுக்க உதவுகிறது.

இரத்த சோகை என்பது இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய் ஆகும். இரும்பு சத்து இரத்த அணுக்களில் ஹீமோகுளோபின் உற்பத்தியை மேம்படுத்த உதவுகிறது.

ஹீமோகுளோபின் இரத்த சிவப்பணுக்களில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்தை பிணைக்க உதவுகிறது மற்றும் அவற்றை நம் உடல் செல்களின் ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு செல்ல உதவுகிறது.

இதனால் உடல் செல்கள் சரியான வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்தை பெற முடியும்.