கானம் (அ) கொள்ளு நன்மைகள், பயன்கள், பக்க விளைவுகள் கொள்ளு தீமைகள் மற்றும் அதில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளன.
கொள்ளு (அ) கானம் :
இதன் பூர்வீகம் தென் கிழக்கு ஆசியா ஆகும. கி மு 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பயிரிடப் பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. கொள்ளு அல்லது கானம் உற்பதியில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
கொள்ளு நன்மைகள் :
இரத்த சர்க்கரையை குறைக்கிறது :
கொள்ளு உட்கொள்வது இரத்த சர்க்கரையைக் குறைப்பதாக இந்திய வேதியியல் தொழில்நுட்பக் கழகத்தின் கண்டறிந்துள்ளனர்.
கார்போஹைட்ரேட் செரிமானம் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் புரதம்-டைரோசின் பாஸ்பேடேஸ் 1β ஐச் கட்டுப்படுத்துவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது :
சிறுநீர் பெருக்கியாகும் :
சிறுநீரகக் கற்களைத் தடுக்கிறது :
டையூரிடிக் பண்புகள் காரணமாக, கொள்ளு சிறுநீரக கற்களை அகற்றுவதில் உதவுகிறது.
கொள்ளுப் பயரை வழக்கமான உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்வதன் மூலம் சிறுநீரகங்களில் கற்கள் உருவாகுவதைத் தவிர்க்கலாம்.
ஏனெனில் சிறுநீரக கற்களைக் கற்களை கரையக்கூடிய சில சேர்மங்கள் கொள்ளுப் பயரில் உள்ளன.
புண்களை ஆற்றுகிறது :
ஆஸ்துமா நிவாரணம் :
கொள்ளுப் பயருடன் மிளகு கலந்து கொதிக்க வைத்து உட்கொள்வது ஆஸ்துமா நோயாளிகளுக்கு நிவாரணம் தருகிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது :
கொள்ளு பயறு சாப்பிடுவது உடல் பருமனை குறைக்க உதவுகிறது. ஏனெனில் இதில் உள்ள பினோல் காரணமாக கொழுப்பு திசுக்களை தாக்கும் திறனைக் கொண்டுள்ளது.
குளிர் காலத்தில் சிறந்த உணவாகும் :
எலும்புகளுக்கு நல்லது :
கானம் பயரில் இரும்பு சத்து, கால்சியம் மற்றும் புரதம் அதிகம் உள்ளது. கொள்ளு, பயறு வகைகளில் அதிக கால்சியத்தை கொண்டுள்ளது.
மேலும் இதில் தாவர மூலங்களிடமிருந்து கிடைக்கும் கிடைக்கும் புறதங்களில் அதிக அளவு உள்ளது.
மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்துகிறது :
கொள்ளு தீமைகள் :
கொள்ளு பயரில் ஃபைடிக் அமிலம் உள்ளது. இது ஒரு ஊட்டச்சத்து எதிர்ப்பு சேர்மம் ஆகும். அதாவது உடலால் அனைத்து ஊட்டச்சத்துக்களும் உறிஞ்சப் படுவதை பாதிக்கும் தன்மையுடையது.