Homeஉணவுகள்தானியங்கள்பார்லி நன்மைகள், தீமைகள் மற்றும் சத்துக்கள்

பார்லி நன்மைகள், தீமைகள் மற்றும் சத்துக்கள்

பார்லி உண்பதால் கிடைக்கும் நன்மைகள், பக்க விளைவுகள் மற்றும் அதில் அடங்கியுள்ள சத்துக்கள் விவரிக்கப் பட்டுள்ளன

பார்லி :

பார்லி அறிவியல் பெயர் ஹார்டியம் வல்கேர் ஆகும். இது தமிழில் வாற்கோதுமை என்றும் அழைக்கப்படுகிறது.

பார்லி நன்மைகள், தீமைகள் மற்றும் சத்துக்கள்

பார்லி ஐய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எகிபதில் பயிரிடப் பட்டு வருவதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

பார்லி உற்பத்தியில் ரஷ்யா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் உலக அளவில் முதல் மூன்று இடத்தில் உள்ளன. இந்தியாவில் ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் உற்பத்தி செய்யப் படுகின்றன.

பார்லியில் உள்ள சத்துக்கள் :

100 கிராம் பார்லியில் 352 கலோரிகள் உள்ளன. மேலும் 1.2 கிராம் கொழுப்பு, 9.9 கிராம் புரதம் மற்றும் 78 கிராம் கார்போஹைட்ரேட், 16 கிராம் மாவுச் சத்து உள்ளது.

பார்லி 100 கிராமில் 0.02 மில்லி கிராம் வைட்டமின் இ மற்றும் 2.2 மைக்ரோ கிராம் வைட்டமின் கே உள்ளது.

100 கிராம் பார்லியில் 2.50 மில்லி கிராம் இரும்பு சத்து, 29.00 மில்லி கிராம் கால்சியம், 280 மில்லி கிராம் பொட்டாசியம், 221 மில்லி கிராம் பாஸ்பரஸ், 79 கிராம் மக்னேசியம் மற்றும் 37.7 மைக்ரோ கிராம் செலினியம் உள்ளது.

பார்லி நன்மைகள் :

கொழுப்பை கட்டுப்படுத்துகிறது :

பார்லியின் கரையாத நார்ச் சத்தான ப்ரோபியோனிக் அமிலம் உள்ளது. இது இரத்தக் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.

இது, கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச் சத்தின் சிறந்த மூலமாக இருப்பதாலும் குறைந்த கொழுப்பு இருப்பதாலும் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது.

நீரிழிவு வகை 2 க்கு நல்லது :

பார்லி வகை 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. உடல் எடையை குறைப்பதன் மூலமும், தீவிரமான உடல் பயிற்சியின் மூலமும், முழு தானியங்களை உணவில் சேர்ப்பதன் மூலமும் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

நீரிழிவு நோயாளிகளின் தினசரி உணவில் அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் சேர்க்கப்பட வேண்டும்.

பார்லி தானியத்தில் அனைத்து அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன,

குறிப்பாக பீட்டா-குளுக்கன் என்ற கரையக்கூடிய நார்ச் சத்து குளுக்கோஸ் உறிஞ்சுதலைக் குறைக்கிறது.

புற்றுநோய் வராமல் தடுக்கிறது :

பார்லியில் தாவர லிக்னன்கள் எனப்படும் ஒரு வகையான பைட்டோ நியூட்ரியன்ட்கள் உள்ளன.

அவை குடலில் என்டோரோலாக்டோன் எனும் விலங்கு லிக்னன்களாக மாற்றப்படுகிறது. இது மார்பக மற்றும் பிற ஹார்மோன் தொடர்பான புற்றுநோய்கள் உருவாவதை தடுக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது :

கொலஸ்ட்ரால் போன்ற கொழுப்பு பொருட்கள் உரைதல் அல்லது படிதல் காரணமாக பெருந்தமனி தடிப்புத், தோல் அழற்சி போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன.

பார்லியில் நியாசின் (வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்) உள்ளது. இது ஒட்டுமொத்த கொழுப்பு மற்றும் லிப்போபுரோட்டீன் அளவைக் குறைப்பதன் மூலம் இதய நோய் களிடமிருந்து பாத்துக்காக்கிறது.

பெண்களுக்கு நல்லது :

மாதவிடாய் நின்ற பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் அல்லது இருதய நோய்கள் இருந்தால் வாரத்திற்கு 6 முறையாவது பார்லி உணவு சாப்பிட பரிந்துரைக்கப் படுகிறது.

முடக்கு வாதம் :

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை உட்கொள்வது வீக்கத்தைக் குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

பார்லி போன்ற கரையக்கூடிய நார் சத்து கொண்ட சில முழு தானியங்கள் உடலுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்க உதவுகிறது.

மூட்டுகள் அல்லது கீல்வாதம் வீக்கம் தொடர்பான எந்த வலியை குறைக்க உதவுவதாக சொல்லப்படுகிறது.

மலட்டு தன்மையை நீக்குகிறது :

பார்லியில் அர்ஜினைன் மற்றும் நைட்ரிக் ஆக்சைடு இருப்பதாக அறியப்படுகிறது.

இவை இரண்டும் ஆண்குறி விறைப்பிண்மையை சரி செய்கின்றன. அர்ஜினைன் விந்து மற்றும் கரு முட்டை உற்பத்தியை அதிகரிக்கிறது.

பார்லி தானியங்களை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் பாலியல் செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது.

நச்சுத் தன்மையை நீக்குகிறது :

பார்லியில் நார்ச் சத்து நிறைந்துள்ளதால் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி நச்சுத்தன்மையை நீக்குகிறது.

மேலும் இதில் உள்ள நார்ச் சத்து குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு ஊக்கியாக செயல் படுகிறது.

இந்த பாக்டீரியாக்கள் நார்ச் சத்தை நொதிக்க செய்து பியூட்ரிக் அமிலத்தை உருவாக்குகிறது. பிட்யூட்ரிக் அமிலம் பெருங்குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் உதவுகிறது.

மேலும்  பெருங்குடல் புற்றுநோய் மற்றும் மூலநோயின் வாய்ப்புகளை வெகுவாகக் குறைக்கிறது.

பித்தப்பை பாதுகாப்பு :

பெண்களுக்கு பித்தப்பை கற்களின் வளர்ச்சியைத் தடுக்க பார்லி உதவுகிறது.

பார்லியில் கரையாத நார்ச்சத்து நிறைந்திருப்பதால் பித்த அமில சுரப்பைக் குறைக்க உதவுகிறது.

இதன் மூலம் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்கிறது.

அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் காஸ்ட்ரோஎன்டாலஜியில் என்ற பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் நார்ச்சத்துள்ள உணவை உட்கொள்ளும் பெண்களுக்கு மற்ற பெண்களை விட பித்தப்பை கற்கள் உருவாவதற்கான ஆபத்து 17% குறைவாக உள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது.

ஆஸ்டியோ போரோசிஸைத் தடுக்க உதவுகிறது :

பார்லி புல்லில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் போன்ற தாதுக்கள் எலும்புகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.

ஆஸ்டியோ போரோசிஸ் உள்ளவர்களுக்கு இது இயற்கையான தீர்வாகும். இதன் சாற்றில் பாலை விட 11 மடங்கு அதிக கால்சியம் உள்ளது.

எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் கால்சியம் ஒரு முக்கிய அங்கமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க :

பார்லி மிகவும் சத்துள்ள உணவாக இருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி சளி மற்றும் காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது. மேலும் இதில் உள்ள இரும்புசத்து இரத்த அளவை அதிகரிக்கிறது மற்றும் இரத்த சோகை மற்றும் சோர்வைத் தடுக்கிறது.

சரும ஆரோக்கியம் :

பார்லி செலினியத்தின் சிறந்த மூலமாகும். இது சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையைப் பாதுகாத்து ஃப்ரீ ரேடிகல் சேதம் மற்றும் தளர்த்தலுக்கு எதிராக போராடுகிறது.

மேலும் இது இதயம், கணையம் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

செலினியம் குறைபாடு தோல், பெருங்குடல், புரோஸ்டேட், கல்லீரல், வயிறு மற்றும் மார்பக புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.

பார்லி தீமைகள் :

பார்லி உணவு பொதுவாக ஆரோக்கிய மனதாகும். பார்லி மாவு சில நேரங்களில் ஆஸ்துமாவை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது.

முளை கட்டிய பார்லி பாதுகாப்பற்றவை மற்றும் கர்ப்ப காலத்தில் அதிக அளவில் சாப்பிடக்கூடாது.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பார்லி உணவு பாதுகாப்பானது என்பது பற்றி போதுமான ஆதாரங்கள் இல்லை.

பார்லியில் உள்ள பசையம் செலியாக் நோயை மேலும் மோசமாக்க வாய்ப்புள்ளது.  எனவே  பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

தானிய ஒவ்வாமை உடைவர்கள் பார்லியை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

என்பதால், அறுவை சிகிச்சையின் போதும் அதற்குப் பின்னரும் இரத்த சர்க்கரை அளவை கட்டுபடுத்த வாய்ப்பு உள்ளது.

எனவே திட்டமிட்ட அறுவை சிகிச்சைக்கு குறைந்தது 2 வாரங்களுக்கு முன்பு பார்லியைப் பயன்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும்

Tamil Scan

All content and images published www.tamilscan.com for informational purposes only. Always seek the guidance of your doctor or other qualified health professional with any questions you may have regarding your health or a medical condition.

Tamil Scan
RELATED

Most Popular