பாதாம் நன்மைகள், பயன்கள், பாதாம் பருப்பில் உள்ள சத்துக்கள் மற்றும் பாதாம் தீமைகள், பாதாம் சாப்பிடும் முறை பற்றி கொடுக்கப்பட்டுள்ளது
பாதாம் :.
ஆண்கள், பெண்கள் என அனைவரும் தங்களது உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமான ஊட்டச் சத்துக்களைப் பெறுவதற்கு முழு தானியங்கள், காய்கறிகள், பழங்களுடன், பருப்புகள், உலர் பழங்களையும் வேண்டும்.
அந்த வகையில் பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை, பேரிச்சம் பழம், அத்தி பழம் ஆகியவற்றில் உடலுக்கு நன்மை தரும் ஏராளமான ஊட்டச் சத்துக்கள் அடங்கி உள்ளன.
இதில் பாதாமை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
பாதாம் பருப்பில் உள்ள சத்துக்கள் :
100 கிராம் பாதாம் பருப்பில் 50 கிராம் கொழுப்பு, 21 கிராம் புரதம் மற்றும் 22 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 13 கிராம் நார் சத்து உள்ளது.
வைட்டமின்கள் :
தாதுச் சத்துக்கள் :
பாதாம் நன்மைகள் :
தொடர்ந்து பாதாமை சாப்பிட்டு வருவதன் மூலம் சுவாசக் கோளாறு, இதய நோய், நீரிழிவு நோய், சருமப் பிரச்சினை, முடி உதிர்வு, ரத்த சோகை போன்ற நோய்களைத் தடுக்கலாம். பாதாம் நன்மைகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மலச்சிக்கல் நீங்க :
தினமும் 6-7 ஊறவைத்த பாதாம் பருப்புகளை ஈப்பிடுவதன் மூலம் மலச் சிக்கலில் இருந்து விடுபடலாம்.
உடல் எடை குறைய :
உடல் எடையைக் குறைப்பதற்கு முயற்சிப்பவர்கள், தினமும் 5 பாதாம் பருப்புகளை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள கெட்ட கொழுப்பு கரையும்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது :
ஊறவைத்த பாதாமில் உள்ள சத்துக்கள், ரத்தத்தில் ஆல்ஃபா டேகோபெராலை அதிகரித்து, ரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்துகின்றன.
இரத்த அணுக்களை பெருக்குகிறது :
இரத்தத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்களை பெருக்கும் சக்தி கொண்டது, பாதாம்.
எலும்புகளை பலப் படுத்துகிறது :
இதில் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளன.
புத்தி கூர்மை :
ரிபோஃபிளேவின், எல் கார்னிடைன் போன்றவை மூளையின் செயல்திறனை மேம்படுத்தி புத்திக் கூர்மையை அதிகரிப்பதற்கு உதவுகின்றன.
நரம்பு மண்டல ஆரோக்கியம் :
நரம்பு மண்டலத்தின் சீரான இயக்கத்துக்கு பாதாம் பெரிதும் உதவுகிறது.
ஞாபக மறதி நோயைத் தடுக்கிறது :
வயது முதிர்ச்சியால் வரக்கூடிய, ஞாபக மறதி நோயைத் தடுக்கும் ஆற்றல் பாதாமில் உள்ளது.
சரும ஆரோக்கியம் :
பாதாம் எண்ணெய்க் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வந்தால், உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, சருமம் ஆரோக்கிய மாகவும், பொலிவுடனும் இருக்கும்.
தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு, முகத்தில் பாதாம் எண்ணெய் தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால் பொலிவு அதிகரிக்கும். மாதவிடாய் நின்ற பெண்கள், தினமும் பாதாம் பருப்பை சாப்பிட்டுவந்தால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்க முடியும்.
பாதாம் பருப்பு எவ்வாறு சாப்பிடுவது :
பாதாமை ஊறவைத்து அதன் மேல் தோலை நீக்கிய பின்பு சாப்பிடுவதே சிறந்தது.
ஒரு கைப்பிடி அளவு பாதாமை முதல் நாள் இரவு ஊற வைத்து, அடுத்த நாள் காலையில் எழுந்தவுடன், காலை உணவுக்கு முன்பாகச் சாப்பிடலாம்.
பாதாம் தீமைகள் :
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல அதிக அளவிலான ஆரோக்கிய நன்மைகள் கொண்ட பாதாம் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பொழுது ஒவ்வாமை, ஜீரண கோளாறு, மலச்சிக்கல், நச்சு தன்மை, சிறுநீரக கற்கள் உருவாதல் போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன. எனவே பாதாம் பருப்பு அளவோடு சேர்த்து கொள்ள வேண்டும்.
ஊற வைத்த தண்ணீரை பருகலாமா