கமலா ஆரஞ்சு பழம் :
கமலா ஆரஞ்சு பழம் ஆரஞ்சு பழ வகைகளில் ஒன்றாகும். சிலநாடுகளில் “குழந்தை ஆரஞ்சு” (baby orange) என்று அழைக்கப்படுகிறது.
இவை மற்ற வகை ஆரஞ்சு பழங்களை விட சிறிய தாகவும் ஓரளவு தட்டையாகவும் காணப்படுகின்றன.
நன்றாக பழுத்த கமலா ஆரஞ்சு மற்ற வகை ஆரஞ்சு பழங்களை விட மென்மையானதாக இருக்கும்.
கமலா ஆரஞ்சு பழம் வரலாறு :
கமலா ஆரஞ்சு பழத்தின் தென் கிழக்கு ஆசியாவாகும். உலக அளவில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி கமலா ஆரஞ்சு உற்பத்தியில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
கமலா ஆரஞ்சு பழம் பிற பெயர்கள் :
இதன் அறிவியல் பெயர் சிட்ரஸ் டான்ஜரின் ஆகும். இது தமிழில் கமலா ஆரஞ்சு என்றும், ஆங்கிலத்தில் டாஞ்சரின் என்றும், ஹிந்தியில் சண்டரா என்றும், தெலுங்கில் கமலா பண்டு என்றும் அழைக்கப்படுகிறது.
கமலா ஆரஞ்சில் உள்ள சத்துக்கள் :
ஆரஞ்சு பழம் போன்ற சிட்ரஸ் வகை பழங்களில் வைட்டமின் சி அதிக அளவில் இருப்பது அனைவருக்கும் தெரிந்தது.
கமலா ஆரஞ்சில் வைட்டமின் சி மட்டுமில்லாமல் கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் உள்ளன.
100 கிராம் கமலா ஆரஞ்சு பழத்தில் 0.3 கிராம் கொழுப்பு, 0.8 கிராம் புரதம் மற்றும் 13 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.
13 கிராம் மாவுச்சத்தில் 11 கிராம் சர்க்கரை 11 கிராமும், நார் சத்து 1.8 கிராமும் உள்ளன.
கமலா ஆரஞ்சு பழம் நன்மைகள் :
கமலா ஆரஞ்சு மிகக் குறைவான அளவு கலோரி கொண்ட பழமாக இருந்தாலும் உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை தரக் கூடியதாக உள்ளது. அவை
கொலஸ்ட்ராலை கட்டுப் படுத்துகிறது :
இந்த வகை ஆரஞ்சு பழத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.
மேலும் இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக உள்ள கொலஸ்ட்ராலை கரைத்து வெளியேற்றுவதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவு சீராக இருக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியம் :
கமலா ஆரஞ்சு கொலஸ்ட்ராலை குறைத்து இதயம் சீராக இயங்குவதற்கு உதவி செய்கிறது. உடலில் பொட்டாசியம் சத்து குறையும் போதுதான் இதய சம்பந்தமான பிரச்சினைகள் தோன்ற ஆரம்பிகின்றன
இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து இதய சுவர்களை பலப் படுத்துவதன் மூலம் இதயத்தை பாத்துக்காக்கிறது.
கண் ஆரோக்கியம் :
கண் சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் கமலா ஆரஞ்சு பழம் சாப்பிட்டுவர இதில் இருக்கக்கூடிய கரோட்டினாய்டுகள் என்னும் வேதிப்பொருள் விட்டமின் ஏ சத்தாக மாறி கண் சம்பந்தமான பிரச்சினைகள் குணமாகும்.
கண் பார்வை மங்கல் போன்ற கோளாறு உடையவர்கள் கமலா ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வர கண் பார்வைத் தெளிவடையும்.
நோய் எதிர்ப்பு சக்தி :
கமலா ஆரஞ்சில் விட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி உடலில் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
மேலும் இதில் காணப்படும் பாலிபீனால் எனும் வேதிப்பொருள் உடலில் வைரஸ் தொற்றுகள் வராமல் தடுக்கிறது என பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அடிக்கடி சளி காய்ச்சல் போன்ற பிரச்சனையால் பாதிக்கப் படுபவர்கள் கமலா ஆரஞ்சு காயை சாப்பிட்டு வர பலன் கிடைக்கும்.
மலசிக்கல் :
மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் கமலா ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வர அதில் இருக்க கூடிய நார் சத்து குடலியக்கத்தை சீராக்கி மலம் எழுதில் வெளியேற உதவி செய்கிறது.
இரத்த அழுத்தம் :
கமலா ஆரஞ்சில் உள்ள பிலேவனாயுடுகள் அதிக ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
மேலும் இதில் இருக்கக்கூடிய மெக்னீசியம் இரத்த அழுத்தம் சீராக இருக்க உதவி செய்கிறது.
உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் அவதிப் படுபவர்கள் கமலா ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வர நன்மை பயக்கும்.
மூட்டு ஆரோக்கியம் :
மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் இருந்தால் கமலா ஆரஞ்சு ஜூஸை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
இதில் இருக்கக்கூடிய நோயெதிர்ப்பு அழற்சி பொருள் மூட்டுகளில் இருக்கக்கூடிய வீக்கத்தை குறைத்து மூட்டுகளுக்கு நல்ல பலன் கொடுக்கக் கூடியது.
சரும பாதுகாப்பு :
ஆரஞ்சு பழத்தில் சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்றிகளான பீட்டா கரோட்டீன்கள் அதிக அளவில் உள்ளன.
இது சூரியக் கதிர்களால் சரும செல்களில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது மற்றும் முதுமை தோற்றம் ஏற்படாமல் தடுக்கிறது.
விந்தணு ஆரோக்கியம் :
விந்தணுக்களின் ஆரோக்கித்திற்கு கமலா ஆரஞ்ச் மிகவும் நல்லது. கமலா ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வர இதில் இருக்கக்கூடிய ஃபோலேட் என்னும் ஊட்டச் சத்து விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது மற்றும் பாலியல் ஆரோக்கியத்தை மேம் படுத்துகிறது.