அரிசி சாதம் நன்மைகள், சத்துக்கள்

0
அரிசி பயன்கள், சத்துக்கள், உடல் எடையை குறைக்க அரிசி உணவுகளை சமைக்கும் முறை மற்றும் சாப்பிடும் முறை பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

அரிசி :

அரிசி அனைவரும் தினமும் உண்ணும் ஒரு பொதுவான உணவாகும். இருப்பினும் எடை குறைக்க  வேண்டும் என முடிவு செய்ததும், முதற்காரியமாக பலரும் அரிசி உணவை தவிர்ப்பார்கள். அவை எடையை அதிகரிக்கும் தன்மை கொண் என்ற கருத்து பெரும் பாலானவர்களிடம் இருக்கிறது.

அரிசிஅரிசி உணவு களைத் தவிர்ப்பதால் மட்டும் எடையைக் குறைக்க முடியாது. சரியான உணவு முறை, உடற்பயிற்சி, சீரான தூக்கம், நேர்மறையான மன நிலை போன்றவற்றின் மூலமே உடல் எடையை சரியாக பராமரிக்க முடியும்.

நமது தட்ப வெப்ப நிலையில் வளரும் உணவு  வகைகளே உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றவை. அந்த வகையில் அரிசி உடலுக்கு நன்மை அளிப்பவையாகும்

அரிசியில் உள்ள சத்துக்கள் :

நாம் வெள்ளை அரிசியை அதிகம் பயன்படுத்து கிறோம். 1 கப் வேக வைத்த வெள்ளை அரிசியில், 242 கலோரிகள், 4.4 கிராம் புரதம், 0.4 கிராம் கொழுப் புச்சத்து, 53.4 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 0.6 கிராம் நார்ச்சத்து உள்ளது.
வைட்டமின் பி, கார்போ ஹைட்ரேட், போலேட், தயமின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

அரிசி வகைகள் :

அரிசியில் பல வகைகள் உள்ளன. அவை ஓவ்வொன்றும் தனிப்பட்ட நன்மைகளைக் கொ ண்டுள்ளன.

சிகப்பரிசியில் பெண் களுக்கு அவசியமான சுண்ணாம்பு ச்சத்தும், இரும்புச்சத்தும் உள்ளன. அரிசி எளிதாக செரிமானமாகக் கூடிய உணவாகும்.

அரிசி சமைக்கும் முறை :

சமைப்பது எளிதாக இருக்கும் காரணத்தால் பலரும் அரிசியை குக்கரில் வேக வைத்து சாப்பிடுகிறார்கள்.

அதைத் தவிர்த்து, நம் முன்னோர்களைப் போல வடித்து சாப்பிடும் ‘முறையைப்? பின்பற்றலாம்.

இதன் மூலம் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் மாவுச்சத்தைக் குறைக்க முடியும்.

அரிசி மாவை தோசையாக சுட்டு சாப்பிடு வதை விட, ஆவியில் வேகவைத்து சாப்பி டும் இட்லி ஆரோக்கியமானது.

உடல் எடையை குறைக்க அரிசி சாதம் சாப்பிடும் முறை :

சாப்பிடும் முறை எடைக் குறைப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் வேகவைத்த அரிசி சாதம் ஒரு பங்கும், காய் கறி, கீரைகள், பருப்பு போன்றவற்றை சேர்த்து இரண்டு பங்கும் சாப்பிடலாம்.
வெள்ளை அரிசிக்கு பதிலாக சிகப்பு அரிசியை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

அரிசி நன்மைகள்  :

  • அரிசி உணவில் உள்ள வைட்டமின் பி’ நரம்பு மண்டலத்தின் ஆரோக்கி யத்தைப் பாதுகாக்கிறது.
  • அரிசியிலுள்ள கார்போ ஹைட்ரேட், உடல் இயக்கத்துக்கு தேவை யான ஆற்றலை வழங்குகிறது. அரிசியில் நிறைந்திருக்கும் ‘போலேட்’, திசுக்களின் வளர்ச்சிக்கும், செல்களின் செயல் பாட்டுக்கும் அவசிய மானது.
  • அரிசி உணவுகள் மலச் சிக்கலைத் தடுக்கும் தன்மை கொண்ட வையாகும். இவற்றில் உள்ள சத்துக்கள் சருமத்தை பொலிவாக்கு கின்றன.
  • உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமான சோடியம், கொழுப்பு போன் றவை அரிசியில் மிகவும் குறைவான அளவே உள்ளன.
  • பட்டைத் தீட்டப்படாத அரிசியில் உள்ள நார்ச்சத்து உடலில் சேரும் கெட்டக் கொழுப்பைக் கரைப்பதற்கு அவசியமானது.
  • இவ்வாறு ஏராளமான நன்மைகள் இருப்பதால் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு அரிசி சிறந்த உணவாகும்.