அழகான தோற்றம் பெற 6 எளிய வழிகள்

0

உடல் மொத்த அழகை அதிகப்படுத்தி அழகான, கம்பீரமான தோற்றத்தை பெற எளிய வழிகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

அழகான தோற்றம் பெற எளிய வழி :

ஆளுமைத் திறனை அதிகரிப்பதற்கு நம்மை அழகுபடுத்தி கொள்வதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

கண்களுக்கு உறுத்தாத ஒப்பனையும், சூழலுக்கு ஏற்ற உடையும் நம் மீது மரியாதையை ஏற்படுத்தும்.

அழகான தோற்றம் பெற எளிய வழிகள்

அனைத்து சூழலிலும் நம்மை பொருந்தி போகச் செய்து உற்சாகமான மன நிலையை உண்டாக்கும்.

அதற்காக எத்தகை எளிமையான வழிகளைப் பின்பற்றலாம் என்பதை பார்க்கலாம்

அழகிய தலைமுடி பெற :

தலைமுடி உதிர்வதும், வலுவிழந்த கூந்தலும் தற்போது பலரும் சந்திக்கும் பிரச்சிணையாகும்.

அடர்த்தியான, வலுவான கூந்தலைப் பெற சத்தான உணவை சாப்பிட வேண்டும். தலை முடிக்கு வேதிப்பொருட்கள் சேர்த்த ஷாம்புவை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

சிகைக்காயுடன் சாதம் வடித்த கஞ்சியை சேர்த்து பயன்படுத்தினால் முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம்.

கூந்தல் கருமையாக தோற்றமளிக்க வாரம் ஒரு முறை விளக்கெண்ணெய்யுடன், தேங்க எண்ணெய் கலந்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊற வைத்துவிட்டு, பின்னர் குளிக்கலாம்.

மருதாணிப் பொடி, தயிர் கலந்து ‘பேக்’காக போடுவதால் கூந்தல் செழித்து வளரும்.

புருவம் அழகு பெற :

இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, இரண்டு புருவங்களிலும் விளக்கெண்ணெயைத் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் புருவப் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரித்து, புருவம் அடர்த்தியாக வளரும்.

உதடு அழகாக :

வாரத்திற்கு ஒரு முறை சர்க்கரையை தேன் அல்லது தேங்காய் என்னெயில்  கலந்து, உதட்டின் மேல் தடவி மென்மையாக மசாஜ் செய்யலாம்.

தரமான ‘லிப்பாம்” உபயோகிப்பது சிறந்த பலனைத் தரும்.

முகம் அழகாக :  

பருக்கள், அவற்றால் ஏற்படும் வடு போன்றவற்றால் பலருக்கும் முகத்தின் பொலிவு குறையும்.

பருக்களால் முகத்தில் தழும்புகள் ஏற்படும். அதைப் போக்க தினமும் இரவில் பாதாம் எண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம்.

உடை : 

ஆள் பாதி, ஆடை பாதி’ என்பது போல, சூழ்நிலைக்கு ஏற்ற சரியான உடைகளைத் தேர்வு செய்து அணிய வேண்டும்.

உடல் அமைப்புக்கு பொருத்தமான உடைகள் நமது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

உணவு : 

தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். எண்ணெய்யில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து பழங்கள், காய்கறிகளை அதிகமாக சாப்பிடுவது அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாகும்.

தொப்பை அதிகரிக்க காரணமாகிய வாய்வு கோளாறுகளை உருவாக்கும் உணவுகள், ஊளை சதைக்கு காரணமாகிய கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.