வெண்டைக்காய் நன்மைகள், மருத்துவ பயன்கள், வெண்டைக்காய் தீமைகள் மற்றும் வெண்டைக்காயில் உள்ள சத்துக்கள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது.
வெண்டைக்காய் :
வெண்டைக்காய் உலக வெப்ப மண்டல நாடுகளாகிய மேற்கு ஆப்பிரிக்காவை பூர்விகமாக கொண்டதாக நம்பப் படுகிறது.
மேலும் பழங்காலகளில் ஆப்ரிக்க அடிமை மக்கள் மூலம் உலகம் முழுவதிலும் பரவியதாக சொல்லப்படுகிறது.
தற்போது உலகம் முழுவத்திலும் முக்கிய உணவாக பயன் படுத்தப் படுகிறது.
வெண்டைகாயின் அறிவியல் பெயர் அபெல்மோஸ்கஸ் எஸ்குலெண்டஸ் (Abelmoschus esculentus) ஆகும்.
வெண்டைக்காயில் உள்ள சத்துக்கள் :
பொதுவாக காய்கறிகளில் உள்ள ஊட்ட சத்துக்கள் கழுவுவதல், ஊற வைத்தல், வேக வைத்தல், எண்ணெய் சேர்த்து வருத்தல் போன்ற சமையல் செயல் முறைகளால் அதிக அளவு வித்தியாசம் அடைகின்றன.
அதை போல் வெண்டைக்காயில் உள்ள சத்துக்களும் சமைக்கும் பொழுது பெரிதளவு ஊட்ட சத்து மாறுபாடு அடைகின்றன. இங்கு வெண்டை காயில் உள்ள ஊட்ட சத்துக்கள் விவரங்கள் தோராயமாக கொடுக்கப் பட்டுள்ளன.
100 கிராம் வெண்டை காயில் 7.03 கிராம் கார்போஹைட்ரேட், 2 கிராம் புரதம், 0.1 கிராம் கொழுப்பு மற்றும் 9% நார்ச்சத்து உள்ளது.
வைட்டமின்கள் :
100 கிராம் வெண்டைக்காயில் வைட்டமின் சி 20.4 மில்லி கிராமும், வைட்டமின் இ 0.6 கிராமும், வைட்டமின் கே 35.1 மைக்ரோ கிராமும் உள்ளன.
தாதுச் சத்துக்கள் :
தவிர கால்சியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் போன்ற தாது சத்துக்களும் நிறைந்துள்ளன.
வெண்டைக் காய் நன்மைகள்:
வெண்டைக்காய் நன்மைகள் பின்வருமாறு
நோய் எதிர்ப்பு சக்தி :
வெண்டைக்காயில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் பொதுவான தொற்றுகளை தடுக்கிறது.
100 கிராம் வெண்டைகாயில் தினசரி பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் சி உட்கொள்ளலில் சுமார் 40% உள்ளது.
வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும், வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்யவும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும் நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
இரத்த சோகை :
வெண்டைக்காயில் அதிக அளவு வைட்டமின் கே, ஃபோலேட் மற்றும் இரும்பு சத்து இருப்பதால் இது இரத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் இரத்த சோகைக்கு சிகிச்சை அளிப்பதற்கும் தடுப்பதற்கும் சிறந்தது.
எடை குறைப்பு :
ஒவ்வொரு 100 கிராம் வெண்டை காயிலும் 33 கலோரிகள் மட்டுமே இருப்பதால், எடை இழக்க விரும்பும் மக்களுக்கு வெண்டை காயை உணவில் சேர்த்து கொள்வது ஒரு சிறந்த வழி.
மேலும் வெண்டைக்காயில் உள்ள நார் சத்து நீண்ட நேரம் பசியில்லாமல் நிறைவாக உணர செய்வதன் மூலம் கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது.
நீரிழிவு நோய் :
வெண்டை காயில் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளது. இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை பராமரிக்க உதவுகிறது.
மேலும் இது மைரிசெட்டின் என்ற பொருளையும் கொண்டுள்ளது. இது தசைகளின் சர்க்கரை உறிஞ்சுதலை மேம்படுத்த உதவுகிறது.
ஆயுர்வேதத்தின் படி, காலையில் வெண்டை காயில் ஊற வைத்த தண்ணீரை குடிப்பது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவும் என்று சொல்லப்படுகிறது.
இதய ஆரோக்கியம் :.
காய்கறிகளில் உள்ள பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து குடலில் பித்தநீர் சாறு உற்பத்தியை மாற்றியமைக்க உதவுகிறது.
இதன் மூலம் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.
புற்றுநோய் :
வெண்டைக் காயில் கணிசமான அளவு உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜனேற்ற குறைபாட்டை சரி செய்கின்றன. இந்த செயல் பாடு புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கின்றன.
கண் ஆரோக்கியம் :
வைட்டமின் ஏ மற்றும் ஆக்ஸிஜனேற்ற பீட்டா கரோட்டின்கள், சாந்தீன் மற்றும் லுடீன் போன்ற சக்திவாய்ந்த ஆக்சிஜானேற்றிகள் பார்வைக்கு காரணமான உயிரணு சிதைவுக்கு காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களை அழிக்கின்றன.
நினைவாற்றல் :
வெண்டைக்காயில் உள்ள பாஸ்பரஸ், ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச் சத்துக்கள் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.
நினைவாற்றல் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த இது சிறந்த உணவாகும்.
ஒற்றைத் தலைவலி :
பொதுவாக தலைவலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. சிலருக்கு ஊட்ட சத்து குறைபாட்டினாலும் மைக்ரேன் என்று சொல்லப்படும் ஒற்றை தலைவலி ஏற்படுகின்றன.
ஒற்றைத் தலைவலியைச் சமாளிக்க உதவும் ஒரு முக்கிய ஊட்டச்சத்து மெக்னீசியம் ஆகும்.
100 கிராம் வெண்டைக்காயில் தினசரி தேவையாக பரிந்துரைக் கப்பட்ட மெக்னீசியத்தின் அளவில் 8 முதல் 10 சதவீதம் உள்ளன.
குடல் ஆரோக்கியம் :
வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து குடல் செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.
வெண்டைக்காயில் உள்ள நார் சத்து உணவில் மொத்தமாகச் சேர்த்து, குடல் வழியாக சீராக செல்ல உதவுகிறது. இது குடலின் ஒழுங்கு முறையை ஊக்கு விக்கிறது.
மேலும் இரைப்பை குடல் பிரச்சினைகளைக் குறைக்கிறது. வீக்கம், தசைப்பிடிப்பு, மலச்சிக்கல் மற்றும் வாய்வு போன்ற குடல் சம்பந்தமான கோளாறுகளை போக்குகிறது.
ஆஸ்துமா :
வைட்டமின் சி நிறைந்த உணவுகள் ஆஸ்துமாவின் ஆரம்ப அறிகுறிகளைத் தடுக்க உதவுகிறது என்று ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
வெண்டைக்காயில் உள்ள அதிக அளவு வைட்டமின் சி ஆஸ்துமாவின் அறிகுறிகளை குறைக்கும் ஒரு முக்கியமான ஆக்ஸிஜனேற்றியாகும்.
மாத விடாய் :
வெண்டைக்காயில் உள்ள அதிக கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி6 போன்ற சத்துக்கள் சோர்வு, கவலை, தலைவலி, வயிற்றுப் பிடிப்பு, கீழ் முதுகு வலி, வீக்கம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற மாதவிடாய் முன் அறிகுறிகளின் தீவிரத்தை தடுக்க அல்லது குறைக்க உதவுகிறது.
மன நலம் :
வெண்டைக்காயில் அதிக அளவு மெக்னீசியம் மற்றும் டிரிப்டோபன் எனப்படும் அமினோ அமிலம் உள்ளது.
இந்த ஊட்டச்சத்துக்கள் வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், எரிச்சல் மற்றும் மன அழுத்தத்தையும் குறைக்கின்றன.
வெண்டைக்காய் தீமைகள் :
வெண்டைக்காய் பொதுவாக ஆரோக்கியமான உணவாகும். இருப்பினும் அதிக அளவு உட்கொள்ளும் போது சிலருக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்து கின்றன.
வெண்டைக்காய் தீமைகள் பின்வருமாறு
- வெண்டைக்காயில் சோலனைன் என்ற கலவையைக் கொண்டுள்ளது. இது ஒரு நச்சு இரசாயனமாகும். இது மூட்டு வலி கீல்வாதம் மற்றும் தீவிர வீக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
- வெண்டைக்காயில் அதிக அளவிலான ஆக்சலேட்டுகள் உள்ளன. அதிக அளவில் தொடர்ந்து சாப்பிடுவது சிறுநீரக கற்களை உருவாக்க வாய்ப்புகள் உள்ளன.
- மெட்ஃபோர்மின் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக்கப் பயன்படும் மருந்து. வெண்டைக்காய் அதன் செயல்பாட்டில் குறுக்கிட்டு விளைவுகளை ரத்து செய்கிறது. எனவே இந்த மருந்தை உட்கொள்பவர்கள் வெண்டைக்காய் சாப்பிடுவதை தவிர்த்து கொள்ளவேண்டும்.
- எந்த ஒரு உணவும் அளவிற்கு அதிகமாக உட்கொள்ளும் பொழுது சில பக்க விளைவுகளை ஏற்படுத்துக்கின்றன.
- அதே போல் வெண்டைக்காயும் அளவோடு சாப்பிடுவது உடல் ஆரோக்கியதுக்கு நல்லது.