பல்வேறு ஊட்ட சத்துக்கள் நிறைந்த ஹேசல் கொட்டை

0
ஹேசல் கொட்டை நன்மைகள், பயன்கள், பக்க விளைவுகள், மற்றும் அதில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

ஹேசல் கொட்டை :

ஹேசல் நட் அல்லது ஹேசல் கொட்டை என்பது ஹேசல் எனப்படும் பழத்தின் கொட்டையாகும். அவை கோப்நட்ஸ் அல்லது ஃபில்ஃபெர்ட்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றன.

ஹேசல் கொட்டை நன்மைகள்

ஹேசல்நட் இனிப்பு சுவை கொண்டது. பச்சையாகவோ, வறுத்தோ சாப்பிடலாம். பாதாம், பிஸ்தா போன்ற மற்ற கொட்டைகளைப் போலவே புரதம், கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

ஹேஸல் கொட்டை உற்பத்தியில் உலக அளவில் துருக்கி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன.

இந்தியாவில் மிகவும் குறைந்த அளவிலே ஹேசல் நட்ஸ் சாகுபடி செய்யப்படுகிறது வடமேற்கு மலை மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா, கின்னூர் மற்றும் சம்பா மாவட்டங்களில் ஹேசல் மரங்கள் காடுகளாக வளர்ந்து காணப்படுகின்றன.

ஹேசல்நட்ஸின் பல வகைகள். உள்ளன. ஐரோப்பா, ஆசியா மற்றும் வட அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு வகையான ஹேசல்நட்ஸ் பயிரிடப் படுகின்றன.

ஹேசல் கொட்டையில் உள்ள சத்துக்கள் :

ஹேசல் கொட்டை 100 கிராமில் 628 கலோரிகள் உள்ளன. மேலும் 61 கிராம் கொழுப்பு, 15 கிராம் புரதம் மற்றும் 17 கிராம் மாவு சத்து உள்ளது.

17 கிராம் மாவுச் சத்தில் 4.3 கிராம் சர்க்கரை மற்றும் 9.7 கிராம் உணவு நார் சத்து அடங்கும்.  மேலும் 4.5 கிராம் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது.

ஹேசல் கொட்டை வைட்டமின்கள்

ஹேசல் நட் 100 கிராமில் 20 ஐயூ வைட்டமின் ஏ, 6.3 மி.கி வைட்டமின் சி, 15.03 கிராம் வைட்டமின் இ, மற்றும் 14.2 மைக்ரோ கிராம் வைட்டமின் கே உள்ளது.

100 கிராம் ஹேஸல் கொட்டையில் 4.70 மி.கி இரும்புச் சத்து , 114.00 மி.கி கால்சியம் மற்றும் 680 மி.கி பொட்டாசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ஹேசல் கொட்டை தாதுச் சத்துக்கள்

ஹேசல் கொட்டையில் வைட்டமின் பி6, ஃபோலேட், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை உள்ளன.

மேலும் அவை மோனோ- மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகளின் வளமான ஆதாரமாக இருக்கின்றன. மற்றும் ஒமேகா -6 மற்றும் ஒமேகா -9 கொழுப்பு அமிலங்கள் கனிசமான அளவு உள்ளன.

ஹேசல் கொட்டை நன்மைகள் :

ஹேசல் கொட்டை பயன்கள் மற்றும் நன்மை தீமைகள் கீழே விவரிக்கப் பட்டுள்ளன.

இதய ஆரோக்கியம் :

ஹேசல்நட்ஸ் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இவை இருதய நோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது.

மேலும், ஹேசல்நட்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன. அவை உயர் இரத்த அழுத்தத்திற்கு காரணமான ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன.

அவற்றில் அதிக அளவு பினோலிக் கலவைகள் உள்ளன. அவை இதயத்தை கொலஸ்ட்ரால் மற்றும் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது :  

ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் சில வகையான புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ஹேசல் நட்டில் காணப்படும் மாங்கனீசு சூப்பர் ஆக்சைடு டிஸ்முடேஸ் எனப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட் என்சைம்களில் ஒன்று.

இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் புற்றுநோய் வளரும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

ஹேசல்நட்டில் கனிசமான அளவு வைட்டமின் ஈ உள்ளது. இது புற்றுநோய்க்கு வழிவகுக்கும் செல்லுலார் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுகிறது.

மேலும் ஹேசல் நட்ஸ் புரோந்தோ சயனிடின்களின் முக்கிய ஆதாரமாகும்.

புரோந்தோ சயனிடின்ஸ் என்பது புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும் இரசாயன கலவை ஆகும்.

இது சில வகை புற்று நோய்களை தடுப்பதாக விலங்குகளில் நடத்த பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆயினும் இது தொடர்பாக இன்னும் அதிகமாக மேற்கொள்ள வேண்டியுள்ளன.

நுண்ணுட்ட சத்துக்களை அதிகரிக்கிறது :

தி ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில்  அன்றாட உணவில் ஹேசல் கோட்டையை சேர்த்து கொள்வது உணவில் உள்ள முக்கிய நுண்ணூட்டச் சத்துக்களை அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

இதற்கு காரணம் ஹேசல் நட்டில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் போன்றவை ஆகும்.

இந்த நுண்ணுட்ட சத்துக்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளை அதிகரிக்கிறது.

இரத்த சர்க்கரை :

ஹேசல்நட்ஸில் உள்ள ஒலிக் அமிலம் முக்கிய கொழுப்பு அமிலமாகும். இது இன்சுலின் உணர்திறனில் சாதகமான விளைவைக் கொண்டுள்ளன.

அவை இன்சுலின் உணர்திறனை சீராக்கி இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகின்றன. மேலும் ஹேசல் நட்டில் உள்ள சேர்மங்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன.

நீரிழிவு :

இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த சிற்றுணவாகும்.

இன்சுலின் உணர்திறனைக் குறைப்பதிலும்,  இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பதிலும் உதவுவதால் நீரிழிவு நோயாளிகள் ஹேசல் நட்ஸ் சாப்பிடுவது நல்லதாகும்.

உடல் எடை குறைய :

நூறு கிராம் ஹேசல் கொட்டையில் சுமார் 20 கிராம் புரதம் உள்ளது. சைவ உணவு பழக்கத்தை கொண்டவர்களுக்கு இது ஒரு சிறந்த புரத சத்து மூலமாகும்.

அவற்றில் ஆரோக்கியமான அளவு கொழுப்பு மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியிருப்பதால் அவை பசி உணர்வை கட்டுப்படுத்துகின்றன.

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவாகும்.

விந்து எண்ணிக்கை :

ஹேசல்நட்ஸ் உள்ளிட்ட கொட்டைகளை உட்கொள்வது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் மற்றும் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தலாம் என்று சமீபத்திய ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.

எலும்பு ஆரோக்கியம் :

எலும்புகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவத்தில் மெக்னீசியம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஹேசல் நட்ஸில் அதிக அளவு மெக்னீசியம் உள்ளது.

இது புதிய எலும்புகள் வளர்ந்து பழைய எலும்புகள் பலப்படுத்துகிறது. ஆஸ்டியோ போரோசிஸ் அபாயத்தில் இருக்கும் வயதான பெண்களுக்கு இது மிகவும் அவசியமாகும்.

நரம்பு மண்டலம் :

ஹேசல்நட்ஸ் நரம்பு மண்டலத்திற்கு ஒரு ஆச்சரியமான லிஃப்ட் வழங்குகிறது. செரடோனின், மெலடோனின் மற்றும் எபினெஃப்ரின் அனைத்தும் மனநிலையையும் தூக்க சுழற்சியையும் கட்டு படுத்துக்கின்றன.

ஹேசல்நட்டில் உள்ள வைட்டமின் பி6 மூளையில் உள்ள இந்த ரசாயன  தோற்றங்களை வளப்படுத்துகிறது.

சிறந்த ஆக்சிஜனேற்றியாகும் :

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் மொத்த ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ஃப்ரீ-ரேடிக்கல்கள் செல்கள் சரியாக ஆக்ஸிஜனேற்றப் படுவதைத் தடுக்கின்றன.

இதன் விளைவாக நோய் ஏற்படுகிறது. ஃப்ரீ-ரேடிக்கல்களின் உருவாக்கம் உடலில் ஒரு எதிர் விளைவை ஏற்படுத்தி செல்களை பாதிக்கிறது மற்றும் தீவிர நோய்களுக்கு வழிவகுக்கிறது.

வைட்டமின் பி யின் மூலமாகும் :  

ஹேசல் நட்ஸ் உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக வழங்குகிறது. மேலும் இந்த நன்மைகள் வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமான ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

வைட்டமின் பி இயற்கையாகவே ஹேஸல் கொட்டையில் காணப்படுகிறது. மேலும் இது எடை குறைப்பதிலும் ஆரோக்கியமான எடை பராமரிப்பிற்கும் உதவுகிறது.

ஹேசல் கொட்டை தீமைகள் :

ஹேசல்நட் சிலருக்கு ஒவ்வாமை உண்டாக்குவதாகவும் மற்றும் சிலருக்கு உயிருக்கு ஆபத்தான வகையில் சுவாச பிரச்சனைகள் (அனாபிலாக்ஸிஸ்) உள்ளிட்ட தீவிர ஒவ்வாமை எதிர்வினைகள் உருவாக்கிய தாகவும் சொல்லப்படுகிறது.

மிக மிக அரிதாக இந்த நிகழ்வுகள் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. எனினும் ஆரோக்கியமான நபர்கள் அளவோடு சாப்பிட்டால் எந்த ஒரு எதிர்வினை ஏற்பட்டதாகவும் தரவுகள் இல்லை