ஊட்ட சத்துக்கள் மிகுந்த உணவுகள் மூலம் 10 நாட்களில் உடல் சதை அதிகரிக்க எளிய வழிகள்
உடல் எடை அதிகரிக்க 10 வழிகள் :
பலர் குண்டாக இருந்து கொண்டு உடல் எடையை குறைக்க, எப்படி முயற்சி செய்கிறார்கள். அதே போல் சிலர் ஒல்லியாக இருக்கும் சிலர், குண்டாக மாற முயற்சி செய்கின்றனர்.
சிலர் எவ்வளவு தான் சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருப்பது உண்டு. அவர்களின் உடல் வாகு அப்படி. இது பரம்பரையாகவும் இருக்கலாம்.
இப்படி எப்போதும் ஒல்லியாக இருப்பவர்கள் குண்டாக மாறுவதற்கு சித்த மருத்துவம் கூறும் குறிப்புகளை பார்க்கலாம்.
உடல் எடை அதிகரிக்க எள் :
உடல் எடை அதிகரிக்க எள்லை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். நொறுக்குத் தீனி அதிகமாக உண்பவர்கள் எள் சம்பந்தமானதை உணவை அதிகமாக வாங்கி சாப்பிடலாம்.
எள்ளுப்பொடி போன்றவற்றை செய்து வைத்துக்கொண்டு, அதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இப்படி எல்லை அதிகமாக சாப்பிடுவதன் மூலம், உடல் எடை அதிகரிக்கும். இதனால், விரைவில் சதை பிடித்து, குண்டாக மாறலாம்.
உடல் பருமனாக வாழைப்பழம் :
வாழைப்பழத்தை அதிகமாக உண்பதன் மூலம், உடல் எடையைக் கூட்டலாம். அதிலும், குறி நேந்திரம் பழத்தை தேனோடு சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும் சிறுவர்களுக்கும் இதை கொடுக்கலாம்.
உடல் பருமனாக வெந்தயம் :
ஐம்பது கிராம் வெந்தயம் எடுத்துக்கொண்டு அதை நன்கு வேகவைத்து அதோடு சிறிதளவு நெய் மற்றும் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால், ஓரிரு மாதத்தில் உடல் எடை அதிகரித்து குண்டாக மாற முடியும்.
உடல் பருமனாக முட்டை :
உடல் எடை அதிகரிக்க தினமும் ஒன்று முதல் இரண்டு முட்டை சாப்பிடலாம். அதே போல தினமும் வேர்க்கடலையை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை அதிகரிக்கும்.
வேர்க்கடலையால் ஆன தின்பண்டங்களையும் சாப்பிடலாம். இதன் மூலம், எளிதில் குண்டாக மாற முடியும்.
உடல் பருமனாக கொண்டை கடலை :
தினமும் பத்து முதல் பதினைந்து பச்சை கொண்டை கடலையை இரவில் நீரில் ஊற வைத்து காலை எழுந்ததும் சாப்பிட வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் சில வாரங்களில் குண்டாக முடியும்.
உடல் பருமனாக உருளை கிழங்கு :
உருளைக்கிழங்கை வேகவைத்து தினமும் சாப்பிடலாம். அதே போல உணவில் தினமும் தயிர் சேர்த்துக் கொள்ளலாம். இப்படி செய்வதன் மூலம் படிப்படியாக குண்டாக முடியும். மேலே கூறிய குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி உடல் எடையை விரைவில் அதிகரித்து குண்டாக மாறலாம்.
உடல் எடை அதிகரிக்க சாப்பாடு :
மூன்று வேளை சாப்பிடு உணவை ஆறு வேளையாக பிரித்து வைத்துக்கொண்டு குண்டாக விரும்புகிறவர்கள் எப்போதும் சாப்பிடுவதை விட கூடுதலாக ஐநூறு கலோரி மட்டும் சாப்பிட்டால் போதும். இதனால் வாரத்துக்கு அறுநூற்று ஐம்பது கிராம் வீதம் உடல் எடை அதிகரித்து வரும்.
உடல் எடை அதிகரிக்க சோயா :
சோயாமாவில் பூரி, சப்பாத்தி செய்து சாப்பிடுவது, உடல் எடையை அதிகரிக்க உதவும். பெண் குழந்தைகளுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் உயர்ந்த சத்துணவு இது சோயாமாவில் செய்யப்பட்ட முறுக்கு பக்கோடா முதலியவை நல்ல நொறுக்கு தீனிகள்.
உடல் எடை அதிகரிக்க சத்துக்கள்:
ஒல்லியானவர்கள் சாப்பிடும் உணவு வகைகளில் எண்பது சதவீதம் திட உணவாகவும், மீதி திரவமாகவும் இருக்க வேண்டும். இதுவே உடல் எடை சரிவிகிதத்தில் அதிகரிக்க உதவும்.
உணவில் உள்ள வைட்டமின்களையும் மினரல்கலையும் நன்கு உறிஞ்சி கொண்டு கழிவுகளை தாமதமின்றி வெளியேற்ற பி வைட்டமின்கள் அவசியம் தேவை.
திட உணவான கைக்குத்தல் அரிசி கம்பு கேழ்வரகு பருப்பு கடலை முதலியவற்றில் பி வைட்டமின்கள் உள்ளன.
சாப்பிடுவதற்கு முன்பாக தண்ணீர் குடிப்பதை தவிருங்கள். அது உங்களை முழு வயிற்றுக்கும் சாப்பிட விடாமல் செய்துவிடும். வயிறு நிரம்பிய உணர்வையும் ஏற்படுத்திவிடும்.
மேலே சொன்னபடி உணவு வகைகளை முழு திருப்தியுடன் சாப்பிட்டால் உடல் எடையும் கூடும் சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும்