வாய்வு முத்திரை (அ) அபான முத்திரை பயன்கள்

0
வாய்வு முத்திரை (அ) அபான முத்திரை செய்முறை மற்றும் பயன்கள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது.

வாய்வு முத்திரை (அ) அபான முத்திரை :

வயிற்று வலி, வயிறு உப்புசம், வாய்வு தொப்பை போன்ற கோளாறுகளுக்கு வாய்வு முத்திரை சிலருக்கு தீர்வு தருவதாக சொல்லப்படுகிறது. இது அபான முத்திரை என்று அழைக்கப்படுகிறது.

மேலும் இது எழுதான செய்முறை என்பதால் வாய்வு சம்பந்தமான கோளாறுகள் உள்ள அனைவரும் செய்து பார்க்கலாம்.

பலன் கிடைக்க இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து செய்து பார்க்க வேண்டும். அபான முத்திரை செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அபான முத்திரை செய்முறை :

வாயு முத்திரை நமது ஆள்காட்டி விரலை பெருவிரலின் அடிபாகத்தில் தொடும்படி வைத்து பெருவிரலை படத்தில் காட்டியுள்ளபடி லேசாக அழுத்த வேண்டும். மற்ற விரல்களை நேராக வைத்துக் கொள்ள வேண்டும். 

வாய்வு முத்திரையை இரு கைகளிலும் செய்ய வேண்டும். இந்த முத்திரையை தினமும் அதிகபட்சம் நாற்பத்தைந்து நிமிடங்களும், குறைந்தபட்சம் பதினைந்து நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும்.
 
வாய்வு முத்திரை (அ) அபான முத்திரை

இந்த முத்திரை பயிற்சி காலையில் செய்வது மிகவும் நல்லது.

அபான முத்திரை பயன்கள் :

இந்த முத்திரை வயிறு குடல்களில் உள்ள வாயு தொந்தரவுகளை போக்கும். மலச்சிக்கலை நீக்கும். வாத நோய், மூட்டு அலர்ஜி, கீழ்வாதம், கை, கால் நடுக்கம், பக்கவாதம் போன்ற நோய்களை குணப்படுத்தும். 

கழுத்து, எழும்பலர்ஜி, முகவாதம், தலைசுற்றல் நோய்களை குணப்படுத்தும். மன அழுத்தம்,  பொறுமையின்மை, பதட்டம் இவைகளை போக்கும். நோய் குணமானவுடன் பயிற்சியை தொடர்ந்து செய்வதை நிறுத்திவிட வேண்டும்.