பொதுவாகவே நமது உடல் சூடாகிவிட்டது என்றால் நமது வீட்டில் இருக்கும் பாட்டிமார்கள் தொப்புளைச் சுற்றி எண்ணெய் வைக்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.
இதற்கு காரணம் தொப்புள் உடலில் உள்ள அனைத்து நரம்புகளின் மையப் புள்ளியாக கருதப்படுவது தான்.
இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு தொப்புள் பகுதியில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு தொப்புளைச் சுற்றி ஒரு அங்குலம் வரை வட்ட வடிவில் மசாஜ் செய்வதன் மூலம் பல பிரச்சனைகள் தீர்வதாக மருத்துவ குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன.
தொப்புளில் எண்ணெய் வைப்பதால், கண்கள் வறட்சி, கண் பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
முடி பளபளப்பாகும், உதடுகள் அழகாகும், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகின்றது.
எதற்கு எந்த எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும் இதனால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்
தூங்குவதற்கு முன்பாக இரவில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் மூன்று சொட்டு எடுத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குலம் அளவிற்கு மசாஜ் செய்தால் கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, தலைமுடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலிக்கு :
நல்லெண்ணெய்யை அரை ஸ்பூன் அளவு எடுத்து தொப்புளை சுற்றி இடது புறமாகவும், வலது புறமாகவும் தேய்த்தால் விரைவாக வயிற்று வலி குறையும்.
நாம் குழந்தையாக இருக்கும்போது வயிற்று வலியினால் துடிக்கும் போது, நமது வீட்டுப் பெரியவர்கள் சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளைச் சுற்றி தடவி விடுவார்கள்.
வலியும் ஒரு சில நிமிடங்களில் குணமாகும். அதே வழியில்தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.
எலுமிச்சை எண்ணெய் வைத்தால் உடலில் பூஞ்சைத் தொற்று காரணமாக வரும் வயிற்று வலி குணமாகும். தொற்றும் அழிந்துவிடும்.
வாயு கோளாறுகள் இருந்தால் சிறிது பெருங்காயத்தை நீரில் கரைத்து தொப்புளில் தடவுவது உண்டு. அப்படி தடவுவதால் உடனடி பலன் கிடைக்கும்.
முழங்கால் வலியிலிருந்து விடுபட :
கடுகு எண்ணெயை, தொப்புளில் விட்டு தேய்த்து வந்தால் நரம்புத் தளர்ச்சி சரியாகும். உடல்நடுக்கம் குறையும். வறட்சியினால் ஏற்படும் உதடு வெடிப்பு சரியாகும். சருமம் வறட்சியில் இருந்து விடுபடும். முழங்கால் வலியிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.
தூங்குவதற்கு முன்பாக இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் அதாவது விளக்கெண்ணெய் வைத்து தொப்புளைச் சுற்றி ஒன்றரை அங்குலம் அளவிற்கு மசாஜ் செய்து வந்தால் முழங்கால் வலி குணமாகும்.
மலட்டுத்தன்மை நீங்க :
தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை தொப்புளில் வைப்பதால் பற்பல நன்மைகள் இருக்கின்றன.
இந்த இரண்டு எண்ணெயில் ஏதாவது ஒன்றை தொப்புள் விட்டு தேய்த்து வந்தால் ஆண், பெண் மலட்டுத்தன்மை நீங்கும்.
குழந்தை இல்லாம தவித்து வரும் பெண்களுக்கு இது ஒரு நல்ல வைத்தியமாக இருக்கும். கூடிய விரைவிலேயே நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்.
குறிப்பாக கருச்சிதைவு இருக்கும் பெண்கள் தினந்தோறும் ஆலிவ் எண்ணெயை தொப்புளைச் சுற்றி தடவிக் கொண்டு படுப்பது மிகவும் நல்லது.
சருமம் பிரச்சனையிலிருந்து விடுபட :
சரும பிரச்சனையான முகப்பரு, தேமல், சொறி, படை போன்ற பிரச்சனைக்கு வேப்பண்ணையை தொப்புளில் விட்டு தேய்த்து வர வேண்டும்.
கண்ணுக்கு தெரியாத நோய் கிருமிகளால் தோலில் ஏற்படும் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், இந்த வேப்ப எண்ணெய் சரி செய்து விடும்.
தூங்குவதற்கு முன்பாக இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் மூன்று சொட்டு வைத்து தொப்புளைச் சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்தால் மூட்டு வலி நடுக்கம், மற்றும் சோம்பல் போன்றவை குணமாகும். மேலும், உலர்ந்த சருமம் பொலிவு பெறும்
நெய்யை தொப்புளில் விட்டு தடவி வந்தால், முகத்தின் அழகு கூடும். வறட்சி தன்மை நீங்கும்
பாதாம் எண்ணெயை, தொப்புளில் தடவி மசாஜ் செய்தால் சருமம் பளபளக்கும் முகம் இளமையாக மாறும். சுருக்கங்கள் மறையும்.
தினமும் இரவில் தொப்புளில் பாதாம்எண்ணெய் தடவி மசாஜ் செய்தால் பத்து நாட்களில் முகம் பளபளப்பாக்கிறது.
ஆலிவ் ஆயிலை தொப்புளில் தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.