நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகள்

0

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகள் :

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகளான பழங்கள், காய்கறிகள், மஞ்சள், முட்டை, தயிர் மற்றும் பூண்டு பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி

வைரஸ் பரவல் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், நோய் தொற்றிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்காக, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள் வதனால், எளிதாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கீரைகள் :

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது கீரைகள் வகைகளாகும்.

கீரைகளில் வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் A, ஜிங்க் சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து ஆகியவைகள் எல்லாம் அதிக அளவில் இருக்கின்றன.

இவைகள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுகள் உடலில் அண்டாமல் பார்த்துக் கொள்கின்றன.

இதனால் தினசரி உணவில் ஏதேனும் ஒரு கீரையை சேர்த்து சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.  

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பழங்கள்

பொதுவாக சிட்ரஸ் பழங்களில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன.

எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, நெல்லிக்காய். இவைகளில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்து இருக்கின்றது.

வைட்டமின் சி, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் அளவை அதிகப்படுத்தி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.

இதனால், பருவகால சளி, இருமல், காய்ச்சல், பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்குதல்களை எதிர்த்து நமது உடலை பாதுகாக்கின்றது.

கொய்யாப் பழம் :

வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள மற்றொரு பழம் இந்த கொய்யாப் பழம்.

தினமும் ஒரு கொய்யாப் பழம் எடுத்துக் கொள்வதால், உடலில் RDI அளவு இதில் ஒரு ஆரஞ்சு பழத்தில் இருப்பதை விட, அதிகமான அளவில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து இருக்கின்றது.

இதில் இருக்கும் ஆன்டி மைக்ரோவியல்  தன்மை, உடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் தொற்று நோயை உண்டாக்கும்  வைரஸ்களை அழித்து, நமது உடலை பாதுகாக்கின்றது.

பப்பாளி :

ஒரு பப்பாளிப் பழத்தில் தினசரி தேவைக்கான வைட்டமின்  சி  சத்தில் இரண்டு மடங்கு இருக்கின்றது. இதில் பப்பேன் என்ற ஒரு வேதிப்பொருள் இருக்கின்றது.

இது செரிமானத்திற்கு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல் வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பதற்கும் உதவி செய்கின்றது.

மேலும் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் போலிப் போன்றவையும் பப்பாளிப் பழத்தில் அதிக அளவில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சருமம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்து கின்றது.

பேரிச் சம்பழம் :

பேரிச்சம் பழத்தில் சத்து அதிகமாக இருக்கின்றது. பேரிச்சம்பழத்தை தேனுடன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது நமது உடல் வலு பெறுவதோடு மட்டுமல்லாமல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் சளி, காய்ச்சல் மற்றும் சம்பந்தமான நோய்கள் நம்மை அண்டாமல், பாதுகாத்துக் கொள்ள முடியும். 

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முட்டை :

முட்டையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. முட்டையில் உள்ள வைட்டமின் டி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் முக்கியமான ஒன்று.

இது மட்டுமில்லாமல் முட்டையில் இருக்கும் புரதம், இரத்தத்தில் புதிய செல்கள் உருவாவதற்கும் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகரிப்பதற்கும், மிகவும் உதவியாக இருக்கின்றது.

உங்களுக்கு கொலஸ்ட்ரால் இல்லை என்றால், தினமும் ஒரு முட்டையை சாப்பிட்டு வரும் பொழுது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மஞ்சள் :

மஞ்சள்  இயற்கையான ஒரு அன்டிபையோடிக் என்று நம் அனைவருக்குமே தெரியும். மஞ்சளில் உள்ள குர்குமின்  என்ற வேதிப்பொருள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்க, பெரிதும் உதவியாக இருக்கின்றது.

மஞ்சளை அதிகம் பயன்படுத்துவதால் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களிடம் இருந்து பாதுகாப்பு  கிடைக்கும்.

அதுமட்டுமில்லாமல் காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொற்று கிருமிகளால் உண்டாகக்கூடிய பிரச்சனைகளில் இருந்தும் நமக்கு பாதுகாப்பு கிடைக்கின்றது.

இதனால் நாம் தினமும் சமைக்கும் உணவுகளில், மஞ்சள் சேர்த்து சமைப்பது மிகவும் அவசியம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பூண்டு :

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காய்கறிகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது பூண்டு ஆகும். ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவத்தில் தலைவலியில் இருந்து புற்றுநோய் வரை அனைத்து விதமான நோய்களையும் குணப்படுத்த மருந்துகள் தயாரிக்க அவசியம் சேர்க்கும் ஒரு பொருள் இந்த பூண்டு.

பூண்டில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு பெரிதும் உதவி செய்கின்றது.

இதனால் நமது உடலை பாதிக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக் களிடம் இருந்து சிறந்த பாதுகாப்பு கிடைக்கின்றது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தயிர் :

தயிரில் உள்ள நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு உதவி செய்கின்றது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இம்முனோ குளோபோலினை  அதிக அளவில் சுரக்கவும் உதவி செய்கின்றது.

மதிய உணவில் தயிர் சேர்த்து சாப்பிடு பொழுது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

நோய்த் தொற்றுகள் பரவிக் கொண்டிருக்கும், இந்த காலகட்டத்தில், நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை, வலுவாக வைச்சிருக்க வேண்டியது அவசியம்.

இயற்கையாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சாப்பிட்டு நோய் தொற்றிலிருந்து நமது உடலை பாதுகாப்ப  செய்யுங்க.