பல் கறை நீங்கி வெண்மையாக எளிய வழிகள்

0

மஞ்சள் கரை நீக்கி வெண்மையான பற்களை பெறபல எளிய வழிகள் உள்ளன. அவற்றில் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் கரை :

மஞ்சள், கறை படிந்த பற்களைப் பார்ப்பது யாருக்கும் பிடிக்காது. பிரகாசமாக வெண்மையான பற்கள் இருப்பது அழகாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல் மேலும் புன்னகைக்க நம்பிக்கையையும் தருகிறது. ஆனால் எல்லோரும் முத்து போன்ற வெள்ளை பற்களால்  ஆசீர்வதிக்கப்படுவதில்லை.

வெண்மையான பற்கள்

மேலும், அனைவருக்கும் ஆயிரக்கான கணக்கான ருபாய் செலவழித்து நவீன  சிகிச்சைகள் பெற நேரம் இல்லை.

எனவே ஒரு மெகாவாட் புன்னகையைப் பெற நீங்கள் என்ன செய்ய முடியும்? சில வீட்டுவைத்தியங்கள் அதற்கு உதவுகின்றன. ஆனால் முதலில், மஞ்சள் பற்களுக்கு என்ன காரணம் பார்ப்போம்.

மஞ்சள் பற்களுக்கு காரணம் :

பற்களில் கரை படியும் போது பல் நிறமாற்றம் நிகழ்கிறது, அது மஞ்சள் நிறமாக தோன்றுகிறது.

உணவுத் தேர்வுகள், மோசமான பல் சுகாதாரம், புகைபிடித்தல், முதுமை, மரபியல், சூழல் மற்றும் சில மருந்துகள் உள்ளிட்ட பல காரணங்களால் பற்கள் மஞ்சள் நிறமாகிறது.

சில நோய்கள் மற்றும் சிகிச்சைகள் உங்கள் பற்களின் வெளிப்புற அமைப்பையும் பாதிக்கலாம். வெள்ளை பற்களை பெற உதவும் சில வீட்டு வைத்தியங்களைப் பார்க்கலாம்.

மஞ்சள் கரை நீக்கி வெண்மையான பற்களை பெற :

 ஆயில் புள்ளிங் :

பல் பளபளக்க தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி ஆயில் புல்லிங்க்  செய்தால் இது  பல் ஆரோக்கியத்திற்கான நன்மைகளை வழங்குகிறது.

இது பிளேக் உருவாவதைக் குறைக்க உதவுகிறது மேலும் ஈறுகளின் அழற்சியைப் போக்க உதவுகிறது. இது பற்கள் வெண்மையாக வழிவகுக்கிறது.

ஆயில் புள்ளிங்க் செய்யும் முறை :

பற்கள் பளிச்சிட ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில் வைத்து  சுமார் 10 நிமிடங்கள் வைத்து அலசவும். 10 நிமிடங்கள் கழித்து  எண்ணெயை  வெளியே துப்பவும். பிறகு சாதாரண தண்ணீரைப் பயன்படுத்தி வாயை சுத்தப் படுத்தவும்.

அதன் பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து  பல் துலக்கவும். வெண்மையான  பற்களைப் பெற  இதை தினமும் செய்யலாம்.

 

பல் கரை நீங்க பேக்கிங் சோடா :

பேக்கிங் சோடாவில் இயற்கையாகவே பற்களை வெண்மையாக்கும் பண்புகள் உள்ளன. 

பேக்கிங் சோடா பல வகையான பற்பசைகளில் பயன்படுத்தப் படுவதற்கான முக்கிய காரணம் இதுதான். இது கறைகளை அகற்ற உதவுகிறது.

பல் கரை நீங்க பேக்கிங் சோடா உபயோகப் படுத்தும் முறை :

பல் காரை நீங்க ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து ஒரு சில துளிகள் தண்ணீரில் கலந்து  பேஸ்ட் போல தயாரிக்கவும்.

இரண்டு நிமிடங்களுக்கு இந்த பேஸ்டைப்  பயன்படுத்தி பல் துலக்குங்கள்.

இதைச் செய்தபின் வாயை தண்ணீர் கொண்டு சுத்தப் படுத்தவும்.

தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை இதைச் செய்வது மஞ்சள் பற்களைப் போக்க உதவும்.

 

பல் கரை நீங்க ஆப்பிள் சைடர் வினிகர் :

ஆப்பிள் சைடர் வினிகர் என்பது உங்கள் பற்கள் உட்பட உங்கள் உடலின் பல பகுதிகளுக்கு நன்மைகளை வழங்கும் ஒரு மூலப்பொருள். இது கறைகளை அகற்றவும், பற்களை வெண்மையாக்கவும் உதவுகிறது.

இது பற்களின் கறைகளை போக்கும்  ப்ளீச்சிங் பண்புகளை கொண்டுள்ளது.

பல் கரை நீங்க ஆப்பிள் சைடர் வினிகர் உபயோகப் படுத்தும் முறை

ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்து ஒரு கப் தண்ணீரில் கலக்கவும். கலவையை ஒரு நிமிடம் வாயில் வைத்து அலசவும். பிறகு வாயை சாதாரண நீரில் கழுவவும்.

பல் துலக்குவதற்கு முன் தினமும் ஒரு முறை இதைச் செய்தால் வெண்மையான பற்களையோ பெறலாம். 

பல் கரை நீங்க பழ தோல்கள் :

வாழைப்பழம், ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை ஆகியவற்றில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது உங்கள் பற்களை வெண்மையாக்க உதவும். வாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைக்க உதவும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் இதில் உள்ளன.

ஒரு வாழைப்பழம், ஆரஞ்சு அல்லது எலுமிச்சை தோலை எடுத்து பற்களை துடைக்கவும். பல் துலக்குவதற்கு முன் ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் விட்டு விடுங்கள். வெற்று நீரில் உங்கள் வாயை கழுவவும்.

தினமும் ஒரு முறை இதைச் செய்தால் வெண்மையான பற்களைப் பெறலாம்.

 

பற்களில் மஞ்சள் கரை நீங்க கரி 

கரி கறைகளை அகற்றவும், வாயில் உள்ள பாக்டீரியா மற்றும் நச்சுகளை அகற்றவும் உதவும் என்று நம்பப்படுகிறது.

பல் துலக்கும் பொழுது  சில தூள் கரியை வைத்து, இரண்டு நிமிடங்களுக்கு மெதுவாக பல் துலக்குங்கள். பிறகு உங்கள் வாயை தண்ணீரில் கழுவவும்.

கரியை  பல்துலக்க பயன்படுத்தும் பொழுது ஈறுகளில் சிராய்ப்பு காரணமாக காயம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கவனமாக இருக்க வேண்டும்.