![]()
திணை நன்மைகள், பக்க விளைவுகள் மற்றும் திணை தீமைகள் அதில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது ள். சத்துக்கள், திணை பிற பெயர்கள்
திணை அரிசி :
திணை அரிசி நம் முன்னோர்கள் அதிகம் விரும்பி பயன்படுத்திய சிறுதானிய உணவுகளில் ஒன்று. உலகிலேயே அதிகம் பயிரிடப்படக்கூடிய தானியம் திணை ஆகும்.
இதனுடைய தாயகம் சீனா இது சைனீஸ் மில்லெட் எனவும் அழைக்கப் படுகிறது.

திணை அரிசியின் பிற பெயர்கள் :
திணையின் அறிவியல் பெயர் செட்டாரியா இட்டாளிக்கா ஆகும்.
இது தமிழ் மற்றும் மலையாலத்தில் திணை என்றும், ஆங்கிலத்தில் போக்ஸ்டைல் மில்லட்ஸ் (Foxtail millet) என்றும், ஹிந்தியில் கங்னி என்றும், தெலுங்கில் கொர்ரா என்றும் கன்னடத்தில் நவனே என்றும் அழைக்கப்படுகிறது.
திணை அரிசி வகைகள் :
திணையில் வெந்தினை, கருந்தினை, மஞ்சள் தினை என மூன்று வகையான திணை அரிசிகள் உண்டு. பொதுவாக திணை அரிசியில உடலிற்கு தேவையான பல சத்துக்கள் உள்ளன.
திணை பயிரிடப் படும் நாடுகள் :
திணை அரிசி உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில், முக்கியமாக ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிக அளவு பயிரிடப் படுகின்றன.
திணை அரிசியில் உள்ள சத்துக்கள் :
புரதம், கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, தயாமீன், ரிபோப்ளோவின், நியாசின், மற்றும் அதிகப்படியான அமினோ அமிலங்களும் உள்ளன. இவ்வளவு சத்துக்கள் கொண்ட நம் உடலுக்கு உணவாக மட்டுமல்லாமல் மருந்தாகவும் செயல்படக்கூடியது.
திணை அரிசியின் நன்மைகள் :
திணை அரிசியை, அன்றாட உணவுகளில் சேர்த்து சாப்பிடும் பொழுது நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் மற்றும் குணமாகக் கூடிய நோய்கள்
உடலை உறுதியாக்க :
உடற்பயிற்சி மற்றும் கடினமான வேலை செய்பவர்களுக்கு மிகச்சிறந்த உணவு திணை அரிசியாகும். திணை அரிசியில் தசைகளுக்கும், எலும்புகளுக்கு அவசியமான புரதம் மற்றும் கால்சியம் அதிக அளவில் நிறைந்துள்ளது.
இது தசைகள் மற்றும் எலும்புகள் உறுதியாகவும், வலிமையாகவும் இருக்க உதவி செய்கிறது.
மேலும் நீண்ட நாட்கள் நோயினால் அவதிபட்டு உடல் மெலிந்தவர்களின் உடலையும் தேற்றும் ஆற்றல் திணை அரிசிக்கு உண்டு.
உடலை உறுதியாகவும், வலிமையாகவும் வைத்திருக்க விரும்புபவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவு திணை அரிசி.
இருதயத்தை பலப்படுத்த :
திணை அரிசியில் இதய ஆரோக்கியத்துக்கு அவசியமான வைட்டமின் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இது இருதய தசைகளை பலப்படுத்தி, இருதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவி செய்கிறது.
இதில் இருக்கக்கூடிய நல்ல கொழுப்பு அமிலங்கள் இதயத்தில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
பலவீனமான இருதயம் இருக்கிறவர்கள் திணை அரிசி சாப்பிட்டு வர மிகவும் நல்லது.
சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு :
திணை ஒரு லோ கிளைசெமிக் இன்டெக்ஸ் குறியீடு கொண்ட உணவு ஆகும்.
எனவே இது இரத்தத்தில் மெதுவாக சர்க்கரையாக மாறுவதால் இரத்தத்தில் திடீரென சர்க்கரையின் அளவு கூடுவது தடுக்கப்படுகிறது.
டைப் டூ சர்க்கரை நோயினால் அவதிப்படுபவர்கள் அரிசிக்கு மாற்றாக திணை அரிசியை பயன்படுத்தி வர இரத்த சர்க்கரையின் அளவுகள் சீராகும்.
ஆண்களின் உயிரணுக்களை அதிகரிக்க :
மாறி வரக்கூடிய உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக இன்றைய தலைமுறை ஆண்கள் பலரும் உயிரணு குறைபாடு மலட்டுத்தன்மை போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
அப்படிப்பட்டவர்கள் திணை மாவுடன் சிறிது நெய் சேர்த்து களியாக சாப்பிட்டு வர ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ஆண்மை குறைபாடு நீங்கும்.
பெண்களுக்கு மிகவும் நல்லது :
பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் கோளாறு காரணமாக அனீமியா போன்ற பிரச்சனைகளால் அவதிப் படுபவர்கள் திணை மாவுடன் கருப்பட்டி சேர்த்து உருண்டைகளாக தினமும் சாப்பிட்டு வர கருப்பை பலப்பட்டு கருப்பை சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.
மேலும் திணையில் இருக்கக்கூடிய அதிகப்படியான இரும்புச்சத்து உடலில் புதிய இரத்த செல்களை உற்பத்தி செய்து, அனீமியாவையும் போக்குகிறது.
அல்சீமர் நோயை தடுக்க :
அல்சீமர் என்று சொல்லக்கூடிய ஞாபக மறதி பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் திணை அரிசி சாப்பிட்டு வர திணை அரிசியில் இருக்கக்கூடிய அதிகப்படியான அமினோ அமிலங்கள் மூளையில் ஆக்சிஜன் சீராக இருக்கவும், புதிய செல்களை உற்பத்தி செய்வதற்கும் உதவி செய்வதன் மூலம் ஞாபக மறதி நோயை குணமாக்குகிறது.
வளரும் குழந்தைகளுக்கு திணை அரிசியை உணவாக கொடுத்து வர, அவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
தசைப்பிடிப்பை தடுக்க :
நீண்ட நேரம் உக்கார்ந்த இடத்திலேயே இருந்து வேலை பார்ப்பவர்களுக்கு தசைப்பிடிப்பு மற்றும் கால் மருத்து போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
அவர்கள் திணை அரிசியை சாப்பிட்டு வர நரம்புகளில் ரத்த ஓட்டம் சீராக இருக்கவும், உடலின் அனைத்து செல்களுக்கும் பிராண வாயு என்று சொல்லக்கூடிய ஆக்சிஜன் பரிமாற்றம் சீராக இருக்கவும் உதவி செய்கிறது.
இதன் மூலமாக இது போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படுகிறது.
சிறுநீரை பெருக்க :
சிறுநீரகங்களில் கற்கள், அடைப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற காரணங்களினால், சிறுநீர் சரியாக வெளியேற்ற முடியாமல் சிரமப் படுபவர்கள் திணை அரிசி சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
இது உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து, உடல் வறட்சியை நீக்கி, சிறுநீரைப் பெருக்கி, சிறுநீர் நன்கு பிரிய உதவி செய்கிறது.
மேலும் உடலில் தேவையில்லாமல் இருக்கக்கூடிய கழிவுகளையும் வெளியேற்ற உதவுகிறது.
சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகள் கொண்டவர்கள் திணை அரிசியை சாப்பிட்டு வர, மிகவும் நல்லது.
செரிமான உறுப்புகளை பலப்படுத்த :
100 கிராம் திணை அரிசியில 6.7 கிராம், செரிமானத்துக்கு தேவையான நார்ச்சத்து உள்ளது.
இது சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணம் ஆவதற்கு உதவி செய்வதோடு செரிமான உறுப்புகளான இரைப்பை, கல்லீரல், கணையம் போன்ற உறுப்புகளை பலப்படுத்தி பாதுகாக்கிறது.
செரிமான உறுப்புகள் தொடர்பான பிரச்சனை இருபவர்கள் திணை அரிசியை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லதாகும்.
குளுடன் அல்ர்ஜியை போக்க :
கோதுமை, மைதா, போன்ற உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள் எப்போதும் அதிக சோர்வு, வயிற்று இரைச்சல், தலை வலி மற்றும், தோலில் அல்ர்ஜி, எரிச்சல், போன்ற பிரச்சனைகளால் அவதிபடுவர். இது குளுட்டன் அலர்ஜி எனப்படுகிறது.
திணை அரிசி, ஒரு முற்றிலும், குளுட்டன் பிரீ உணவாகும். எனவே குளுட்டன் அல்ர்ஜியினால் அவதிப் படுபவர்கள் குளுட்டன் உணவுகளுக்கு மாற்றாக சாப்பிட சிறந்த உணவு திணை அரிசி ஆகும்.