முலாம் பழம் நன்மைகள் தீமைகள் மற்றும் சத்துக்கள்

0

 

முலாம் பழம் (கிருணி பழம்) :

முலாம் பழம் (அ) கிருணி பழம். கோடை காலம் ஆரம்பித்து விட்டாலே பழக்கடைகளிலும் சாலையோர கடைகளிலும் தர்பூசணிக்கு அடுத்தபடியாக அதிகம் காணப்படக்கூடிய ஒரு பழம் முலாம்பழம். இதன் மற்றொரு பெயர் கிருனி பழம்.

முலாம் பழம்

கிருணிப் பழம் முலாம் பழம் என்றும் அழைக்கப் படுகிறது. ஆங்கிலத்தில் கான்டலூப்,  ஹனி பனி, மாஷ் என்றும் கன்னடத்தில் கெக்கரிக்கே ஹன்னு என்றும் தெலுங்கு மற்றும் இந்தியில் கர்பூஜா என்றும் அழைக்கப் படுகிறது.

முலாம் பழத்தில் உள்ள சத்துக்கள் :

முலாம் பழம் சத்துக்கள் அட்டவணை 1
முலாம் பழம் 100 கிராமில் 34 கலோரிகள் உள்ளன. மேலும் 0.2 கிராம் கொழுப்பு, 0.8 கிராம் புரதம் மற்றும் 8.2 கிராம் மாவு சத்து உள்ளது. மாவு சத்தில் 7.9 கிராம் சர்க்கரை மற்றும் 0.9 நார், சத்தும் அடங்கும்.

வைட்டமின்கள் :

முலாம் பழம் சத்துக்கள் அட்டவணை 2

100 கிராம் முலாம்பழத்தில் 169 மைக்ரோ கிராம் வைட்டமின் ஏ, 36.7 மில்லி கிராம் வைட்டமின் சி 0.05 மில்லி கிராம் வைட்டமின் இ மற்றும் 2.5 மைக்ரோ கிராம் வைட்டமின் கே யும் உள்ளன

தாது சத்துக்கள் :

முலாம் பழம் சத்துக்கள் அட்டவணை 3

100 கிராம் மூலாம் பழத்தில் 0.21 மி.கி இரும்பு, 9.00 மி.கி கால்சியம், 267 மி.கி பொட்டாசியம் மற்றும் 12 மி.கி மக்னேசியம் உள்ளது.

முலாம் பழத்தில் கரோட்டினாய்டுகள், லுடீன், ஜீயாக்சாண்டின் மற்றும் பீட்டா-கிரிப்டோக்சாண்டின் உள்ளிட்ட பல அறியப்படாத ஊட்டச் சத்துக்கள் உள்ளன.

கிருணி பழத்தில் லுடீன், பீட்டா கரோட்டின் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற மூன்று சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. அவை கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

முலாம் பழம் நன்மைகள் :

முலாம்பழம் அதிகப்படியான சத்துக்களை கொண்ட ஒரு பழம் என்றாலும் கூட, இதனுடைய மனம் பலருக்கு பிடிக்காது. இதன் காரணமாகவே பலரும் இதனை வாங்கி சாப்பிட விரும்ப மாட்டார்கள்.

அத்தகைய முலாம் பழத்தினை சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

உடல் சூட்டைப் போக்குகிறது :

பொதுவாக வெயில் காலம் ஆரம்பித்து விட்டால் உடல் உஷ்ணம் அதிகரித்து வயிற்று வலி, சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல், தோலில் காந்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் வருகின்றன.

அத்தகைய உபாதைகளால் பாதிக்கப் படுபவர்கள்  இந்த கிருணி பழத்தினை சாப்பிட்டு வந்தால் அதில்  இருக்கக்கூடிய அதிகப்படியான நீர்ச்சத்து உடலின் நீர் தேவையை பூர்த்தி செய்து டிஹைடிரேட்  ஆகாமல் தடுப்பதோடு, உடலை குளிர்ச்சியாக வைக்கவும் உதவுகிறது.

செரிமானக் கோளாறுகள் நீங்க : 

முலாம்பழம், வயிற்றுக்கு நல்ல குளிர்ச்சி தரக்கூடியது. வயிற்றில் இருக்கக்கூடிய அமிலத்தை சமநிலைப்படுத்தி,  உணவை எளிதில் ஜீரணமாக உதவி செய்கிறது. இதன் மூலமாக வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், வயிறு உப்புசம் போன்ற செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

மேலும் முலாம்பழத்தில் உள்ள அதிகப்படியான நார் சத்து மலக்குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கலையும் போக்குகிறது.

இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான வைட்டமின் சி வயிற்று புண்கள் என்று சொல்லக்கூடிய அல்சரை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

ஆகையால் செரிமானம் சார்ந்த உடல் உபாதைகளால் அவதி போடுகிறவர்கள்  மதியம் மற்றும் இரவு உணவு சாப்பிடும்  முன்பு முலாம்பழத்தினை சாப்பிட்டு வர செரிமானம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும்  மிக விரைவில் குணமாகும்.

கேன்சர் அபாயத்தை குறைக்கிறது:

கிருணி பழத்தில் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடக்கூடிய ஆன்டி ஆக்ஸிடன்கள், பிளேவனாய்டுகள் மற்றும் கரோடினாய்டுகள் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.

இது உடலில் செல்களை அழிப்பது மட்டுமில்லாமல் புற்றுநோய் உருவாவதற்கு காரணியாக இருக்கக்கூடிய பிரீ  ராடிகல்ஸ் என்று சொல்லக்கூடிய நச்சுக் கழிவு களையும் வெளியேற்றுகிறது.

கிருணி பழத்தை தொடர்ந்து உணவுகளோடு சேர்த்து சாப்பிட்டு வர மலக்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற புற்றுநோய்கள் வரும் வாய்ப்பு குறைகிறது.

குறிப்பாக நுரையீரல் புற்றுநோய் வராமல்  தடுக்கும் ஆற்றல், இந்த முலாம்பழத்திற்கும் உண்டு என பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க :

நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த தேவையான விட்டமின் சி அதிகம் நிறைந்தது முலாம்பழம்.

முலாம்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதில் இருக்கக்கூடிய பைட்டோ கெமிக்கல்,  பீட்டா கரோடின், வைட்டமின் ஏ  போன்ற சத்துக்கள் வயிற்றில் இருக்கக்கூடிய நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிப்பதன் மூலமாக ரத்தத்தில் உள்ள வெள்ளை  அணுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது :

முலாம்பழம் ஒரு குறைந்த கிளைசெமிக்  இன்டெஸ்  கொண்ட பழமாகும். ஆகையால் இதில் இருக்கக்கூடிய பிரக்டோஸ்  மற்றும் குளுக்கோஸ் போன்ற இனிப்புச் சத்துக்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.

குறிப்பாக நீரிழிவு  என்று சொல்லக்கூடிய சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய சிறுநீரக செயலிழப்பை வராமல் தடுக்கக்கூடிய ஆற்றல் இந்த கிருணிப் பழத்துக்கு உண்டு.

இரத்த அழுத்தத்தை சீராக்க :

உயர் இரத்த அழுத்தத்தினால் அவதி படுபவர்களுக்கு கிருணிப் பழம் மிகவும் நல்லது.

முலாம்பழத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான பொட்டாசியம் சத்து இரத்த நாளங்களில் உள்ள அழுத்தத்தை கட்டுப்படுத்தி உயர் இரத்த அழுத்தத்திற்கு காரணியாக இருக்கக்கூடிய அதிகப்படியான சோடியம்  உப்பையும் குறைக்கிறது.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது :

கிருணி பழத்தில் இருக்கக்கூடிய அடினோசின் என்ற  ஒரு வகை பொருள்  இரத்தத்தை மென்மையாக்குவததோடு இரத்தக் குழாய்களில் இரத்தம் உறைவதை தடுப்பதன் மூலம் இருதய பாதிப்புகளில்  இருந்தும் பாதுகாக்கிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது :

கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது. கர்ப்பிணிப் பெண்களுக்கு போலிக் ஆசிட் மற்றும் இரும்புச் சத்து மாத்திரைகளை மருத்துவர்கள் அதிகம் பரிந்துரைப்பதுண்டு. இந்த இரண்டு சத்துக்களுமே அதிகம் நிறைந்தது முலாம்பழம்.

முலாம்பழம் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கும் மிகவும் நல்லது. குறிப்பாக கர்ப்ப காலங்கள்ல ஏற்படக்கூடிய கால் வீக்கத்தையும் குறைகக்கூடியது.

முலாம்பழம். கர்ப்பிணி பெண்களுக்கு நன்மை தரக்கூடிய ஒரு பழம் என்றாலும் கூட, கர்ப்பிணிப் பெண்கள் முலாம்பழத்தினை அளவாக  தான் வந்து சாப்பிட வேண்டும்.

சிறுநீர் கற்கள் வெளியேற :

கிருணிப் பழத்தில் ஆக்சிஜன் செல்லக்கூடிய ஒரு அரியவகை சத்து அதிக அளவில் இருப்பதினால் இது சிறு நீரகங்களில் உண்டாகக்கூடிய கற்களை கரைக்கும் ஆற்றல் கொண்டது.

முலாம்பழம், சிறுநீரக கற்களை கரைப்பது  மட்டுமில்லாமல், முலாம் பழத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான நீர்ச்சத்து சிறுநீரைப் பெருக்கி கற்கள் எளிதில் வெளியேறவும்  உதவி செய்யும்.

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது :

கிருணி பழத்தில்  கண்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமான வைட்டமின் ஏ, பீட்டா  கரோடின் போன்ற சத்துக்கள் அதிக அளவில்  காணப்படுகிறது.

திசுக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதோடு கண்களில் புரை உருவாக்கத்தையும் தடுக்கிறது.

மேலும்  முலாம் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டவர்களுக்கு கண் சார்ந்த பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவது மட்டும் இல்லாமல் கண் பார்வைத் திறனும் மேம்படுகிறது.

சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது :

சரும ஆரோக்கியத்திற்கு ஆதாரமாக இருக்கக்கூடிய கொலாஜன் செல்களை மீள் உருவாக்கம் செய்யும் ஆற்றல் இந்த முலாம் பழத்திற்கு உண்டு.

இதில் இருக்கக்கூடிய, போலிக்  ஆசிட், வைட்டமின் வைட்டமின் சி, வைட்டமின் கேவைட்டமின் இ போன்ற சத்துக்கள், சருமங்களில் ஏற்படக்கூடிய, தேமல், கரும் புள்ளிகள், வெண்புள்ளிகள், சரும எரிச்சல் போன்ற பல்வேறு சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு, நல்ல ஒரு தீர்வை  தரக்கூடியது.

முலாம்பழத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான நீர்ச்சத்து சரும வறட்சியை போக்கி, நல்ல மிருதுவான சருமத்தையும் கொடுக்கக்கூடியது.

முலாம் பழம் தீமைகள் :

முலாம்பழம் இவ்வளவு நன்மைகளை கொடுக்கக்கூடிய பழம் என்றாலும் கூட உடலுக்கு அதிக குளிர்ச்சியை கொடுக்கக்கூடிய ஒரு பழம் என்பதனால சளி, கபம், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் அவதிப்படுறவங்க முலாம் பழத்தினை சாப்பிடுவது வந்து தவிர்க்க வேண்டும்.

மற்றும் வாத நோய்கள் காரணமாக மூட்டு வலி, கீழ்வாதம்  போன்ற பிரச்சனைகள் அவதிப் படுபவர்கள், இந்த பழத்தினை தவிர்க்க வேண்டும்.