வாய்வு தொல்லை நிரந்தரமாக நீங்க எளிய வழிகள்

0

வாய்வு தொல்லை அறிகுறிகள், வாய்வு தொல்லை ஏற்பட காரணம், வாய்வு தொல்லை தரும் உணவுகள், வாய்வு தொல்லை முற்றிலும் நீங்க எளிய வழிகள் பற்றி இக்கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.

வாய்வு தொல்லை :

உடலில் உண்டாகும் சிறு சிறு ஆரோக்கிய குறைபாடுகள் தான் அதிகப்படியான நோய்கள் உருவாக காரணமாக அமைகின்றன. வாயுத் தொல்லை கூட அப்படித்தான்.

வாயு தொல்லை அறிகுறிகள் :

ஒவ்வொரு சாப்பிட்டு முடித்ததும் ஏப்பம் வர வேண்டும். செரிமானம் ஆகவேண்டும். அடுத்த வேளை உணவு தாமதமாகும்போது பசிக்க வேண்டும். ஆனால், மாறாக சாப்பிட்டு முடித்ததும் வயிறு உப்புசமாக இருப்பது, ஏப்பம் வராமல், செரிமானம் ஆகாமல் இருப்பது, பசியின்மையோடு, மந்தமாக, சோர்வாக இருப்பது எல்லாமே வாயுத் தொல்லைதான்.

இந்த வாயுத் தொல்லை, இளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கின்றது.

தொப்பை குறைய

வாயு கோளாறு ஏற்பட காரணங்கள் :

பசித்த பிறகே உணவு கொள்வது சிறந்தது. அடுத்து பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். அல்லது காலை உணவு முடித்து ஒரு மணி நேரத்திற்கு பிறகே சாப்பிட வேண்டும். பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால் வாயு உற்பத்தியாகிறது.

வாயு தொல்லை தரும் உணவுகள் :

பால் பொருட்கள எப்பொழுதும் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமானால் அதுவே வாயுத் தொல்லையை உண்டாக்கும். அதிலும் தயிரில் உள்ள ப்ரோபயோடிக்ஸ்  அதிக அளவு வாயுத் தொல்லையை ஏற்படுத்தும்

 

இன்று வீட்டிலும் அலுவலகத்திலும் சூரியிங்கத்தை வாயில் மென்றவாறு பேசுவார்கள் அல்லது வேலையை பார்ப்பார்கள். சுயிங்கத்தை மென்று கொண்டே இருந்தால் வாயின் வழியாக உடலினுள் காற்று புகுந்துவிடும். இதுவும் வாய்வு பிரச்சினை ஏற்பட காரணமாகின்றது.

கொழுப்புகள் நிறைந்த உணவை உட்கொண்டால், செரிமானம் மெதுவாக நடைபெற்று உணவு செரிக்க நீண்ட நேரம் ஆகும். இவ்வாறு நீண்ட நேரம் ஆவதால் வயிற்றில் வாய்வுத் தொல்லையும் அதிகரிக்கும்.

எனவே கொழுப்பு  நிறைந்த உணவு, ஜங்க்,  நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

உருளைக்கிழங்கு, பீன்ஸ், பருப்பு வகை உணவுகள், முள்ளங்கி, முட்டைகோஸ் போன்ற காய்கறிகள், வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும் அதற்காக முற்றிலும் சாப்பிட வேண்டாம் சொல்வதற்கு இல்லை. இது போன்ற உணவுகளில் சத்துக்களும் இருப்பதால், குறைந்த அளவு மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

வீட்டில் பெரியவர்கள் சாப்பிடும்போது பேசக்கூடாது என்று கூறுவார்கள். காரணம் இன்றி அவர்கள் எதுவும் சொல்லவில்லை. ஏன என்றால் சாப்பிடும்போது பேசுவதால் உணவுடன் சேர்ந்து காற்றும் வயிற்றிற்குள் செல்கின்றது. இதனால் வாய்வுத் தொல்லை ஏற்படுகின்றது.

ஆகவே பேசிக் கொண்டே சாப்பிடு பழக்கத்தை கைவிட்டால் வாய்வுத் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

வாயு தொல்லை நிரந்தரமாக நீங்க :

துளசிச்சாறு மற்றும் இஞ்சிச்சாறு. தலா மூன்று ஸ்பூன்கள் எடுத்துக்கொண்டு, காலை, மாலை என இரண்டு வேலையும் மூன்று நாட்களுக்கு குடித்து வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

காபி, டீ  இதற்கு பதிலாக  சுக்கு மல்லி காபியை குடிப்பதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது.

சீரகம், ஏலக்காய், பச்சைக் கற்பூரம், ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துப்  பொடி செய்து காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் நாட்டுச் சர்க்கரையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

புதினா அமில உற்பத்தியைத் தடுக்கின்றது. வாயுவினால் அவதியுறும் போது புதினா இலைகளை மென்று நல்ல தீர்வு கிடைக்கும்.

புதினா எண்ணெயை  வெந்நீரில் ஒரு துளி கலந்து குடித்தால் வேகமாக பலன் கிடைக்கும்.

வாயுத் தொல்லை ஏற்படும் சமயங்களில் பப்பாளிப் பழத்தை ஒரு துண்டு எடுத்துச் சாப்பிட வேண்டும். இது வாயுத் தொல்லையை சரி செய்யும். பப்பாளிப் பழம் ஜீரணமிலங்களை முறையாக தூண்டுகிறது. இதனால் வாயுத் தொல்லை குணமாகிவிடும்.

ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவ தோடு, இரைப்பையில்  இருந்து வாயுவையும் வெளியேற்றிவிடும்.

வாயுத் தொல்லை, வயிறு உபாதைகளுக்கு, பூண்டு மிகவும் நல்லது. எனவே பூண்டை வறுத்து அல்லது சுட்டு சாப்பிட்டால் உடனடி தீர்வு கிடைக்கும். வாய் தொல்லையிலிருந்து விடுபட உணவுடன் பூண்டு ரசம் செய்து சாப்பிடலாம்.,