பாதாம் பிஸ்தா விட சத்து மிகுந்த 5 உணவுகள் :
உலர் திராட்சை, சோயா பீன்ஸ், கொண்டை கடலை, வேர்க்கடலை, பேரிச்சம் பழத்தில் உள்ள நன்மைகள்
நொறுக்குத் தீனிகளுக்கு பதிலாக ஊட்டச்சத்து மிகுந்த நட்ஸ் வகைகளைச் சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்கள். நல்ல விஷயம்தான்.
ஆனால் பாதாம் முந்திரி, பிஸ்தா, வால்நட்ஸ் போன்ற நல்ல கொழுப்பு நிறைந்த நட்ஸ் வகைகள் விலை மிகுந்ததாக உள்ளன.
மாத வருமானத்தில் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் நடுத்தர மக்களால் இதனை வாங்கி சாப்பிட முடியாத அளவிற்கு விலை அதிகமாக உள்ளது.
மலிவான விலையில் இவற்றை விட உடலுக்கு அதிக நன்மை கொடுக்கக்கூடிய ஐந்து நட்ஸ் வகைகள் உள்ளன. அவை
உலர் திராட்சை :
ஆனால் உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிடுவதே சிறந்தது என்று பலருக்கும் தெரியாது.
ஐந்து ஆறு உலர் திராட்சைகளை இரவில், படுக்கும் முன்பு நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சாப்பிட்டால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
மேலும் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி குறையும்.
சருமம் ஆரோக்கியம் பெரும். ரத்த சோகை மற்றும் சிறுநீரகக் கல் பிரச்சனை இருப்பவர்கள் ஊறவைத்த உலர் திராட்சையை சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனால் அந்த பிரச்சனைகளில் இருந்து விரைவில் குணமாகலாம்.
மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். ஆண்மை குறைபாடுகள் நீங்கும். பல் ஈறுகளில் வீக்கம் மற்றும் இரத்தக் கசிவு போன்ற பிரச்சனை ஏற்படுவது தடுக்கப்படும்.
கண்களில் ஏற்படும் பலவித பார்வை கோளாறுகள் அனைத்தும் தடுக்கப்படும்.
சிலர் பக்குவப்படாத உணவுகளை உண்பதாலும், உடலில் வாதம் அதிகரிப்பதாலும், வாயு தொந்தரவு ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள்.
திராட்சையை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
வேர்க்கடலை :
பாதாம் மற்றும் முந்திரியை விட இரு மடங்கு சத்துக்கள், வேர்க்கடலையில் இருக்கிறது.
வேர்க்கடலை தினம் இருபத்தி ஐந்து கிராம் சாப்பிட்டு வந்தால் போதும் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
பித்தப்பை கல்லை கரைக்கிறது, இதய வாழ்வுகளை பாதுகாக்கிறது, இதய நோய்கள் வருவதையும் தடுக்கின்றது. இளமையை பராமரிக்கிறது ஞாபக சக்தி அதிகரிக்கிறது மற்றும் மன அழுத்ததை குறைக்கிறது.
வேர்க்கடலையில் உள்ள நல்ல கொழுப்பு உடல் எடையை குறைக்க உதவுகின்றது. எனவே உடல் பருமன் இருப்பவர்கள் வேர்க்கடலையை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால், கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது.
எனவே நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடு பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்ப்பப்பை கட்டிகள் நீர்க்கட்டிகள் ஏற்படாது.
அது மட்டும் அல்ல குழந்தை பேரும் உடன் உண்டாகும் தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும்.
கொண்டைக்கடலை :
கொண்டைக்கடலையில் இரண்டு வகைகள் இருக்கின்றது. ஒன்று, வெள்ளைக் கொண்டைக் கடலை, மற்றொன்று கருப்பு கொண்டைக்கடலை.
இதில் கருப்பு கொண்டைக் கடலையில் தான் சத்துக்கள் காணப்படுகின்றது.
கருப்பு கொண்டை கடலையில் போலிக் ஆசிட்டிற்கு அடிப்படையான போலேட்டும், மக்னேசியமும், போதுமான அளவில் உள்ளன.
இது மாரடைப்பு காரணியான ஹோமோ சிஸ்டினை, கட்டுக்குள் வைத்து அந்த நோய் வராமல் பாதுகாக்கிறது.
கர்ப்பிணிகளுக்கு அவசிய தேவையான போலிக் அமிலம், ஆன்டி-ஆக்ஸிடண்ட் தன்மை கொண்ட சாப்போனின் போன்ற பைட்டோகெமிக்கல் வேதிப் பொருட்கள் அதிகமாக உள்ளன.
வெள்ளை கொண்டை கடலையை விட கருப்பு கொண்டை கடலையில் நார்ச் அதிகம். குளுக்கோஸ் பயன்பாட்டை மேம்படுத்தக் கூடியது என்பதால் நீரிழிவு நோயாளிகள் இதனை தொடர்ச்சியாக சாப்பிடலாம்.
சோயா பீன்ஸ் :
அசைவ உணவுகளில் தான் புரத சத்து அதிகம் கிடக்கிறது என்பது பலரின் கருத்தாக உள்ளது.
ஆனால் ஐந்து லிட்டர் பசும்பாலில் உள்ள புரதம், ஒரு கிலோ மாமிசத்தில் உள்ள புரதம், இருபத்தி நான்கு நாட்டு முட்டைகளுக்கு இணையான புரதச்சத்து ஒரு சைவ தனியமான சோயா பீன்ஸில் உள்ளது.
எடையை குறைப்பதில் சோயாவுக்கு முக்கிய பங்குண்டு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைப்பதற்கு சோயா உதவுகின்றது. ஏனென்றால் சோயாவில் நல்ல கொழுப்புகள் நிறைந்து உள்ளது.
சோயாவில் உள்ள பாஸ்பரஸ் சத்தும், கால்சியம் சத்தும் இதய நோய் பாதித்தவர்கள் குழந்தை யின்மையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு அவசியம் தேவை.
பேரீச்சம் பழம் :
பேரிச்சம் பழத்தில் நிறைந்துள்ள அதிக அளவிலான இரும்பு சத்து இரத்த சோகையை சரி செய்கின்றது.
உடலுக்கு தேவையான எனர்ஜி மற்றும் ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
இதிலுள்ள மாங்கனீஸ், மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற நுண் சத்துக்கள் எலும்பை வலுவாக்கும்.
பேரிச்சையை உணவுடனும் சேர்த்துக் கொள்ளலாம். எலும்பின் வளர்ச்சிக்கு உதவும்.
மேலும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோயிலிருந்து நம்ம குறிப்பாக பெண்கள் பேரிச்சம்பழத்தை உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு ஏற்படும் எலும்பு உருக்கி நோயை குணப்படுத்தும்.
வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் வலியை குறைக்க உதவுகின்றது. மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
கண் பார்வை தெளிவாக தெரிய தினம் மூன்று பேரீச்சம் பழம் சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகள் கூட இதனை சாப்பிடலாம். பேரீச்சம் பழத்தில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது.