விறைப்பு தன்மை குறைபாட்டிற்கு ஏலக்காய் தீர்வு

0

ஏலக்காய் மூலம் விறைப்பு தன்மை குறை பாட்டிற்கு எளிய தீர்வு  

ஏலக்காய்

விறைப்புத் தன்மை கோளாறு காரணம் :

இன்று ஆண்கள் மத்தியில் அதிகரித்து வரும் பிரச்சினையாகும். இதற்கு முக்கிய காரணம் உடலில் இரத்த ஓட்டம் ஒழுங்கற்று இருப்பது. இரத்த ஓட்டம் சீரற்று இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

ஊட்ட சத்து குறைவான உணவு, சரியான உடல் செயல்பாடு இல்லாதது, சோம்பல் மற்றும்  உக்கார்ந்த இடத்திலேயே வேலை பார்ப்பது  போன்றவை காரணமாக சொல்லப் படுகிறது.

சரியான உடற்பயிற்சி மற்றும் சரியான ஊட்ட சத்து மிகுந்த உணவைத் தேர்ந்தெடுப்பதன் மூலம்  இந்த பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வைக் காணலாம்.

வாசனைக்காக உணவு பொருள்களில் பயன்படுத்தப்படும் ஏலக்காய் இதற்கு ஒரு சிறந்த இயற்கை தீர்வாக இருக்கிறது.

இயற்கையாகவே பாலுணர்வை அதிகரிக்கும் சில உணவுகள் உள்ளன. அத்திப்பழம், பூண்டு மற்றும் மாதுளை சேர்த்து ஏலக்காய் முதல் இடத்தில் உள்ளது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும் ஒரு மூலப்பொருள் ஏலக்காயில் உள்ளது.

 

சினியோல் :

ஏலக்காயில் உள்ள ஒரு மூலப்பொருளான சிநியோல் இரத்த ஓட்டம் அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணமாகும். இது ஆண்குறி பகுதிக்கு இரத்த ஓட்டத்jதை அதிகரிக்க தூண்டுவதன் மூலம் விறைப்பு தன்மை ஏற்படுத்துகிறது.

ஏலக்காயில் உள்ள சத்துக்கள் :

உடலுக்குத் தேவையான புரதம், பொட்டாசியம், இரும்பு, சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி போன்ற அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் ஏலக்காய் வழங்குகிறது.
 
 

விறைப்பு தன்மை பிரச்சினையை சரி செய்ய ஏலக்காயை எவ்வாறு பயன்படுத்தலாம்?

ஏலக்காய் எப்போதும் சிறிய அளவில் எடுக்கப்பட வேண்டும். உணவில் அதிகமாகச் சேர்ப்பது அதிகமாக எடுத்துக் கொண்டால் பக்கவிளைவை ஏற்படலாம். இதை தேநீர் அல்லது தேன் மற்றும் சூடான நீரில் சேர்த்து பருகலாம்.

நரம்பு கோளாறு நீங்க :

தினமும் தேநீர் அல்லது தேனுடன் ஏலக்காயை குடித்து வந்தால், நரம்பு தளர்ச்சியை சரிசெய்து நரம்புகளை பலப்படுத்தும். தினமும் காலையிலும் மாலையிலும் குடிக்க வேண்டும்.