குதிரை சக்தி தரும் குதிரை வாலி அரிசி நன்மைகள்குதிரை வாலி அரிசி நன்மைகள், தீமைகள் மற்றும் குதிரை வாலி அரிசியில் உள்ள சத்துக்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
குதிரை வாலி அரிசி :
குதிரை வாலி தினை வகைகளுள் ஒன்றாகும். (எக்கினோக்ளோவா ஃப்ருமண்டேசியா). இது இந்தியாவின் உத்தராஞ்சலின் மலைப் பகுதிகளில் அதிகமாக பயிரிடப்படுகிறது.
குதிரை வாலி பிற பெயர்கள் :
குதிரை வாலியில் உள்ள சத்துக்கள் :
குதிரை வாலி அரிசி ஊட்டச் சத்துக்களின் சிறிய கூடையாகும். அவை இரும்பு, புரதம் மற்றும் நார்ச் சத்துக்களின் சிறந்த மூலமாகும்.
100 கிராம் குதிரை வாலி அரிசியில் ஒரு மனிதனுக்கு தேவையான தினசரி இரும்பு சத்து அளவில் 100 சதவீதமும், கர்ப்பிணி பெண்களின் தினசரி தேவையான இரும்பு சத்தில் 67% வழங்குகிறது.
குதரை வாலி அரிசி நன்மைகள்:
குதிரை வாலி வழக்கமாக நாம் உண்ணும் தானியங்களான அரிசி, கோதுமை, ரவை போன்றவற்றை விட சத்து நிறைந்த சிறப்பான உணவாகும். இந்தியா முழுவதும் எளிதில் கிடைக்கிறது, சிக்கனமானதும் மற்றும் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவாக உள்ளது.
மலச் சிக்கலை போக்குகிறது :
குதிரைவாலி அரிசியில் மற்ற சிறுதானியங்களைக் காட்டிலும் நார்ச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. 25 கிராம் குதிரை வாலி அரிசியில் 2.4 கிராம் நார்ச்சத்து உள்ளது.
ஜர்னல் ஆஃப் ஃபுட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, குதிரை வாலி அரிசியில் 12.6 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்து 4.2 சதவீதமும், கரையாத நார்ச்சத்து 8.4 சதவீதமும் உள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது.
குதிரைவாலியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கவும், மலத்தை இலக்கவும் செய்கிறது
மூல நோயை குணப் படுத்துகிறது :
நரம்புகளை பலப் படுத்துகிறது :
இரத்த சர்க்கரையை கட்டுப் படுத்துகிறது :
குதிரைவாலியை, சர்க்கரை நோய் உள்ளவர்கள், தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு படிப்படியாக குறையும். மேலும் சர்க்கரை நோய் வராமலும் தடுக்கும்.
ஜர்னல் ஆஃப் ஃபுட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், நீரிழிவு நோயாளிகள் குதிரை வாலி அரிசியை ஒரு வாரத்திற்கு உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை குறைக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.
பிளாஸ்மா குளுக்கோஸ் அளவை கணிசமாகக் கட்டுப் படுத்துவதன் மூலம் பங்கேற்பாளர்களிடையே (நீரிழிவு மற்றும் நீரிழிவு அல்லாத) கார்போ ஹைட்ரேட் சகிப்புத் தன்மையை குதிரை வாலி அரிசி மேம்படுத்தியதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளனர்.
லோ கிளைசெமிக் உணவு :
லோ குளுட்டன் உணவு :
சிறந்த ஆக்சிஜநேற்றியாகும் :
குதிரை வாலி அரிசியில் பாலிபினால்கள் போன்ற ஏராளமான பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன.
அவை ஆக்ஸிஜனேற்றிகளாகவும் நச்சுத்தன்மை முறிக்கும் தன்மை உடையதாகவும் செயல் படுகின்றன.
இதய ஆரோக்கியம் :
குதிரைவாலி அரிசி உடலில் இருக்கக்கூடிய கொழுப்போட அளவை குறைக்கிறது.
உடல் எடையை குறைக்கிறது :
இரும்புச் சத்தின் சிறந்த மூலமாகும் :
உடலிற்கு தேவையான இரும்புச் சத்துக்களை நிறைய தருகிறது.
குதிரை வாலியில் உள்ள ஊட்டச்சத்து உள்ளடக்கம் குறித்த ஆராய்ச்சியின் படி, சில வகையான குதிரை வாலி அரிசியில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
100 கிராம் குதிரை வாலி அரிசியில் 18.6 மி.கி இரும்பு சத்து இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. இது அனைத்து தினை மற்றும் தானிய தானியங்களில் உள்ள இரும்பு சத்தை விட அதிகமாகும்.
சாம்பல் நிறத்தில் உள்ள குதிரை வாலி அரிசியே வெளளை நிற அரிசியை விட சத்து நிறைந்ததாக கருதப்படுகிறது.
குதிரை வாலி சமையல் :
குதிரை வாலி அரிசி தீமைகள் :
வயிற்றுப் புண் இருப்பவர் குதிரை வாலி அரிசியை தவிர்க்க வேண்டும்.