முக சதை அதிகரிக்க சதைப்பற்றுள்ள கன்னங்களை பெற

அழகான சதைப்பற்றுள்ள உப்பிய கன்னங்களை பெற எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கன்னங்கள் அழகாக எளிய வழிகள் :

சிலருக்கு கன்னங்கள் ஒட்டி சுருக்கங்களுடன் காணப்படும். அப்படிப்பட்டவர்கள் சில எளிய வழி முறைகளை செய்வதன் மூலம் அழகான, சதை பிடிப்பான, பளபளப்ப்பான கன்னங்களை பெற முடியும்.

சதைப் பற்றுள்ள கண்ணங்களை பெற

உப்பிய கன்னங்களை பெற வெண்ணெய் :

ஒரு கப் பால், ஒரு டீஸ்பூன் வெண்ணெய், ஒரு டீஸ்பூன் தேன், இரண்டு துண்டுகள் சீஸ், ஒரு தேக்கரண்டி ஓட்ஸ் ஆகியவற்றை கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு அதனுடன், ஒரு கப் ஆரஞ்சு (அ) ஆப்பிள் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் அழகான சதைப்பற்றுள்ள கன்னம் கிடைக்கும்.

அழகான ஒரு டீஸ்பூன் வெண்ணெயுடன் சிறிது சர்க்கரையை கலந்து குளிப்பதற்கு முன் கன்னங்களில் தேய்த்து வரவும். ஒட்டும் கன்னங்கள் உப்ப வர ஆரம்பிக்கும்.

அழகான கன்னங்களை பெற ஆப்பிள் :

ஒரு ஆப்பிளை நறுக்கி அரைத்து, கன்னத்தில் இருந்து காது வரை தேய்த்து தினமும் பேசியல் செய்து வந்தால் ஒரு வாரத்தில் அழகான கன்னம் கிடைக்கும்.

பள பளப்பான கன்னங்களை பெற ஆலிவ் ஆயில் :

ஆலிவ் எண்ணெயுடன் சமைத்து சாப்பிடுவது கன்னங்களை பிரகாசமாக்கும்.

உப்பிய கன்னங்களை பெற நல்லெண்ணெய் :

ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் எடுத்து வாயில் வைத்து கொப்பளிக்கவும். ஒட்டிய கன்னம் உப்புவதற்கு இது சிறந்த பயிற்சி ஆகும்.

சருமத்திற்கு தேவையான எண்ணெய் பசை இல்லாதபோது கன்னங்களும் வறண்டு சுருக்கமாகிவிடும்.

கன்னங்கள் ஒளி வீச :

பாதாம், பிஸ்தா, பயறு, முந்திரி போன்றவற்றை தினமும் எடுத்து அவற்றை சூடான நீரில் ஊறவைத்து அரைத்து முகத்தில் தடவ வேண்டும்.

இதனால் சுருக்கங்கள் மறைந்து, கன்னம் மற்றும் சுருங்கிய தாடை பகுதியில் சதை பகுதிகள் தங்கம் போல பிரகாசிக்கிறது. 

பள பளப்பான கண்ணங்களை பெற :

ஆப்பிள் மற்றும் கேரட் துண்டுகளை சாறு பிழிந்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து தினமும் குடித்து வர கன்னத்தில் சதை போடுவது மட்டுமல்லாமல் பலபலப்பு கூடும்.

அழகான கன்னங்களைப் பெற தேன்  :

பப்பாளி அரைத்து பேஸ்ட் போன்று தயார் செய்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து  முகத்தில் தடவி பேஸ் பேக் போட்டு சிறிது நேரம் கழித்து கழுவவும். தேன் தோலில் உள்ள சுருக்கங்களை நீக்கி கன்னங்களை பிரகாச மாக்குகிறது.