ஆல்பக்கோடா பழம் நன்மைகள், சத்துக்கள் மற்றும் தீமைகள்

0

ஆல் பக்கோடா பழத்தில் உள்ள சத்துக்கள், ஆல்பக்கோடா பழம் நன்மைகள் மற்றும் தீமைகள் விவரிக்கப் பட்டுள்ளன.

ஆல்பக்கோடா பழம்  :

ஆல்பக்கோடா பழம் பலவிதமான வண்ணங்கள் மற்றும் அளவுகளில் கிடைக்கும் தனித்துவமான பழங்களில் ஆல்பக்கோடா  பழம் ஒன்றாகும். இது பிளம்ஸ், ஆல் பக்கோடா மற்றும் ஆலு புகாரா பழம் என்றும் அழைக்கப் படுகிறது.

ஆல் பக்கோடா பழம்ஊதா,சிவப்பு முதல் பச்சை மற்றும் மஞ்சள் போன்ற வண்ணங்களில் வரை இந்த சிறிய  பழங்கள் கோடை முழுவதும் கிடைக்கும். சந்தையில் இந்த பழத்தை கண்டுபிடிப்பது சற்று கடினமாக இருக்கலாம். ஆனால்  அதில் ஏராளமான நன்மைகள் உள்ளன.

ஆல்பக்கோடா பழம் பிற பெயர்கள் :

இது தமிழ் மற்றும் தெலுங்கில் அல் பக்கோடா என்றும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஆலு புகாரா, பிளம்ஸ் என்றும்  பெங்காலியில் சூக்னோ கூல் என்றும் அழைக்கப் படுகிறது.

ஆல் பக்கோடா பழத்தில் உள்ள சத்துக்கள் :

ஆல்பக்கோடா பழம் தாது சத்துக்கள்
ஆல் பக்கோடா பழம் 100 கிராமில் 0.3 கிராம் கொழுப்பு, 0.7 கிராம் புரதம் உள்ளது. மேலும் 11 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. இதில் 9.2 கிராம் சர்க்கரை மற்றும் 1.4 கிராம் நார் சத்து அடங்கும்.

வைட்டமின்கள் :

ஆல்பக்கோடா பழம் வைட்டமின்கள்
100 கிராம் திராட்சை பழத்தில்  345 IU வைட்டமின் ஏ, 39.5 மில்லி கிராம் வைட்டமின் சி மற்றும் 0.25 மில்லி கிராம் வைட்டமின் இ, மற்றும் 6.4 மைக்ரோ கிராம் வைட்டமின் கே உள்ளது.

 தாதுச் சத்துக்கள் :

ஆல் பக்கோடா பழம் தாது சத்துக்கள்
100 கிராம் ஆல்பக்கோடா பழத்தில் 0.17 மில்லி கிராம் இரும்பு சத்து, 6 மில்லி கிராம் கால்சியம், மற்றும் 157 மில்லி கிராம் பொட்டாசியம் மற்றும் 7 மில்லி கிராம் மக்னேசியம் உள்ளது.

ஆல்பக்கோடா பழம் நன்மைகள் :

ஆல்பக்கோடா பழம் அனைவருக்கும் பரிட்சயம் இல்லாத பழம் என்றாலும் கூட இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

இது உலர் பழமாக அனைத்து கடைகளிலும் கிடைக்கிறது.

பிளம்ஸ் பயன்கள் மற்றும் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆல்பக்கோடா பழம் நன்மைகள் குறித்து கீழே விவரிக்கப் பட்டுள்ளன.

இரத்த சோகையைத் தடுக்கிறது :.

இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இரத்த சோகை என்றழைக்கப்படும் அனீமியா ஏற்படுகிறது.  

இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டாலும் இரும்பு சத்து உடலால் நன்கு உறிஞ்சப்படாவிட்டால் அது பயனில்லை.

இரும்புச் சத்தை சரியாக உறிஞ்ச அனுமதிக்க, உங்கள் உடலுக்கு வைட்டமின் சி தேவைப்படுகிறது. பிளம்ஸில் (ஆல் பக்கோடா பழம்) வைட்டமின் சி நிறைந்துள்ளது.

1 கப் துண்டுகளாக்கப்பட்ட பிளம்ஸில் (தோராயமாக 165 கிராம்) 15.7 மி.கி வைட்டமின் சி சத்து உள்ளது. இது தினசரி தேவைக்காக பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் சி அளவில் 26 சதவீதம் ஆகும்.

மலச்சிக்கலை நீக்குகிறது :

செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருப்பது உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கு அவசியமாகும்.

ஆரோக்கியமான உணவோடு சரியான அளவு நார்ச்சத்து மற்றும் நீர் உட்கொண்டால் மலச்சிக்கல் பிரச்சினை இருக்காது.

பிளம்ஸில் நார்ச்சத்து அதிக அளவு உள்ளது. ஒரு சிறிய அல் பகோடா பழம் மூலம் தினசரி தேவைக்காக பரிந்துரைக்கப்பட்ட நார் சத்து அளவில் 4 சதவீதம் கிடைக்கிறது.

பிளம்ஸில் காணப்படும் சர்பிடால் மற்றும் இசாடின் என்ற பொருள் இயற்கை மலமிளக்கியாகும்.

இது பெறுங்குடலுக்கு தண்ணீரை உறிஞ்சி குடல் இயக்கத்தைத் சரி செய்து இதனால் ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்க உதவகிறது.

இரத்த அழுத்தம் :

பிளம்ஸில் (ஆல் பக்கோடா பழம்) பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முக்கியமான ஒரு கனிமமாகும்.

1 கப் பிளம்ஸில் தினசரி தேவைக்காக பரிந்துரைக்கப் பட்ட பொட்டாசியத்தின் அளவில் 7 சதவீதம் உள்ளது.

பார்வையை மேம்படுத்துகிறது:

ஆல் பக்கோடா பழம் அனைத்து வகையான வைட்டமின்களின் சிறந்த மூலமாகும். குறிப்பாக வைட்டமின் ஏ பிளம்ஸில் அதிக அளவில் உள்ளது. 

வைட்டமின் ஏ, ஆரோக்கியமான கண்கள் மற்றும் கூர்மையான பார்வைக்கு அவசியம் ஆகும்.

பிளம்ஸ் கண் சவ்வை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், புற ஊதா கதிர்களால் ஏற்படும் கரோட்டினாய்டு சேதத்திலிருந்து கண்களை பாதுகாக்கிறது.

வைட்டமின் கே யின் சிறந்த மூலமாகும் :

பிளம்ஸில் (ஆல் பக்கோடா பழம்) உள்ள வைட்டமின் கே இரத்த உறைவுக்கு உதவுவது மட்டுமல்லாமல், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.

மேலும் வைட்டமின் கே மாத விடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் எலும்பு அடர்த்தி இழப்பை தடுக்கும் திறனைக் கொண்டுள்ளது என்றும் ஆராய்ச்சி யாளர்கள் தெரிவிக் கின்றனர்.    

தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது :  

வைட்டமின் சி உடலுக்கு கிடைக்க செய்வதன் மூலம், ஆல் பக்கோடா பழம் நோயெதிர்ப்பு செல்கள் ஆரோக்கியமாக இருக்கவும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.  

பொதுவான சளி மற்றும் காய்ச்சலிலிருந்து பாதுகாப்பு தருகிறது.  

உடல் எடையை குறைக்கிறது :

ஒரு சிறிய ஆல் பக்கோடா பழம் (பிளம்) மிகக் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் 30 கலோரிகளைக் கொண்டுள்ளது.

ஒரே நேரத்தில் ஒரு முழு கப் ஆல் பக்கோடா பழத்தை சாப்பிட்டாலும் அதிக கலோரிகளை சேராது.

மேலும் மாவு சத்துக்கள், புரதங்கள் மற்றும் கொழுப்புகளை உடைக்க உதவும் நியாசின் மற்றும் வைட்டமின் பி 6 போன்ற பி வைட்டமின்கள் பிளம்ஸில் உள்ளன.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது :

ஆல் பக்கோடா பழத்தில் குறிப்பாக க்ளோரோஜெனிக் அமிலம் எனப்படும் பாலிபீனால் நிறைந்துள்ளது.

இது இரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்தவும் பசியை சீராக்கவும் உதவுகிறது.

மேலும் இதில் உள்ள நார்ச்சத்து இயற்கையான சர்க்கரையின் வெளியீட்டை மெதுவாக குறைக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியம் :

பிளம்ஸில் கால்சியம் உட்பட பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது பொதுவாக இரத்தம் உரைதலை சீராக்குகிறது.

மேலும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி மற்றும் பாலி பினால்கள் இதய ஆரோக்கியத்தை உறுதி செய்கின்றன.

ஆல் பக்கோடா பழம் தீமைகள்:

ஆலு புகாரா பழம் அதிக அளவு உட்கொண்டால் சிறு நீரக கற்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அவற்றில் ஆக்சாலிக் அமிலம் உள்ளது.

இதனால் ஆலு புகாராவை அதிகமாக சாப்பிடுவதாலும், குறைந்த அளவு நீர் குடிப்பதன் காரணமாகவும் சிறுநீர் பாதையில் படிகமாக்கி கற்களை உருவாக்கும்.