Homeவாழ்க்கை முறைஆரோக்கியம்வயிறு உப்புசம் வாயு தொல்லை நீங்க

வயிறு உப்புசம் வாயு தொல்லை நீங்க

வாயு தொல்லை அறிகுறிகள் :

நம்மில் பலருக்கு அடிக்கடி ஏற்படும் ஒரு தொந்தரவு, வாயு தொந்தரவு. வாயுத் தொல்லை இருந்தால், சாப்பிடாமலேயே சாப்பிட்டது போன்ற ஒரு உணர்வு இருக்கும். வயிற்று உள்ளே ஏதோ கனமான  ஒரு பொருள் இருக்கிற மாதிரி, கணமாக இருக்கும். மேலும், ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். நம்மால் நிம்மதியாக சாப்பிடவும் முடியாமல், உட்காரவும் முடியாமல், படுக்கவும் முடியாமல், பெரும் அவஸ்தையாக இருக்கும். அதிலும் வயிற்றில் வலி, வயிறு வீக்கம், நெஞ்செரிச்சல் என்று மாறி, மாறி பாடாய் படுத்திவிடும். அதிகப்படியான வாயு வயிற்றில் தங்குவதால்தான், இந்த பிரச்சனை ஏற்படுகின்றது. இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அதைவிடவும் இதனால் ஏற்படும் துர்நாற்றம், பக்கத்தில் இருப்பவர்களை முகம் சுளிக்க வைத்து, நம்மை தர்மசங்கடத்திற்கு உள்ளாகி விடும். இந்த வாயு தொந்தரவு ஏற்படுவதற்கு, பல காரணங்கள் இருக்கின்றன.

வயிறு உப்புசம் வாயு தொல்லை நீங்க

வாயு தொல்லை ஏற்பட காரணம் :

வாயு தொந்தரவு, வயிற்றில் ஏற்படுவதற்கு, பல விதமான காரணங்கள் கூறப்பட்டாலும், நாம் சாப்பிடும்போது, அல்லது தண்ணீர் குடிக்கும் போதும், மற்றும் நைட்ரோஜன்  போன்ற வாயுக்கள், வயிற்றுக்குள் நுழைஞ்சு, வாயுத் தொல்லையை ஏற்படுத்துகின்றன என்பதுதான், முதல் காரணமாக அமைகின்றது. அதாவது, நாம் அவசர அவசரமாக சாப்பிடு போதும், பேசிக் கொண்டே சாப்பிடு போதும்,  பானங்களை உறிஞ்சி குடிக்கும் போதும், நம்மை அறியாமலேயே, காற்றையும் சேர்த்து விழுங்கி விடுகின்றோம். இந்த காற்றில் எண்பது சதவீதம், இரைப்பையில் இருந்து ஏப்பமாக வெளியேறி விடுகின்றது. மீதி குடலுக்கு சென்று, ஆசன  வாய் வழியாக வெளியேறுகின்றது.

காற்று வெளியேறுவது உடலுக்கு நன்மை தரும் விஷயம்தான். ஆனால், கெட்ட வாடை கொண்ட வாயு வெளியேறினால், உடலுக்குள் கோளாறு இருப்பதாகவே அர்த்தம். நாம் சாப்பிட்ட உணவு செரிக்கப்படும் பொழுது ஏற்படும் வேதி வினையில் இருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்சைடு  ஹைட்ரஜன்  மீத்தேன்  போன்ற வாயுக்கள் வயிற்றினுள் தங்கிவிடுகின்றன. இந்த வாயுக்கள் வெளியேறாமல் அப்படியே இருப்பதால் வயிற்றுக்குள் பிரச்சனை ஏற்பட ஆரம்பிக்கின்றது. மேலும் செரிமான பொழுது, குடலில் உண்டாகும் வாயு, எப்பொழுதாவது வெளியேறுவது என்பது இயல்புதான். ஆனால், அன்றாட செயல்களுக்கு இடையூறு செய்யும் அளவுக்கு, வயிறு உப்புசம், உணவு செரியாமை போன்ற அறிகுறிகளுடன் வாயு வெளியேறினால், நாம் உணவுகளை முறைப்படுத்த வேண்டியது அவசியம்.

பொதுவாக வாயுக்கள் உருவாகும் பொழுது, துர்நாற்றம் இருக்காது. ஆனால், குடலில் சில என்சய்ம்கள் பற்றாக்குறை ஏற்படும் பொழுது, புரத உணவு சரியாக செரிக்கப்படுவதில்லை. அப்பொழுது ஹைட்ரஜன் சல்பேட்  போன்ற வாயுக்கள் உற்பத்தியாகி, ஆசன வாய் வழியாக வெளியேறும். மேலும், உடல் பருமன் உள்ளவர்களுக்கும், அதிக நேரம் உட்கார்ந்து கொண்டே, வேலை செய்கிறவர்களுக்கும், உடற்பயிற்சி இல்லாமல் , உடல் இயக்கம் இல்லாமல் முடங்கி கிடப்பவர்களுக்கும், தண்ணீர் சரியாக குடிக்காமல் இருப்பவர்களுக்கும், வாயு தொந்தரவு ஏற்படுகின்றது. அதே போன்று, எண்ணெயில் பொரித்த இறைச்சி, கொழுப்பு நிறைந்த உணவுகள், தாமதமாக்கி வாயு பெருக்கத்திற்கு வழி வகுக்கும் வாயு தொந்தரவை முற்றிலும் போக்கும் அருமையான வீட்டு வைத்தியங்கள் பற்றி இப்பொழுது பார்க்கலாம்

ஓமம் :

ஓமத்தில் உள்ள தைமோல் என்ன உட்பொருள் ஓமத்திற்கு சுவை மற்றும் மணத்தை கொடுப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்கும் காரணமாக அமைகின்றது. அந்த வகையில், வாயுத் தொல்லையைப் போக்கும் அருமையான மருந்தாக, ஓமம் பயன்படுகின்றது. எனவே, வாயுத் தொல்லை இருப்பவர்கள், இரண்டு தேக்கரண்டி  ஓமத்தை லேசாக வறுத்து, ஒரு கப்  தண்ணீரில், இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பிறகு மறுநாள் காலையில், அந்த தண்ணீரை, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இல்லையென்றால், அரை தேக்கரண்டி  ஓமத்தை, ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து  நன்றாக கொதி வந்ததும் வடிகட்டி குடிக்கலாம்.

வயிறு உப்புசம் வாயு தொல்லை நீங்க

முக்கியமாக நாள்பட்ட வாய்வு தொல்லையால் அவதிப்படுபவர்கள் ஓம தண்ணீரை தினமும் குடித்து வந்தால் வாய்வு தொழில் இருந்து முற்றிலும் விடுபடலாம் அது மட்டும் அல்ல ஓமம் செரிமான சக்தியை மேம்படுத்தும். பொதுவாக நாம் எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டாலோ அல்லது அளவுக்கு அதிகமாக உணவை சாப்பிட்டாலோ, வயிற்று உப்புசத்தினால் அவஸ்தைப்படக்கூடும். அந்த நேரங்களில் ஓமத்தை தண்ணீரில் போட்டு காய்ச்சி அதில் உள்ள தைமோல், வயிற்றில் செரிமான திரவத்தின் சுரப்பிக்கு உதவி, செரிமான செயல்பாட்டை சீராக்கும்.

சீரக தண்ணீர் :

சீரக தண்ணீர் வாயுத் தொல்லையைப் போக்குவதற்கு உதவும் சிறந்த மருந்தாகும். சீரகம்  நமது உமிழ்நீரை அதிகமாக சுரக்கச் செய்து, உணவை எளிதாக ஜீரணிக்க உதவுகின்றது. இதனாலும், வாயுத் தொல்லை ஏற்படாமல் தடுக்க முடியும். எனவே, ஒரு தேக்கரண்டி  சீரகத்தை, இரண்டு கப் தண்ணீரில் போட்டு, பத்து நிமிடம் கொதிக்க வைத்து  பிறகு தண்ணீரை வடிகட்டி வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும்.

வயிறு உப்புசம் வாயு தொல்லை நீங்க
இதனால் வாயு தொல்லை விரைவில் நீங்கி விடும். அதுமட்டுமல்ல சீரக தண்ணீரில் அதிக அளவு இரும்பு மற்றும் நார்ச்சத்துக்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, இருந்து நம்மை பாதுகாக்கும். மேலும், சீரகத்தில் உள்ள அதிக அளவு பொட்டாசியம் , உடல் ஆரோக்கியத்திற்கும், சீரான செயல்பாட்டிற்கும், மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. முக்கியமாக, ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும். எனவே, ரத்த உள்ளவர்கள், சீரக தண்ணீரை அடிக்கடி குடித்து வரும் பொழுது, நல்ல பலன் கிடைக்கும்.

பெருங்காயம் :

வயிறு உப்புசம் வாயு தொல்லை நீங்க

வாயுவை போக்கும் சிறந்த மருந்தாக இருப்பது, பெருங்காயம். வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள், அரை தேக்கரண்டி  பெருங்காயத்தூளை, ஒரு டம்ளர் வெந்நீரில் போட்டு அப்படியே குடித்து விட வேண்டும். இது குடலில் அதிகமான பாக்டீரியாக்கள் உருவாவதை தடுத்து, வாயுவை வெளியேற்றுகின்றது. அஜீரணத்திற்கும் இது சிறந்த மருந்து. பொதுவாக புலால் சமைக்கும் பொழுதும், வாய்வு தரக்கூடிய வாழைக்காய், கொண்டை கடலை  பட்டாணி, முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை சமைக்கும் பொழுதும், சிறிதளவு பெருங்காயத்தை கண்டிப்பாக உணவில் சேர்க்க வேண்டும்.

புதினா :

வயிறு உப்புசம் வாயு தொல்லை நீங்க

வாய் தொந்தரவால் அவதிப்படும் பொழுது, புதினா இலைகளை மென்று சாப்பிட்டால், தீர்வு கிடைக்கும். இதற்கு காரணம், புதினா அமில உற்பத்தியை தடுக்கின்றது. இன்னும் சொல்லப்போனால், புதினா எண்ணெய்யை வெந்நீரில் ஒரு துளி கலந்து குடித்தால், வேகமாக பலன் கிடைக்கும். அதே போன்று வாயுத் தொல்லை உடையவர்கள், புதினா துவையலை அவ்வப்போது செய்து சாப்பிடலாம். புதினாவில் இருக்கும் வேதிப்பொருட்கள், நமது உமிழ்நீரையும், மற்றும் வயிற்றில் ஜீரண என்சைம்களையும், அதிகம் சுரக்கச் செய்து, செரிமானம் எளிதாக நடைபெறுவதற்கு உதவுகின்றது. முக்கியமாக  தினமும் புதினா இலைகளை பச்சையாக சாப்பிட்டு வந்தால், ரத்தம் மற்றும் பிற உறுப்புகளில் தேங்கி இருக்கும் நச்சுக்கள் அனைத்தும், வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறி, உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுத்து, எதிர்காலங்களில் கடும் நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாக்கிறது.

சுக்கு :

வயிறு உப்புசம் வாயு தொல்லை நீங்க

வாயுத் தொல்லை உடையவர்கள், நூறு மில்லி கொதிக்கும் தண்ணீரில், ஐந்து கிராம் சுக்குப் பொடியை சேர்த்து, கொதிக்க வைத்து, அடுப்பிலிருந்து இறக்கி, கால் மணி நேரம் மூடி வைத்திருந்த பிறகு தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும். இந்த சுக்கு கஷாயத்தை, காலை மற்றும் மாலை இரண்டு வேலையும் குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து இருபது முதல் நாற்பது நாட்கள் வரை குடித்து வந்தால், வாயுத் தொல்லை, வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, விழாப் பகுதியில் ஏற்படும் குடைச்சல், புளித்த ஏப்பம், அஜீரணக் கோளாறு, மார்பிள் எரிச்சல், மூக்கடைப்பு, ஜலதோஷம், காது சம்பந்தமான வலி, நாக்கு சுவையின்மை மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலி போன்றவை முற்றிலும் நீங்கும். சுக்கு கஷாயத்துடன் சேர்த்துக் கொள்ளலாம். பனிக்காலங்களில், கிராம்பு, மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

நாம் சாப்பிடு பொழுது, அவசர அவசரமாக சாப்பிடாமல், மெதுவாக உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இல்லையென்றால், நாம் சாப்பிடு பொழுது, காற்றும் சென்று வாயுத் தொல்லை ஏற்பட்டுவிடும். மெதுவாக சாப்பிடு பொழுது, உமிழ்நீர் சுரப்பிகள், உணவுப் பொருட்கள கரைப்பதோடு, மென்மையாக்கி, எளிதில் செரிமானம் அடைய வைக்கின்றது. மேலும், உடலில் வாயுத் தொல்லையும் ஏற்படாமல் இருக்கும். வாயுத் தொல்லை உடையவர்கள் எண்ணெய் உள்ள உணவு வகைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். ஆவியில் தயாரித்த உணவு வகைகளை சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்..

வாயு தொல்லை நீங்க உடற்பயிற்சி :

தினமும் நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும். தண்ணீர் ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்லருக்கும் குறையாமல் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதோடு, இரைப்பையில் இருந்து வாயுவும் வெளியேறிவிடும். எனவே இங்கு கூறியவற்றை செய்து வந்தாலே, வாயுத் தொல்லை வரவே வராது ஏற்கனவே இருந்தாலும், முற்றிலும் நீங்கி விடும்.

  • வாய்வு தொல்லை நீங்க உடற்பயிற்சி
  • வயிறு உப்புசம் வாய்வு தொல்லை நீங்க வாய்வு முத்திரை
  • வாய்வு தொல்லை, வயிறு உப்புசம் வராமல் தடுக்க எளிய வழிகள்
  • ஏப்பம் தொல்லை நீங்க எளிய வழிகள்

Tamil Scan

All content and images published www.tamilscan.com for informational purposes only. Always seek the guidance of your doctor or other qualified health professional with any questions you may have regarding your health or a medical condition.

Tamil Scan
RELATED

Most Popular