மலச்சிக்கல் நிரந்தரமாக நீங்க எளிய வழிகள்

0

மலச்சிக்கல் ஏற்பட காரணம், மலச் சிக்கல் தீர்க்கும் உணவுகள், மற்றும் மலச் சிக்கல் நீங்க எளிய வழிகள் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.

மலச்சிக்கல் :

மனித வாழ்வில் மனச்சிக்கல் இருக்கின்றதோ, இல்லையோ, பலருக்கு  மலச்சிக்கல் கட்டாயம் இருக்கின்றது. ஒவ்வொரு வருக்கும் குடலின் செயல்பாடுகள் மாறுபடும்.

மலச்சிக்கல் தீர எளிய வழிகள்

வாழ்வில் எல்லாருக்கும் எப்பொழுதாவது மலச்சிக்கல் ஏற்படும். சிலருக்கு மலச்சிக்கல் நிரந்தரமாகி விடுகின்றது. குடலின் அமைப்பு மற்றும் நம் உணவு முறையும் இதற்கு காரணம் ஆகின்றது.

மலச்சிக்கல் காரணம்  :

நாம் சாப்பிட்ட உணவு செரிமானமாகி அதிலிருந்து உடலுக்கு சத்துக்கள் எடுக்கப்படுகின்றது.

தேவையான சத்துக்களை பிரித்தெடுத்த பிறகு மிஞ்சும் சக்கை கழிவாக பெருங்குடலுக்கு வந்து சேர்கின்றது.

பெருங்குடலில் தண்ணீர் உறிஞ்சப்பட்டு சக்கை வெளியேற்றப்படுகிறது.

குறைந்த நார்ச்சத்துள்ள உணவு சாப்பிடுவது, போதுமான அளவுக்கு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, உடல் உழைப்பின்மை. வாரத்தில் மூன்று நாட்களுக்கு குறையாமல் பயணம் செய்வது, வலியை குறைக்கும் (pain killer) மாத்திரைகள் சாப்பிடுவது, மாவுச்சத்து நிறைந்த ஜங்க் உணவுகளை உட்கொள்வது போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படும்.

பெருங்குடல், ஆசனவாய் இவற்றில் கோளாறு இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்படும்.

மலச்சிக்கல் நீங்க உணவுகள்

நொறுங்கத் தின்றால் நூறு வயசு என்பார்கள். உணவை உமிழ்நீருடன் கலந்து, சற்று பொறுமையாக, உணவை மென்று சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.

உலர் திராட்சை :

உலர்ந்த திராட்சையில், நார்ச்சத்து மற்றும் டார் டாரிக் அமிலம் உள்ளது. இது சிறந்த மல மிளக்கியாக செயல்படுகின்றது.

எனவே, தினசரி உலர் திராட்சை சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை தீரும். மேலும், இதில் நிறைய ஆன்டி  ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

புதினா :

புதினா மற்றும் இஞ்சி டீ மலச்சிக்கலைப் போக்க பெரிதும் உதவுகின்றது. இதில் உள்ள மலம் இழக்கும் தன்மை குடல் இயக்கத்தை மேம்படுத்தி, மலம் வெளியேறுவதை  எளிதாக்குகிறது.

மேலும் பசியை தூண்டுதல், ஜீரண மண்டலத்தை வலுப்படுத்துதல், சீரண சக்தியை அதிகரித்தல் போன்ற பல நன்மைகள் கிடைக்கின்றது.

கருப்பட்டி :

கருப்பட்டியை நீங்கள் உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். நாள்பட்ட அல்லது அவ்வப்போது ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்க வல்லது.

ஒரு டீஸ்பூன்  கருப்பட்டியை எடுத்து சூடான நீரில் கலந்து படுக்கைக்கு போவதற்கு குடிக்க வேண்டும். இது காலையில் எழுந்ததும் மலம் எளிதாக வெளியேற உதவும். இது இயற்கையானது. மேலும் ரொம்ப சுவையான இனிப்பும் கூட.

நெல்லிக்காய் :

தினமும் அரை டம்ளர் நெல்லிக்காய் சாற்றை குடித்துவர குடலிய நன்கு செயல்பட்டு மலச்சிக்கல் குணமாகும்.

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் இரவு உணவு முடித்த பிறகு அரை மணிக்கு பிறகு ஒரு ஸ்பூன்  சாப்பிட்டால் எப்பேர்ப்பட்ட மலச்சிக்கலுக்கும் தீர்வு கிடைக்கும்.

திரிபாலா பொடி :

அதே போல காலை வெறும் வயிற்றிலும் மாலை உணவுக்குப் பிறகும் திரிபலா பொடியை சாப்பிட்டு வந்தால் போதும் நிரந்தர தீர்வு கண்டிப்பாக  கிடைக்கும்.

வெங்காயம் :

சின்ன வெங்காயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

இத்தகைய சின்ன வெங்காயத்தை எண்ணெய் விட்டு வறுத்து ஒரு கையளவு சாதத்துடன் சேர்த்து சாப்பிட மலச்சிக்கல் நீங்கி வயிறு சுத்தமாகும்.

விளக்கெண்ணெய் :

இரண்டு சொட்டு விளக் கெண்ணெயை, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் கலந்து, இரவில் படுக்கும் முன்பு குடித்துவிட்டு தூங்க வேண்டும்.

இப்படி தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்கள் இரவில் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

தேன் :

ஒரு கப்  சூடான தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு  மற்றும் தேன் கலந்து குடித்தால் மலச்சிக்கல் தீரும்.

இது உலக அளவில் பயன்படுத்தப்படும் பிரபலமான தமிழ் மருத்துவம். இதனால் உடலில் கெட்ட கொழுப்புகளும் குறையும்..