பெருங்காயம் நன்மைகள், தீமைகள் மற்றும் பயன்கள்

0

பெருங்காயம் நன்மைகள், சாப்பிடும் முறை, பெருங்காய தூள் நன்மைகள் மற்றும் பெருங்காயம் தீமைகள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளது.

பெருங்காயம் :

பெருங்காயம் பல தலைமுறைகளாக உணவில் பயன்படுத்தப் படுகிறது. ருசிக்கு சாப்பிடுவதை விட, ஆரோக்கியத்திற்கு சாப்பிடுவது தான் சிறந்தது என்று நமது முன்னோர்கள் பலமுறை வலியுறுத்தி கூறியுள்ளனர்.

பெருங்காயம்

முன்னோர்களின் தலைமுறை இன்றைய ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது என்றால் அது மிகை ஆகாது

அப்படி உடல் ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய பொருள்களில் பெருஙகாயமும் ஓன்றாகும்.

பெருங்காயம் நன்மைகள் :

என்னதான் மனக்க மணக்க சமைத்தாலும் அதனுடன் பெருங்காயம் சேர்த்தால் தான் ருசி கூடும் என்று சொல்வார்கள்.

பெருங்காயம் நன்மைகள்

ஆனால், அந்தப் பெருங்காயம் மிகப் பெரிய அளவில் ஆரோக்கியம் தரும் என்கிறது ஆய்வுகள் முடிவு.

பெருங்காயம் நன்மைகள் பின்வருமாறு

நோய் எதிர்ப்பு சக்தி :

பொதுவாக ஒர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தாலே நோய்கள் அடிக்கடி வந்து பாடாய் படுத்துகிறது. காய்ச்சல வராமல் தடுக்க, உடலுக்கு தேவை வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் சக்தியாகும்.

பெருங்காயத்தில் இருக்கும் லக்டோபஸிலஸ்  எனும் நலம் பயக்கும் பாக்டீரியா  இந்த ஆற்றலை கொடுக்கின்றது.

அஜீரணம் :

கால் ஸ்பூன்  பெருங்காயத்தை நீரில் கலந்து குடிப்பதால் அஜீரண பிரச்சனைகள் தீருவது மட்டுமல்லாமல் அசிடிடி பிரச்சனையும் தீர்வாகும்.

கண்கள் :

பெருங்காயத்தில் இருக்கும் பீட்டா கரோட்டின், நமது கண்களை பராமரிக்க உதவி புரிவதோடு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. பெருங்காயத்தூளை தண்ணீரில் கலந்து குடிப்பதனால் கண் வறட்சி நீங்கி பிரகாசமாக தெரியும்.

மாதவிடாய் :

மாதவிடாய் பிரச்சனை இருக்கின்ற பெண்கள் பெருங்காயத்தை நீரில் கலந்து குடிப்பதால் அதிக ரத்தப்போக்கு, ரத்தப்போக்கின்மை, ஒழுங்கற்ற மாதவிடாய், கருப்பையில் நீர்க்கட்டி போன்ற உபாதைகள் உண்டாகாது.

வாயு :

பெருங்காயம் நரம்பு கோளாறுகளை நீக்குவதிலும் பயன்படுகின்றது. குறிப்பாக சிலருக்கு நெஞ்சு, முதுகு ஆகிய இடங்களில் வலி உண்டாகும்.

இது வாயுவால் உண்டாகும் வழியாகவும் இருக்கலாம். இந்த எலும்பு பகுதியில் இருக்கும் வாயுவை விரட்டி பலம் சேர்க்கவும் பெருங்காயம் உதவுகின்றது.

பெருங்காய பொடி நன்மைகள் :

பெருங்காய பொடியை சுடு தண்ணீரில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு.

பெருங்காய பொடி

இரத்த சர்க்கரை :

பெருங்காயம் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. பெருங்காயத்தை சுடுதண்ணீரில் கலந்து குடிப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதோடு சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு கணையத்தை தூண்டி இன்சுலின் சுரப்பை சரி செய்வதன் மூலம் சர்க்கரை நோய் வருவதையும் தடுக்கிறது.

சளி :

இவ்வாறு இளஞ்சூடான தண்ணீரில் பெருங்காயத்தை சேர்த்து குடிப்பதால் பெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருள் நுரையீரல் சுவாச மண்டலம் வழியாக மார்பு சளியை வெளியேற்றுகிறது.

நெஞ்சு சளியை இயற்கையாக வெளியேற்றும் குணம், பெருங்காயத்திற்கு உண்டு.

குடல் :

பெருங்காயத்தை சுடுதண்ணீரில் கலந்து குடிப்பதால், குடல் இயக்கம் சீராக நடைபெறும்.

காயங்கள் :

உடலுக்குள் இருக்கும் அனைத்து காயங்களையும் ஆற்றும் வலிமை, பெருங்காயத்திற்கு உண்டு.

ஆண்மை குறைவு :

ஆண்களின் ஆண்மை குறைவை குணப்படுத்த ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் பெருங்காயத்தை சுடுதண்ணீரில் கலந்து குடிக்க  வேண்டும்.

இரத்தம் உரைதல் :

மேலும், இவ்வாறு குடிப்பதால் பெருங்காயத்தில் உள்ள கோமரி என்ற பொருள் ரத்தத்தை மெலிவூட்டி ரத்த உரைதலைத் தடுக்கிறது. இதன் உறை எதிர்ப்புத் தன்மை மற்றும் குணப்படுத்தும் ஆற்றல் ரத்த கொழுப்பை குறைத்து உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

வயிற்று வலி :

கால் ஸ்பூன்  பெருங்காயத்தை, நீர்மோரில் கலந்து குடித்தால், கடுமையான வயிற்று வலி, உடனே குணமாகும்.

பெருங்காயம் தீமைகள் :

மனிதர்களில் பெறுங்காயம் தீமைகள் பற்றி குறைவான ஆராய்ச்சித் தகவல்கள் தான் உள்ளது என்றாலும் சிறிதளவு சமையலில் பயன்படுத்துவது எந்த வித தீமைகள் மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை.

இருப்பினும், அதிக அளவு பெருங்காயம் எடுத்துக் கொள்வது வயிற்றுப்போக்கு, பதட்டம், தலைவலி மற்றும் வயிறு உப்புசம் போன்ற உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன. பெருங்காயம் தீமைகள் சில பின்வருமாறு

குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பெருங்காயம் பாதுகாப்பானதா என்பது பற்றி போதுமான ஆய்வுத் தகவல்கள் இல்லை.

மேலும் பெருங்காயம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். என்பதால், இரத்த அழுத்த மருந்துகள் அல்லது இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் பெருங்காயத்தை மருத்துவர் ஆலோசனை பெற்று பயன்படுத்த வேண்டும்.

கவனம் :

இந்த கட்டுரையில் பொதுவாக சொல்லப்பட்ட மருத்துவ குறிப்புகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. மருத்துவர் அறிவுரை அல்லாமல் எதையும் மருந்தாக பயன் படுத்துவது நல்லது அல்ல.