விந்தணு எண்ணிக்கை அதிகரிக்க உணவுகள்

0

விந்தணு எண்ணிக்கை :

விந்து எண்ணிக்கை குறைவுக்கான காரணம், விந்து எண்ணிக்கை அதிகரிக்கும் பழங்கள், காய்கறிகள், கீரைகள், மற்றும் நட்ஸ் போன்ற உணவுகள் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.

ஆண்மை குறைபாடு விந்தணு குறைபாடு போன்ற ஆண்மை சம்பந்தமான பிரச்சினைகள் பெரும்பாலான நேரங்களில் நோயினால் ஏற்படுவதை விட ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் ஏற்படுகிறது.

பெரும்பாலான நேரங்களில் சத்தான உணவுகள் மூலமாகவே சரிசெய்யலாம்.

இன்னும் சிலருக்கு அதிகமான எண்ணிக்கையில் உயிரணுக்கள் இருந்தும்,  தரம் இல்லாததாக இருக்கும் இதன் காரணமாகவே குழந்தைபேறு தள்ளிப் போகும். இதையும்  சத்தான உணவு மூலமே சரி செய்ய முடியும்.

விந்தணு எண்ணிக்கை

விந்தணு எண்ணிக்கை குறைய காரணம் :

பெரும்பாலும் மரபு ரீதியாகவும், சமீபத்தில் ஏற்பட்ட நோயினாலும், புகையிலை மது போன்ற கெட்ட பழக்கத்தினாலும்,  சத்தான சரிவிகித  உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பதாலும், நரம்பு மண்டலங்கள் பலவீனமாக இருந்தாலும் உயிரணுக்கள் குறைவு, வீரியமற்ற உயிரணுக்கள், விந்து முந்துதல், விறைப்பின்மை போன்ற  ஆண்மை குறைவு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

புகை மது :

புகை மது போன்றவற்றில் உள்ள நிகோடின்,  ஆல்கஹால் போன்ற நச்சுப் பொருட்கள் இரத்தத்தில் கலந்து இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் குறைத்து உயிரணுக்களுக்கு தேவையா அளவு  ஆக்சிஜன் கிடைக்காமல் செய்கின்றன.

இது விந்து உற்பத்தியும் இந்துவின் சுறுசுறுப்பு தன்மையையும் பாதிக்கிறது.

மேலும் புகை மற்றும் மதுப் பழக்கங்கள் நரம்பு மண்டலத்தை சேதப்படுத்துவதால் விந்து முந்துதல் போன்ற பிரச்சினையும் கூடவே வருகிறது.

இந்த பிரச்சினைகளை தவிர்க்க புகை மற்றும் மது பழக்கத்தை அறவே கைவிட வேண்டும். இப்பழக்கங்களை விட்ட  ஒரு வாரத்திற்குள் பெரும்  மாற்றத்தை உணரலாம்.

விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும் உணவுகள்

வவிந்தனு எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள் பலவற்றை தேர்ந்தெடுத்து நம் வழக்கமான உணவுகளில் சேர்த்து கொள்வதன் மூலம் விந்தணு தரத்தையும் எண்ணிக்கையும் அதிகரிக்க முடியும்.

பாதாம் பருப்பு :

பாதாம் பருப்புகளின் சிங்க், மெக்னீசியம்,  பைபர்  போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் ஆண்மை அதிகரித்து நீண்ட நேர உடலுறவிற்கு  வழிவகை செய்கின்றன.

தினமும் பாதாம் பருப்பு எடுத்துக் கொள்வதால் விந்தணுக்களின் எண்ணிக்கையும்,  தரமும் அதிகரிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அக்ரூட் :

அக்ரூட் கொட்டைகள் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதத்தின் நல்ல மூலமாகும்.

விந்தணுக்களுக்கு உயிரணு சவ்வு உற்பத்தி செய்ய ஆரோக்கியமான கொழுப்பு தேவைப்படுகிறது.

இந்த ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் விந்தணுக்களுக்கு இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் விந்தணுக்களின் அளவை அதிகரிக்க உதவுகின்றன.

வால்நட்டில் உள்ள அர்ஜினைன் விந்தணுக்களின் எண்ணிக் கையை அதிகரிக்க பங்களிக்கிறது.

அக்ரூட் பருப்புகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரத்த ஓட்டத்தில் உள்ள நச்சுக்களை அகற்றவும் உதவுகின்றன.

பாதாம், பிஸ்தாமுந்திரிஅக்ரூட், போன்ற பருப்புகளுடன் பேரீச்சம் பழமும் சேர்த்து தினமும் இரு கையளவு தொடர்ந்து சாப்பிட்டு வர விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ஆரோக்கியம் மேம்படும்.

வேர்க்கடலை :

வேர்க்கடலையில் அதிக அளவு ஜின்க்  உள்ளது. விந்தணுக்களின்  எண்ணிக்கையை  அதிகரிக்கவும் தரத்தை உயர்த்தவும் ஜின்க் சத்து  இன்றியமையாததாகும்.

வெங்காயம் மற்றும் பூண்டு :

வெங்காயம் மற்றும் பூண்டு இவை இரண்டுமே ஆண்மை பெருக்கியாகவும் மற்றும் விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும் உணவுகள் பட்டியலில் முக்கியமானது.

வெங்காயம் மற்றும் பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்துவதோடு உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி நீண்ட நேரம் விரைப்புத் தன்மையுடன் செயல்பட வைக்கிறது.

டார்க் சாக்லேட் :

டார்க் சாக்லேட் என்பது எல்-அர்ஜினைன் எச்.சி.எல் எனப்படும் அமினோ அமிலத்தைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த பாலுணர்வைக் கொண்டுள்ளது.

இது விந்து அளவு மற்றும் விந்தணுக்களின் எண்ணிக் கையை அதிகரிக்கும் என்றும் புணர்ச்சியின் தீவிரத்தை மேம்படுத்துகிறது என்றும் அறியப்படுகிறது .

முட்டை :

விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும் உணவுகள் பட்டியலில் முட்டை முக்கியமானது.

முட்டையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது.  ஒரு முட்டையில் 6 கிராம் அளவிற்கு புரோட்டீனும்  விட்டமின் இ, ஜின்க்  போன்ற சத்துக்கள் உள்ளன.

தினமும் முட்டையை  உணவில் சேர்த்துக் கொள்வதால் விந்தணுக்களின்  உற்பத்தி யையும்,  தரத்தையும்  அதிகரிக்க முடியும்.

கீரை : 

ஃபோலிக் அமிலம் விந்தணுக்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு முக்கியமானதாகும்.

கீரைகள் ஃபோலிக் அமிலத்தின் வளமான மூலமாகும்.   மேலும் கீரை உங்கள் உணவில் சேர்க்க ஒரு சிறந்த துணை உணவு  ஆகும்.

கீரையில் உள்ள ஃபோலிக் அமிலத்தின் அளவு விந்தணுக்களில் உள்ள அசாதாரண விந்தணுக்களின் எண்ணிக் கையையும் குறைக்கிறது.

இதன் மூலம் விந்தணுக்கள் முட்டையில் வெற்றிகரமாக ஊடுருவு வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.  இந்த சத்துக்கள் இல்லாவிடில் விந்தணு அதிகம் பாதிக்கப்பட்டு தரமும் குறைந்து காணப்படும்.

விந்தணு எண்ணிக்கை அதிகரிக்க பழங்கள் :

விந்தணு எண்ணிக்கை அதிகரிக்க வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை அதிக அளவில் உண்பது நன்மை பயக்கும்.

ஆரஞ்சு பழம் :

ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு விட்டமின் சி சத்து உள்ளது. விட்டமின் சி சத்து விந்தணுக்களின்  சுறுசுறுப்பை  அதிகரிக்கிறது.

ஆண்கள் தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வர விந்தணுக்கள் ஆரோக்கியமானதாக இருக்கும்.

வாழைப்பழம் :

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, பி 1 மற்றும் சி போன்ற வைட்டமின்கள் உடல் ஆரோக்கியமான மற்றும் வலுவான விந்தணுக்களை உற்பத்தி செய்ய உதவுகின்றன.

விந்து எண்ணிக்கையும் இந்த வைட்டமின்களைப் பொறுத்தது. வாழைப்பழங்கள் இந்த வைட்டமின்கள் நிறைந்தவை மற்றும் ப்ரோம்லைன் எனப்படும் அரிய நொதியைக் கொண்டுள்ளன.

இந்த நொதி வீக்கத்தைத் தடுக்கிறது அத்துடன் உடல் விந்தணுக்களின் தரத்தையும் எண்ணிக்கையையும் மேம்படுத்த உதவுகிறது.

ஆண்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது உடல் விந்தணுக்களின் எண்ணிக் கையை அதிகரிக்கும்.

மாதுளம் பழம் :

மாதுளை  ஜூஸை தினமும் குடித்து வந்தால் விந்து கெட்டிப்படும் என்று சொல்கிறது ஒரு ஆய்வு.

மாதுளையில்  அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால் இது இரத்த ஓட்டத்தை சீராக்கி அதில் உள்ள அணுக்களை  தூண்டி விடுகிறது.

தக்காளி பழம் :

தக்காளியில் காணப்படும் லைக்கோபீன் என்னும் பொருள் விந்து அணுக்களின் எண்ணிக்கையும் தரத்தையும் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

தக்காளியை  பத்து நிமிடத்திற்கும் அதிகமாக சூடு செய்து தக்காளி சூப்பாக செய்து தினமும் குடித்து வருவதன் மூலம் லைகோபின் உடம்புக்கு கிடைத்து விந்தணு எண்ணிக்கையையும் தரத்தையும் உயர்த்துகிறது.