மாதுளம் பழம் நன்மை, தீமைகள், சத்துக்கள்

0

மாதுளம் பழம் பயன்கள், நன்மைகள், தீமைகள் மற்றும் மாதுளையில் உள்ள சத்துக்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

மாதுளம் பழம் :

மாதுளை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு பழம். பழத்தின் உள்ளே எண்ணற்ற விதைகள் காணப்படும். விதையை சுற்றிலும் மெல்லிய சதைப்பற்றுடன் காணப்படும்.

மாதுளம் பழம் (அ) மாதுளை

மாதுளம் பழத்தில் ஏராளமான ஊட்ட சத்துக்கள் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. அவைகளை பற்றி கீழே விவரிக்கப் பட்டுள்ளன.

மாதுளம் பழம் வரலாறு :

மாதுளை வரலாற்று முந்தைய காலத்திலிருந்து பயிரிடப் படும் பழ வகையாகும். எனினும் பெர்சியா மாதுளையின் பூர்வீகமாக சொல்லப்படுகிறது.

பெர்சியாவில் இருந்து அரபு நாடுகள் வழியாக ஆப்கனிஸ்தான், சைனா இந்தியா போன்ற நாடுகளுக்கு பரவியதாக சொல்லப்படுகிறது.

மாதுளை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகள் :

 உலக அளவில் இந்தியா மாதுளை உற்பத்தியில் உலகிலேயே முதலிடம் வகிக்கிறது.

அதற்கு அடுத்தபடியாக ஈரான் உள்ளது. துருக்கி, ஸ்பெயின், துனிசியா, மொராக்கோ, ஆப்கானிஸ்தான், சீனா, கிரீஸ், ஜப்பான், பிரான்ஸ், ஆர்மீனியா, சைப்ரஸ், எகிப்து, இத்தாலி மற்றும் பாலஸ்தீனம் போன்ற நாடுகளிலும் மாதுளை பயரிடப் படுகிறது.

மாதுளம் பழத்தின் பிற பெயர்கள்:

மாதுளம் பழத்தின் அறிவியல் பெயர் புனிகா கிராநட்டம் (punica granatum) ஆகும்.

இது ஆங்கிலத்தில் போம்க்ரானைட் (pomegranite) என்றும், ஹிந்தியில் அனார், அனார்டானா என்றும், தெலுங்கில் டனிம்மா பண்டு, டலிம்பா என்றும், கன்னடத்தில் டலிம்போ, டலிம்பாரி என்றும், மலையாளத்தில் மாதலநரங்கா, உரியன் பழம் என்றும் அழைக்கப்படுகிறது.

மாதுளம் பழத்தின் வகைகள் :

இந்தியாவில் அலந்தி அல்லது வாட்கி, தோல்கா, காந்தாரி, காபூல், மஸ்கதி ரெட், பேப்பர் ஷெல், ஸ்பானிஷ் ரூபி, கணேஷ் (ஜிபி I), ஜி 137, பி 23, பி 26, மிருதுலா, ஆரக்தா, ஜோதி, ரூபி, ஐஐஎச்ஆர் தேர்வு, யெர்காட் 1 மற்றும் கோ 1 போன்ற வகை மாதுளைகள் அதிக அளவில் பயிரிடப் படுகின்றன.

மாதுளையில் உள்ள சத்துக்கள் :

100 கிராம் மாதுளம் பழத்தில் 83 கலோரிகள் உள்ளன. அதில் 1.2 கிராம் கொழுப்பு, 1.7 கிராம் புரதம், 19 கிராம் மாவு சத்து மற்றும் 4 கிராம் நார்ச்சத்து அடங்கும்.

வைட்டமின்கள் :

மாதுளம் பழத்தில் உள்ள வைட்டமின்கள்

மாதுளம் பழம் 100 கிராமில் 10.2 மி.கி வைட்டமின் சி மற்றும் 0.60 மில்லி கிராம் வைட்டமின் இ மற்றும் 16.4 மைக்ரோ கிராம் வைட்டமின் கே உள்ளன.

தாதுச் சத்துக்கள்  :


மாதுளம் பழத்தில் உள்ள தாது சத்துக்கள்
100 கிராம் மாதுளம் பழத்தில் 0.30 மி.கி இரும்பு சத்து, 10.00 மி.கி கால்சியம் மற்றும் 236 மி.கி பொட்டாசியம் உள்ளது.

மாதுளம் பழம் நன்மைகள் :

மாதுளம் பழத்தில் ஊட்டச் சத்துக்கள் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளைக் அடங்கியுள்ளன.

மேலும் இது மாவு சத்து, வைட்டமின்கள் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றின் சிறந்த மூலமாகும்.

மாதுளம் பழத்தை தினமும் சாப்பிடுவது  நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு செரிமான மண்டலத்தையும் மேம்படுத்துகிறது.

மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

எலும்புகள் ஆரோக்கியம் :

மாதுளம் பழம் எலும்பு ஆரோக்கியத்தை இயற்கையாக மேம்படுத்த உதவுகிறது.

மாதுளம் பழத்தில் உள்ள ஃபிளாவனாய்டுகள் அதிக எலும்பு அடர்த்தி இழப்பதைத் தடுக்க  உதவுகிறது. .

எலும்புகள் அடர்த்தி இழப்பதன் காரணமாக, குருத்தெலும்பு சேதம் மற்றும் கீல்வாதம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

மேலும்  ‘ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன்’ இதழில்  வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு மாதுளை சாறு சாப்பிடுவது கீல்வாதம் உள்ளவர்களுக்கு மூட்டுகளில் சேதம் விளைவிக்கும் என்சைம்களைத் தடுக்க உதவும் என்று கூறுகிறது.

மன அழுத்தம் :

மாதுளை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைப்பதுடன் மன ரீதியிலான உளவியல் அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

குயின் மார்கரெட் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில், மாதுளை பழச்சாறு அருந்தியவர்களுக்கு கார்டிசோல் குறைந்த அளவு உள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது. கார்டிசோல் என்பது மன அழுத்தத்தின் போது அதிகரிக்கும் ஹார்மோன் ஆகும்.

நோய் எதிர்ப்பு சக்தி :

மாதுளையில் அழற்சி எதிர் பண்புகள் கொண்ட சேர்மங்கள் நிறைந்துள்ளன. இது முடக்கு வாதம் மற்றும் கீல்வாதம் போன்ற நோயெதிர்ப்பு தொடர்பான கோளாறுகளால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மிகவும் நல்லாதாகும்.மேலும் மாதுளையில் நிறைந்துள்ள வைட்டமின் சி  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.இதன் மூலம் பொதுவான நோய்கள் மற்றும் தொற்று நோய்களான காய்ச்சல், சளி போன்ற நோய்களுக்கு எதிராக போராட உடலுக்கு தேவையான சக்தியை அதிகரிக்கிறது.

கொழுப்பை குறைக்கிறது :

மாதுளையில் உள்ள புனிசிக் அமிலம் கொழுப்பு ட்ரை கிளிசரைடுகளை குறைக்கவும் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

இரத்த அழுத்தம் :

மாதுளை சாறு தினமும் எடுத்து கொள்வது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் இது குறிப்பாக  சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்துவதாக அறியப்படுகிறது.

செரிமான ஆரோக்கியம் :

மாதுளம் பழம் நார்ச்சத்தின்  சிறந்த மூலமாகும். ஆரோக்கியமான செரிமான அமைப்புக்கு நார்ச்சத்து மிகவும் அவசியம். 100 கிராம் மாதுளம் பழத்தில் 4 கிராம் நார் சத்து உள்ளது.

இதய ஆரோக்கியம் 

மாதுளை இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

பைட்டோ தெரபி ரிசர்ச் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பங்கேற்பாளர்களுக்கு தினமும் 150 மில்லி மாதுளை சாறு இரண்டு வாரங்களுக்கு கொடுக்கப் பட்டது.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர்களின் இரத்த அழுத்தம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்ததாக தெரிய வந்துள்ளது.

மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணங்களில் ஒன்று இரத்த அழுத்தம் ஆகும்.

கேன்சர் அபாயத்தை குறைக்கிறது :

மாதுளையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன.

இவை இரண்டும் ஃப்ரீ ரேடிக்கல்கள் ஏற்படுத்தும் செல் சேதத்தை குறைக்கிறது.

மேலும் மாதுளை புரோஸ்டேட், மார்பக, நுரையீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் வரும் அபாயத்தை குறைப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனினும் இதை முற்றிலும் உறுதி செய்யும் அளவிற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை.

வீக்கத்தை குறைக்கிறது :

மாதுளையில் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதில் அதிக அளவு ஆக்சினேற்றிகள் இருப்பதே இதற்கு காரணம்.

இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் பிரீ ரேடிகள்களால் ஏற்படும் சேதத்தைத் குறைக்கவும் உதவுகிறது.

சிறந்த பாலுணர்வூட்டி :

மாதுளம் பழச்சாறு இயற்கையான பாலுணர்வு ஊக்கியாக விளங்குகிறது.

ஆண் பெண் இரு பாலரும் குறைந்தது 15 நாட்கள் சாப்பிட்டு வர வித்தியாசம் நல்ல பலன் கிடைக்கும்.

விறைப்பின்மையை சரி செய்கிறது :

ஆணுறுப்புக்கு இரத்தம் ஓட்டத்தை அதிகரிக்க செய்து விறைப்புத்தன்மை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது

விந்து எண்ணிக்கையை அதிகரிக்கிறது :

மாதுளை ஆண்களின் விந்தணுக்களின் தரத்தையும் எண்ணிக்கையும் அதிகப் படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கருத்தரிப்பை தூண்டுகிறது :

திருமணமான பெண்கள் தினமும் வெறும் வயிற்றில் மாதுளை பழம் சாப்பிட்டு வர, விரைவாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மாதுளம் பழம் தீமைகள் :

சிலருக்கு மாதுளை சாறு ஒவ்வமையை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது.

அதிக அளவு சாப்பிட்டால் அரிப்பு, வீக்கம், மூக்கு ஒழுகுதல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்றவை ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.

மாதுளம் பழத்தில் உள்ள ஒரு வகை தனித்துவமான அமிலம் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை வழங்குகிறது என்று விலங்கு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மாதுளை விதைகள் ஆரோக்கியமற்றவை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், அதிக அளவு சாப்பிடுவது ஏற்கனவே நாள்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு குடல் தொடர்பான பிரச்சனைகளை உரு வாக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன.