கோரோனோ வைரசால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மருந்தாக அளிக்கப் படும் ரெம்டெசிவிர் மருந்து குறித்து சாமானிய மக்களுக்கு பல கேள்விகள் உள்ளன. அவற்றைப் பற்றி சுருக்கமாக பாப்போம்.
ரெம்டெசிவர் எப்போது தேவை:
ஆக்சிஜன் தேவை ஏற்படும் நோயாளிகளுக்கும், அறிகுறிகள் ஆரம்பித்து அவை தீவிரமான தொற்றாக நுரையீரலை பாதித்து சிடீ ஸ்கேனில் காண்பிக்கையில் அது மேலும் மோசமாகாத வண்ணம் காக்க ஆரம்ப கால கொரோனா தொற்றில் இந்த ரெம்டெசிவிர் மருந்து தேவையாகிறது.
ஆகவே, உங்களுக்கு மிதமான கொரோனா தொற்று ஏற்பட்டால் ரெம்டெசிவிர் அவசியமில்லை.
தீவிர தொற்று ஏற்பட்டு நுரையீரல் பெருமளவு பாதித்த நபர்களுக்கு ரெம்டெசிவிர், ரத்த நாள உறைதலை (Thrombosis) தடுக்கும் Low Molecular weight Heparin, உள்காயத்தை (Inflammation) குறைக்க உதவும் Steroids ஆகிய மூன்றும் சிறப்பான பங்களிப்பை அளிக்கிறது.
உங்களுக்கு ரெம்டெசிவிர் அவசியமா இல்லையா என்பதை உங்களது உள்காயத்தை அளவிடும் CRP, IL-6 அளவு மற்றும் நுரையீரல் CT ஸ்கேன் மற்றும் இதர சில அளவை பொறுத்து உங்கள் மருத்துவர் முடிவு செய்வார்.
மருத்துவரின் அறிவுரையை கடைபிடிக்கவும் :
மருத்துவர் கூறினால் ரெம்டெசிவிர் மருந்தை தவறாமல் பெற்றுக்கொள்ளவும்; வேண்டாம் என மறுக்க வேண்டாம்.
மருத்துவர் அவசியமில்லை; இது மிதமான கொரோனா பாதிப்பு மட்டுமே என கூறினால் ரெம்டெசிவிர் வேண்டும் என தொந்தரவு செய்ய வேண்டாம்.