கண் பார்வை திறனை மேம்படுத்தும் உணவுகள்

0

கண் ஆரோக்கியம் :

இன்றைய கலக்காட்டத்தில் டிவி லேப்டாப் மற்றும் மொபைல் போன்ற நவீன எலக்ட்ரானிக் பொருள்களை தொடர்ந்து இடை விடாமல் உபயோகப் படுத்துவதால் கண் பிரச்சனைகள் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இது தவிர வயது தொடர்பான கண் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்

கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது தற்போதைய காலத்தின் மிகவும் அவசியமான ஒன்றாகும். நாம் உண்ணும் உணவில் உள்ள பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் பலவிதமான கண் நோய்களைத் தடுக்க உதவுவதோடு, வயது தொடர்பான தசைச் சிதைவிலிருந்து பாதுக்காத்து கண் ஆரோக்கியத்தை உறுதி படுத்துகின்றன.

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள் :

கண் பார்வை மற்றும் கண் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அவசிமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைப் பற்றி காணலாம் .

நட்ஸ் வகைகள் :

பாதாம், ஆப்ரிகாட், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது கண்புரை மற்றும் முதுமை காரணமாக ஏற்படும் மாகுலர் சிதைவைத் தடுக்க உதவுகிறது.

 சோளம் :

சோளத்திக் லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் போன்ற கரோட்டினாய்டுகள் உள்ளன. இவை இரண்டும் கண் விழித்திரையில் காணப்படும் கரோட்டினாய்டுகள் உள்ளடக்கத்தில் சுமார் 70% ஆகும்.

அவை புற ஊதா  ஒளியால் கண்களில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. இதன் மூலம் மாகுலர் சிதைவு மற்றும் கண்புரை ஆகிய இரண்டின் அபாயத்தையும் குறைக்கிறது.

கிவி பழம் :

தினமும் குறைந்தது மூன்று கிவி பழங்களை சாப்பிடுவது மாகுலர் சிதைவை 30% குறைக்க உதவுவதாக ஆய்வில் சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் கிவியில் உள்ள அதிக அளவு லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின்  ஆகும்.

 திராட்சை :

திராட்சையில் உள்ள ரெஸ்வெராட்ரோல், எனும் தாவர சேர்மம் நீரிழிவு நோயினால் கண்களில் ஏற்படும் ரெட்டினோபதி குறைபாட்டைத் தடுக்க உதவகிறது.

கீரை :

கீரையில் ரிபோஃப்ளேவின் மற்றும் தியாமின் மற்றும் லுடீன், பீட்டா கரோட்டின், குளோரோபிலின் மற்றும் சாந்தீன் போன்ற ஆக்சிஜனேற்றிகள் நிறைந்துள்ளன.

அவை கண்கள், இருதய அமைப்பு மற்றும் நரம்பு மண்டலம் ஆரோக்கியத்தில் உதவுகின்றன.

கீரையில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் லுடீன் ஆகியவை கண் ஆரோக்கியத்தில் உதவுவதுடன், கண் அரிப்பு, கண் வறட்சி, அல்சர் போன்ற கண் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.

லுடீன் கண்புரையைத் தடுக்க உதவுகிறது. லுடீன் மற்றும் சாந்தீன் வயது மூப்பால் ஏற்படும் மாகுலர் சிதைவைத் தடுக்கவும் உதவுகின்றன.

ஆரஞ்சு :

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின்கள் ஏ மற்றும் ஆல்ஃபா கரோட்டின், பீட்டா கரோட்டின், பீட்டா கிரிப்டோக்சாந்தின், ஜியாக்சாண்டின், நார்ச்சத்து, பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் மற்றும் லுடீன் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன உள்ளன. இவை கண் ஆரோக்கியதை மேம்படுத்துவதில் உதவுகின்றன.

பச்சை பட்டாணி :

பச்சை பட்டாணியில் கண் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் நன்மை பயக்கும் வைட்டமின் ஏ ஃபிளாவனாய்டுகள், லுடீன், ஜியாக்சாந்தின் மற்றும் கரோட்டின்கள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கனிசமான அளவில் உள்ளன.

பப்பாளி :

பப்பாளி வைட்டமின்கள் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கனிசமான அளவில் உள்ளன. மேலும் இதில் உள்ள கரோட்டினாய்டுகள், லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின்கள் போன்றவை புற ஊதாக் கதிர்களால் கண்களின் விழித்திரையில் ஏற்படும் சேததிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் அவை கண்புரை, கிளைக்கோமா போன்ற பிற நாள்பட்ட கண் நோய்களில் இருந்தும் பாதுகாக்கின்றன.

தக்காளி :

தக்காளிப் பழத்தில் நிறைந்துள்ள லைகோபீன், லுடீன் மற்றும் பீட்டா – கரோட்டின் போன்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண்புரை மற்றும் வயது மூப்பினால் ஏற்படும் மாகுலர் டிஜெனரேஷன் (AMD) நிலைமையிலிருந்து கண்களைப் பாதுகாக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

கேரட் :

கேரட்டில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இது கல்லீரலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்பட்டு விழித்திரையில் ரோடாப்சினாக மாற்றப்படுகிறது, இதன் மூலம் பீட்டா கரோட்டின் மாகுலர் சிதைவு, மாலைக் கண் மற்றும்  கண்புரை ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு அழிக்கிறது.

ப்ரோக்கோலி :

ப்ரோக்கோலி மற்றும் சர்க்கரை வள்ளிக் கிழங்கில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது.

கடல் மீன்கள் :

கடல் மீன்கள் ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் சிறந்த மூலமாகும். இது கண்களின் காணப்படும் சிறிய இரத்த நாளங்களை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

மேலும் அவை கண்களில் உள்ள விழி திரவத்தின் பராமரிப்பில் உதவுகிறது மற்றும் உலர் கண் நோய்க்குறி மற்றும் கிளௌகோமாவை தடுக்கிறது.

பொதுவாக நாம் உண்ணும் சமச்சீரான உணவில் போதுமான அளவு வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற உடல் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கு அவசியமான உள்ளன.

எனவே, ஆரோக்கியமான கண்களுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெற, பல்வேறு வகையான உணவுகளுடன் மேல குறிப்பிட்ட உணவு வகைகளையும் சேர்த்து உட்கொள்வது அவசியம் ஆகும்.